சங்கீதம் 91:15 ல் ... ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.
உன்னதமானவரின் மறைவில் வாழ்பவனின் ஆசீர்வாதம் தான் இது. ஆபத்தில் நானே நானே நானே.. என்னா ஆறுதலான வார்த்தை !
நமது ஆபத்தில் அவரே நம்மோடு இருக்கும் போது, நமக்கு வேறென்ன வேணும் ! எந்த ஆபத்தும் அவரை மீறி நம்மை தொட்டுவிடுமா !
நமக்கு எதிராக கோலியாத்தே வந்தாலும் அவன் காலியாத்தான் போவான்.
நமக்கு எதிராய் பார்வோனே வந்தாலும், இனி அவனால் ஃபார்வேடாக(forward) முடியாது.
நாம் நமது ஆபத்தில் யாரை பார்க்கிறோம் என்பதை பொறுத்தே நமது வெற்றி அமைகிறது.
No comments:
Post a Comment