மத்தேயு 20:31 ல் அவர்கள் பேசாதிருக்கும்படி ஜனங்கள் அவர்களை அதட்டினார்கள். அவர்களோ: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று அதிகமாய்க் கூப்பிட்டார்கள்.
ஜனங்கள் அதட்டினார்கள். ஆனால் குருடர்களோ அதிகமாய் கூப்பிட்டார்கள்.
நாம் எதை பேசினால் பிசாசு பயப்படுகிறானோ, அதை அதிகமாய் பேசும்போதே நமது கண்கள் திறக்கப்படுகின்றன.
ஜனங்கள் அதட்டுகிறார்கள் என்பதற்காக நாம் பேச வேண்டியதை பேசாமல் இருந்துவிட்டால், நாம் குருடாகவே வாழவேண்டியது தான்.
பிசாசு சிலுவையில் தோற்கடிக்கப்பட்டதையும், அவன் தலை சிலுவையில் நசுக்கப்பட்டதையும், அவன் வல்லமைகள் உரியப்பட்டதையும், நாம் பேசும் போதே பிசாசு பயப்படுகிறான், நமது கண்களும் திறக்கப்படும்.
இயேசு சிலுவையில் பெற்ற வெற்றிகளை நாம் பேசும்போதே, நமது வாழ்க்கையில் வெளிச்சம் உண்டாகிறது.
No comments:
Post a Comment