Wednesday, 20 September 2023

உழைப்பாளியான ரூபவதி

"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…" - பிரசங்கி 9:10
 
செல்வமும், களியாட்டுகளும், புகழும், பெருமையும், பொருளாசையும் நிறைந்த இந்த உலகம் மிகவும் பெரிது. இதைப் பார்த்து மயங்கியவர்கள் கணக்கில் அடங்காதோர். இதன் மத்தியில் போராட்டங்கள், நிந்தைகள், அவமானங்கள் என சமுதாயத்தில் சோர்ந்து போய் நலிவுற்று பின்மாற்றம் அடைந்து எதை நோக்கி செல்கிறோம் என அறியாமல் திகைத்துப்போய் நிற்கின்ற பெண்கள் ஏராளம்! ஏராளம்! அவர்கள் மத்தியில் நீங்கள் ஒரு பூரணரூபவதியாய் விளங்க விரும்புகிறீர்களா? தொடர்ந்து வாசியுங்கள்.
 
ஆதியாகமம் 24ம் அதிகாரத்தில் ரெபெக்காள் என்ற பெண்மணியைக் குறித்து எழுதப்பட்டுள்ளது. அந்தப்பெண் மகாரூபவதியும், புருஷனை அறியாத கன்னிகையுமாய் இருந்தாள். அவள் துரவில் இறங்கி, தன் குடத்தை நிரப்பிக்கொண்டு ஏறிவந்தாள். இந்த ரெபெக்காள் ஆபிரகாமின் ஊழியக்காரருக்கு மறுபேச்சு ஒன்றும் பேசாமல் தன்னிடத்தில் இருந்த குடத்தை இறக்கி வைத்து ஊழியக்காரருக்கும், அவருடைய ஒட்டகங்களுக்கும் தண்ணீர் மொண்டு வார்த்தாள். இந்த இடத்தில் ரெபெக்காள் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுகிறாள். வேலைக்காரன் என்று தன் மனதில் அற்பமாய் எண்ணாமல் கனத்துடன் விசாரிப்பது, உபசரிப்பது இவற்றிலிருந்து ரெபெக்காளின் நற்குணங்களை நாம் அறியலாம். வேலைக்காரரின் கேள்விகளுக்கு ரெபெக்காளின் பதிலும் மிகுந்த தாழ்மையாகவே இருந்தது.
 
இன்று இருக்கின்ற பெண்களுக்கும் வாலிபப் பெண் பிள்ளைகளுக்கும் ஊக்கத்துடன் சவால் கொடுக்கும் பெண் ரெபெக்காள். இதை வாசிக்கிற நீங்கள் வாலிப சகோதரியாக இருக்கலாம். நான் அதிகமாய் படித்துள்ளேன். என் படிப்பிற்கு ஏற்ற வேலை இன்னும் கிடைக்கவில்லை. அதனால்தான் வீட்டில் சும்மா இருக்கிறேன் என்று சொல்லுகிறீர்களா? கவலை வேண்டாம். உங்கள் படிப்பிற்கு குறைந்த வேலை எதுவாக இருந்தாலும் அதில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். ஏற்றநேரம் வரும்வரை தேவனுடைய சித்தத்துக்கு அர்ப்பணித்து காத்திருங்கள். நம்முடைய வாழ்வில் ஆண்டவருக்குக் கீழ்ப்படிதல் இருக்கும் என்றால் ரெபெக்காளின் வாழ்க்கையை ஆசீர்வாதமாக மாற்றியவர் நிச்சயம் உங்களுடைய வாழ்வையும் மாற்றுவார்.

The toiling allure

"Whatever your hand finds to do, do it with all your might; . . ." - Ecclesiastes 9:10

This world is obsessed with wealth, luxuries, fame, pride and materialism. Countless people were mesmerized by this. In the midst of this, there are many women who are tired of the struggles, accusations, and insults in the society, and have become weak and backward, not knowing what they are going towards! Plenty are so! Do you want to be a perfectionist among them? Read on.

Genesis chapter 24 tells about a woman named Rebekah. That woman was extremely beautiful, a virgin who did not know her husband. She went down the hill and came up filling her jug. This Rebekah did not say a word to Abraham's servant when he asked for water but put down her jug and poured water for the servant and his camels. Rebekah is very active in this space. We can learn the virtues of Rebekah from these things, not considering being a servant in her mind, but caring and treating with dignity. Rebekah's response to the servant's questions was also very humble.

Rebekah is a woman who inspires and challenges women and adolescent girls today. You may be a teenage sister reading this. I have good education. Still haven't found a job suitable for my studies. That's why I'm idle at home? do not worry. Involve yourself in whatever small job you get. Remain dedicated to God's will until the time comes. If there is obedience to the Lord in our lives, the one who made Rebekah's life a blessing will surely change yours too.

Monday, 18 September 2023

அறிக்கையிட்டால் அற்புதம்

"நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்." - 1 யோவான் 1:9
 
ஒரு நாட்டின் இளவரசன் ஒவ்வொரு வருடமும் தன்னுடைய பிறந்தநாளன்று சிறைச்சாலைக்கு சென்று யாரையாவது ஒரு கைதியை விடுதலையாக்குவது வழக்கம்.  ஒரு தடவை அப்படி அவன் சிறைச்சாலைக்கு சென்று ஒவ்வொரு கைதியுடனும் சம்பாஷித்துக் கொண்டே வந்தான்.  ஏறக்குறைய எல்லா கைதிகளும் தாங்கள் நிரபராதி என்றும்,  தாங்கள் அநியாயமாக சிறையிலடைக்கப்பட்டு விட்டோம் என்றும் இளவரசனிடத்தில் முறையிட்டார்கள்.  ஆனால் ஒரு கைதி மாத்திரம் தான் குற்றவாளி என்றும் தனக்கு கிடைத்திருக்கும் தண்டனை நியாயமானதுதான் என்றும் இளவரசனிடத்தில் சொன்னான்.  இதைக் கேட்ட இளவரசன் தன்னுடைய குற்றத்தை உணர்ந்த இந்த கைதியை உடனே விடுதலை செய்யும்படியாகக்  கட்டளையிட்டான்.
 
நான் படித்துக் கொண்டிருந்த நாட்களில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் தேவமனிதர் மூலமாக நான் தொடப்பட்டேன்.  பின்பு என்னுடைய விடுதி அறைக்குச் சென்று என்னுடைய எல்லாப் பாவங்களையும் ஆண்டவரிடம் அறிக்கை செய்து, பாவமன்னிப்பின் நிச்சயத்தை பெற்றுக்கொண்டேன்.  மேலும் எனக்கு மேலே சொன்னப்பட்ட வசனம் இரட்சிப்பின் சந்தோஷத்தையும் கொடுத்தது.  ஆம், நமது இரட்சிப்பின் நிச்சயம் நமது உணர்ச்சிகளை சார்ந்திருப்பதை பார்க்கிலும் ஆண்டவரது வசனத்தின் மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருப்பது சிறந்தது.
 
ஆம்,  பிரியமானவர்களே! நாம் நம்முடைய பாவங்களை மறைக்காமல் அறிக்கையிடுவதில் உண்மையாயிருப்போம்.  தன் குறைவுகளை,  குற்றங்களை உணர்ந்து திரும்பி வந்த எவரையும் ஆண்டவர் புறம்பே தள்ளவில்லை.  பாவப்படுகுழியில் உழன்ற இளையகுமாரன், தன் தகப்பனிடத்திற்கு திரும்பி வந்து தன் பாவங்களை அறிக்கையிட்டபோது தகப்பன், பழைய காரியங்கள் எதையுமே சுட்டிக்காட்டாமல்,  அவன் இருந்த  வண்ணமாகவே அவனை ஏற்றுக் கொண்டார்.  நாமும் ஆண்டவரின் சமூகத்திற்கு மாய்மாலமாய் வராதபடி உண்மையாய் நம் குறைகளை அறிக்கையிட்டு குற்ற உணர்வற்ற அற்புதமான வாழ்வு வாழ்வோம்.


Confession leads to miracle

"If we confess our sins, he is faithful and just to forgive us our sins and to cleanse us from all unrighteousness." - 1 John 1:9

Every year on his birthday, the prince of a country used to go to the prison and set someone free. Once he went to the prison and talked to every inmate. Almost all the prisoners appealed to the prince .saying that they were innocent and that they had been imprisoned unjustly. But one prisoner told the prince that he was guilty and his punishment was just. Hearing this, the prince ordered to release that prisoner immediately because he realized his guilt and confessed.

I was touched by the spiritual preacher in a meeting held during my study days. Then I went to my hostel room and confessed all my sins to the Lord and received the assurance of forgiveness. And the above verse gave me the joy of salvation. Yes, it is better for the certainty of our salvation to be rooted on the word of the Lord than to depend on our emotions.

Yes, dear ones! Shall we be faithful in confessing our sins without hiding them. The Lord will not cast away anyone who comes back realizing his shortcomings and crimes. When the young son who ploughed through the pit of sin returned to his father and confessed his sins, the father accepted him as he was without pointing out any of the old sins. Let us also live a wonderful life without feeling guilty, by truthfully confessing our faults so that we do not come to the Lord's place hypocritically.

உலகம்


                    

1. உலகில் இதுவரை சுவிசேசம் அறிவிக்க படாத நாடுகளில் கிறிஸ்து பிரசங்கிக்க பட ஜனங்கள் ஏற்றுக்கொள்ள, இந்த பணியை அந்தந்த நாடுகளில் உள்ள சபைகள் இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ள ஜெபிப்போம்.

2. உலகில் மிகவும் அதிகாரம் மிக்க அமெரிக்க, ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, சீனா போன்ற நாடுகளின் தலைவர்கள் இரட்சிக்கபட ஜெபிப்போம்.

                 இந்தியா

3. இந்தியாவில் 500 மிசினரி இயக்கங்கள் 68,000 மிசினரிகள் இருக்கிறார்கள். இன்னும் இந்தியா சந்திக்க பட வில்லை. இன்னும் ஊழியர்களும் இயக்கங்களும் அதிகரிக்க எல்லா மக்கள் கூட்டங்களும் சந்திக்க பட ஜெபிப்போம்.

4. இந்தியாவில் 8.6சதவீதம் மலைவாழ் மக்கள் இருக்கிறார்கள் அவர்கள் எல்லோருக்கும் நற்செய்தி அறிவிக்க பட அவர்கள் ஏற்றுக்கொள்ள ஆலயங்கள் எழும்ப ஜெபிப்போம்.

5. இந்தியா நற்செய்திக்கு எதிராகவும் ஊழியர்களை துன்பப்படுத்துவதில் குறிப்பிட்ட இடத்திலும் இருக்கிறது. இந்தியா தேவனை அறிந்து கொள்ள ஜெபிப்போம்.

                தமிழ்நாடு

6. தமிழக திருச்சபைகளின் போதகர்கள் பரிசுத்தம் விசுவாசம் நற்செய்தி பணி என்று மாறி விடவும் தங்களது விசுவாசிகளை அப்படி பழக்கி விடவும் ஜெபிப்போம்.

7. தமிழக விசுவாசிகள் மத்தியில் தேவனை தேடுகிற உணர்வை தேவனுக்கு பயப்படும் பயத்தை பரிசுத்த ஆவியானவர் கொடுக்க ஜெபிப்போம்.

8. தமிழகத்தில் மீண்டும் ஒருமுறை பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்பட எழுப்புதல் உருவாகிட ஜெபிப்போம்.
  
                       இயக்கம்

9. இயக்கத்தினர் அனைவரும் தனித்தாள் ஆத்தும ஆதாயம், அருகில் உள்ளோரை ஆண்டவரிடத்தில் நடத்துவது, மற்றும் மிசினரி ஊழியம் என்ற அடிப்படையில் மாறி விட ஜெபிப்போம்.

10. எழுப்புதல் என்றால் என்ன என்பதை மக்களிடத்தில் புரியவைக்கவும் அதற்காக காத்திருக்கவும் அதற்காக ஜெபிக்கவும் மக்களை தயார் படுத்த ஜெபிப்போம்.

         

Thursday, 3 June 2021

கிருபை புரிந்தெனை ஆள் நீ பரனே

 

கிருபை புரிந்தெனை ஆள் – நீ பரனே!

கிருபை புரிந்தெனை ஆள் – நிதம்

1. திரு அருள் நீடுமெய்ஞ்ஞான திரித்து,
வரில்நரனாகிய மா துவின் வித்து! – கிருபை புரிந்தெனை

2. பண்ணின பபாவமெலாம் அகல்வித்து,
நிண்ணயமாய் மிகவுந் தயை வைத்து – கிருபை புரிந்தெனை

3. தந்திரவான்கடியின் சிறைமீட்டு,
எந்தை, மகிழ்ந்துன்றன் அன்புபாராட்டு – கிருபை புரிந்தெனை

4. தீமை உறும் பல ஆசையை நீக்கிச்
சாமி! என்னை உமக்காலயம் ஆக்கி – கிருபை புரிந்தெனை

5. தொல்வினையால் வரும் சாபம் ஒழித்து
நல்வினையே செய் திராணி அளித்து – கிருபை புரிந்தெனை

6. அம்பரமீதுறை வானவர் போற்ற
கெம்பீரமாய் விசுவாசிகள் ஏத்த – கிருபை புரிந்தெனை

Monday, 28 September 2020

1நாளாகமம் 28,29 அதிகாரங்கள் மற்றும் ரோமர் 8 வது அதிகாரம் வேத வினா விடை

 வேதப்பகுதி : 1நாளாகமம் 28,29  அதிகாரங்கள் மற்றும் ரோமர் 8வது அதிகாரம்

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥


 🖍🖍 கேள்விகள்.


✍️✍️1. நாம் தேவனை எப்படி சேவிக்க வேண்டும்❓


✍️✍️2. எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறவர் யார் ❓


✍️✍️3. நீ அவரைத் தேடினால் உனக்குத் ➖➖➖➖➖➖; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் ➖➖➖➖➖➖.


✍️✍️4. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, சதாகாலங்களிலும் தேவரீருக்கு ➖➖➖➖➖➖ உண்டாவதாக.


✍️✍️5. கர்த்தாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் ➖➖➖➖➖➖.


✍️✍️6. கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் ➖➖➖➖➖➖.


✍️✍️7. கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் ➖➖➖➖➖➖, ஆவியானது நீதியினிமித்தம் ➖➖➖➖➖➖ இருக்கும்.


✍️✍️8. மாம்சத்தின்படி பிழைப்பதற்கு நாம் மாம்சத்துக்குக் ➖➖➖➖➖➖.


✍️✍️9. மாம்சத்தின்படி பிழைத்தால் ➖➖➖➖➖➖; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் ➖➖➖➖➖➖.


✍️✍️10. எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய ➖➖➖➖➖➖.

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

✍️✍️  என் தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக..! ஆமென்..! அல்லேலூயா..!✍️✍️

Thursday, 24 September 2020

நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது

பல நன்மை செய்த இயேசுவுக்கே

நன்றி நன்றி நன்றி என்று

சொல்லி நான் துதிப்பேன்

நாள் தோறும் போற்றுவேன்

- நன்றி


1. எத்தனையோ நன்மைகளை என் வாழ்வில்

செய்தாரே ஏராளமாய் நன்றி சொல்வேன்

அத்தனையும் நினைத்து நினைத்து

நான் துதிப்பேன் ஆண்டவரை போற்றுவேன்

- நன்றி


2. மரண பள்ளத்தாக்கில் நான் நடக்கும்

போதெல்லாம் பாதுகாத்தீர் ஐயா

மீண்டும் ஜீவனை கொடுத்து

நீர் என்னை வாழ வைத்தீர் ஐயா

- நன்றி


3. தேவன் அருளிய சொல்லி முடியாத

ஈவுகளுக்காய் ஸ்தோத்திரம்

அளவில்லாத அவரின் கிருபைகளுக்காய்

ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம்

- நன்றி

உழைப்பாளியான ரூபவதி

"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…" - பிரசங்கி 9:10   செல்வமும், களியாட்டுகளும், புகழும், பெருமைய...