"நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்." - 1 யோவான் 1:9
ஒரு நாட்டின் இளவரசன் ஒவ்வொரு வருடமும் தன்னுடைய பிறந்தநாளன்று சிறைச்சாலைக்கு சென்று யாரையாவது ஒரு கைதியை விடுதலையாக்குவது வழக்கம். ஒரு தடவை அப்படி அவன் சிறைச்சாலைக்கு சென்று ஒவ்வொரு கைதியுடனும் சம்பாஷித்துக் கொண்டே வந்தான். ஏறக்குறைய எல்லா கைதிகளும் தாங்கள் நிரபராதி என்றும், தாங்கள் அநியாயமாக சிறையிலடைக்கப்பட்டு விட்டோம் என்றும் இளவரசனிடத்தில் முறையிட்டார்கள். ஆனால் ஒரு கைதி மாத்திரம் தான் குற்றவாளி என்றும் தனக்கு கிடைத்திருக்கும் தண்டனை நியாயமானதுதான் என்றும் இளவரசனிடத்தில் சொன்னான். இதைக் கேட்ட இளவரசன் தன்னுடைய குற்றத்தை உணர்ந்த இந்த கைதியை உடனே விடுதலை செய்யும்படியாகக் கட்டளையிட்டான்.
நான் படித்துக் கொண்டிருந்த நாட்களில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் தேவமனிதர் மூலமாக நான் தொடப்பட்டேன். பின்பு என்னுடைய விடுதி அறைக்குச் சென்று என்னுடைய எல்லாப் பாவங்களையும் ஆண்டவரிடம் அறிக்கை செய்து, பாவமன்னிப்பின் நிச்சயத்தை பெற்றுக்கொண்டேன். மேலும் எனக்கு மேலே சொன்னப்பட்ட வசனம் இரட்சிப்பின் சந்தோஷத்தையும் கொடுத்தது. ஆம், நமது இரட்சிப்பின் நிச்சயம் நமது உணர்ச்சிகளை சார்ந்திருப்பதை பார்க்கிலும் ஆண்டவரது வசனத்தின் மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருப்பது சிறந்தது.
ஆம், பிரியமானவர்களே! நாம் நம்முடைய பாவங்களை மறைக்காமல் அறிக்கையிடுவதில் உண்மையாயிருப்போம். தன் குறைவுகளை, குற்றங்களை உணர்ந்து திரும்பி வந்த எவரையும் ஆண்டவர் புறம்பே தள்ளவில்லை. பாவப்படுகுழியில் உழன்ற இளையகுமாரன், தன் தகப்பனிடத்திற்கு திரும்பி வந்து தன் பாவங்களை அறிக்கையிட்டபோது தகப்பன், பழைய காரியங்கள் எதையுமே சுட்டிக்காட்டாமல், அவன் இருந்த வண்ணமாகவே அவனை ஏற்றுக் கொண்டார். நாமும் ஆண்டவரின் சமூகத்திற்கு மாய்மாலமாய் வராதபடி உண்மையாய் நம் குறைகளை அறிக்கையிட்டு குற்ற உணர்வற்ற அற்புதமான வாழ்வு வாழ்வோம்.
Confession leads to miracle
"If we confess our sins, he is faithful and just to forgive us our sins and to cleanse us from all unrighteousness." - 1 John 1:9
Every year on his birthday, the prince of a country used to go to the prison and set someone free. Once he went to the prison and talked to every inmate. Almost all the prisoners appealed to the prince .saying that they were innocent and that they had been imprisoned unjustly. But one prisoner told the prince that he was guilty and his punishment was just. Hearing this, the prince ordered to release that prisoner immediately because he realized his guilt and confessed.
I was touched by the spiritual preacher in a meeting held during my study days. Then I went to my hostel room and confessed all my sins to the Lord and received the assurance of forgiveness. And the above verse gave me the joy of salvation. Yes, it is better for the certainty of our salvation to be rooted on the word of the Lord than to depend on our emotions.
Yes, dear ones! Shall we be faithful in confessing our sins without hiding them. The Lord will not cast away anyone who comes back realizing his shortcomings and crimes. When the young son who ploughed through the pit of sin returned to his father and confessed his sins, the father accepted him as he was without pointing out any of the old sins. Let us also live a wonderful life without feeling guilty, by truthfully confessing our faults so that we do not come to the Lord's place hypocritically.
No comments:
Post a Comment