Wednesday, 24 May 2017

Sthothiram Seivenae lyrics - ஸ்தோத்திரம் செய்வேனே இரட்சகனை Tamil Christian Song

ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை - 3
                                          ஸ்தோதிரம் செய்வேனே

பாத்திரமாக இம்மாத்திரம் கருணை வைத்த - 2
பாத்திரனை யூத கோத்திரனை -  என்றும்
         
                                            ஸ்தோதிரம் செய்வேனே         

அன்னை மரிசுதனை
புல்மீது அமிழ்ந்துக் கழுதவனை - 3
முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை - 2
முன்னுரை நூற்படி இந்நிலத்துற்றோனை

                                            ஸ்தோதிரம் செய்வேனே

செம்பொன்னுருவானைத்
தேசிகர்கள் தேடும் குரவானை - 3
அம்பரமேவிய உம்பர் கணத்தோடு - 2
அன்பு பெற நின்று பைம்பொன் மலர் துவி

                                            ஸ்தோதிரம் செய்வேனே

கந்தை பொதிந்தவனை
வானோர்களும் வந்தடி பணிபவனை - 3
மந்தையர்கானந்த மாட்சியளித் தோனை - 2
வான பரன் என்னும் ஞான குருவானை


                                           ஸ்தோதிரம் செய்வேனே

No comments:

Post a Comment

உழைப்பாளியான ரூபவதி

"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…" - பிரசங்கி 9:10   செல்வமும், களியாட்டுகளும், புகழும், பெருமைய...