Friday, 9 February 2018

திரி முதல் கிருபாசனனே

எழுதியவர் : தஞ்சை சத்தியநாதன்
சங்கராபரணம்
தாளம் : ஆதிதாளம்

1.
திரி முதல் கிருபாசனனே, சரணம்!
ஜெக தல ரட்சக தேவா, சரணம்!
தினம் அனுதினம் சரணம் - கடாட்சி!
தினம் அனுதினம் சரணம் - சருவேசா!

2.
நலம் வளர் ஏக திரித்துவா, சரணம்!
நமஸ்கரி உம்பர்கள் நாதா, சரணம்
நம்பினேன் இது தருணம் - தருணம்
நம்பினேன், தினம் சரணம் - சருவேசா!

3.
அருவுருவே, அருளரசே, சரணம்!
அன்று மின்று மென்றும் உள்ளாய் சரணம்!
அதிகுணனே தருணம் - கிரணமொளிர்
அருள் வடிவே சரணம் - சருவேசா!

4.
உலகிட மேவிய உனதா, சரணம்
ஓர் கிருபாசன ஒளியே, சரணம்!
ஒளி அருள்வாய், தருணம் - மனுவோர்க்-கு
உத்தமனே, சரணம் - சருவேசா!

5.
நித்திய தோத்திர நிமலா, சரணம்!
நிதி இஸ்ரவேலரின் அதிபதி, சரணம்!
நாதா, இது தருணம் - கிருபைக்கொரு
ஆதாரா சரணம் - சருவேசா!


No comments:

Post a Comment

உழைப்பாளியான ரூபவதி

"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…" - பிரசங்கி 9:10   செல்வமும், களியாட்டுகளும், புகழும், பெருமைய...