Friday, 17 March 2017

கேளுங்கள் தரப்படும்

கர்த்தர் சொல்லும் வார்த்தையை கேட்கவேண்டும் அப்போதுதான் கிடைக்கும்


கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் பாடல் 




கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு 
தேடுங்கள் கிடைக்குமென்றார் 
பெத்லேகேம் நகரில் மாட்டு தொழுவமதில் பிறந்தார் பரமப்பிதா
சூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் ஏசுப்பிதா (2) -கேளுங்கள்

ஆறுவயதினில் ஆரம்ப பள்ளியில் கல்வி பயின்றாரே 
ஆகமங்கள் ஐம்பதாறினையும் ஐயம் தீர உணர்ந்தார்  
இயற்கை உலகமே தூய்மையானதென இயேசு நினைத்தாரே 
எல்லா உயிரையும் தன் உயிர் எனவே பேசி மகிழ்ந்தாரே (2) -கேளுங்கள்

ஜெருசலேம் நகரில் பஸ்கா பண்டிகைக்கு பரமர் போனாரே  (2) 
பனிரெண்டு வயது நிரம்பிய இயேசு கேள்விகள் கேட்டாரே
இயேசுவின் கேள்வியில் ஆலய குருக்கள் ஆனந்தம் ஆனாரே 
இளமை செய்த திறமையில் பஸ்கா பெருமையை வளர்த்தாரே  (2) 
இளமை பருவமதில் எளிமை வாழ்க்கையில் இருப்பிடம் ஆனாரே 
இந்த வேளையில் இயேசுவின் தந்தை சூசையும் மறைந்தாரே -கேளுங்கள்

தந்தையார் செய்த தச்சு தொழிலையே தனயனும் செய்தாரே 
தங்க உழவர்கள் உளிதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே 
நிலங்களை உழுவது போல் உள்ளத்தை உழுங்கள் என்று உலகப்பிதா  சொன்னபோது உழவர்கள் தொழிலாளர் ஊராரின் 
எண்ணமதில் இயேசு ஒன்றாக பதிந்து விட்டார் -இயேசு 
ஒன்றாக பதிந்து விட்டார்
அன்பு குழந்தைகள் அருகில் இருப்பதே ஆண்டவன் தொண்டு என்றார்-இயேசு 
ஆண்டவன் தொண்டு என்றார்

முப்பதாம் வயதினில் யோர்தான் ஆற்றங்கரையினில் சென்றாரே 
யோவான்  என்ற ஞானியின் அன்பில் நோன்புகள் ஏற்றாரே 
ஞானஸ்தானமும் பெற்றாரே 
துன்பத்தை அகற்றி இன்பமாய் வாழ வழி பல சொன்னாரே (2)
இயேசு நண்பனாம் யூதாஸ் நன்றியை மறந்து காட்டிக் கொடுத்தானே 
முப்பது காசுக்காகவே காட்டிக் கொடுத்தானே.

ஜனகரீம் என்ற நீதி மன்றத்தில் இயேசு நின்றாரே 
தெய்வ நிந்தனை செய்பவர் என்ற பழியை சுமந்தாரே (2)
சிகப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே
இயேசுவை சிலுவையில் அறைந்தாரே -கேளுங்கள்

Thursday, 2 March 2017

Bible

8 இதோ, அது வந்தது, அது சம்பவித்தது என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார், நான் சொன்ன நாள் இதுவே.

26. எசேக்கியல் 39 : 8

Wednesday, 1 March 2017

Bible

உங்களை நிந்திக்கிறவற்களுக்காக ஜெபம் பண்ணுங்கள்        ( லூக்கா : 6.28)  

உழைப்பாளியான ரூபவதி

"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…" - பிரசங்கி 9:10   செல்வமும், களியாட்டுகளும், புகழும், பெருமைய...