Friday, 24 November 2017

மகாத்மா காந்தியின் வழக்கை வாரலாறு


‘மகாத்மா காந்தி’ என்று அன்புடன் அழைக்கப்படும் “மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி” இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். ‘சத்தியாகிரகம்’ என்றழைக்கப்பட்ட இவரது அறவழி போராட்டம் இந்திய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இந்திய நாடு விடுதலைப் பெறவும் முக்கியக் காரணமாகவும் அமைந்தது. இதனால், இவர் “விடுதலைப் பெற்ற இந்தியாவின் தந்தை” என இந்திய மக்களால் போற்றப்பட்டார். “அகிம்சை” என்னும் வன்முறையற்ற மாபெரும் மந்திரத்தை உலகத்திற்கு வித்திட்ட உன்னத மனிதர். இந்தியாவின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தி, விடுதலைக்குக் காரணமாக இருந்ததால், இவருடைய தியாகத்தை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் இவருடைய பிறந்தநாளான அக்டோபர் 02 ஆம் தேதியை “காந்தி ஜெயந்தியாக” உலகம் முழுவதும் கொண்டாடுகிறோம். தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் பாரத நாட்டிற்காகவே அர்பணித்த மாபெரும் மனிதர் மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு மற்றும் தியாகங்களை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: அக்டோபர் 02, 1869
இடம்: போர்பந்தர், குஜராத் மாநிலம், இந்தியா
பணி: இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல் தலைவர் 
இறப்பு: ஜனவரி 30, 1948
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், 1869  ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 02  ஆம் நாள், இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள “போர்பந்தர்” என்ற இடத்தில் கரம்சாந்த் காந்திக்கும், புத்திலிபாய்க்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய தாய்மொழி குஜராத்தி ஆகும். மேலும் அவருடைய தந்தை கரம்சாந்த் காந்தி, போர்பந்தரில் ஒரு திவானாக பணியாற்றி வந்தார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், பள்ளியில் படிக்கும்போதே நேர்மையான மாணவனாக விளங்கினார். தன்னுடைய 13 ஆம் வயதிலேயே கஸ்தூரிபாயை திருமணம் செய்துகொண்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், பதினெட்டு வயதில் ‘பாரிஸ்டர்’ எனப்படும் வழக்கறிஞர் கல்விக்காக இங்கிலாந்து சென்றார். தன்னுடைய வழக்கறிஞர் கல்வியை வெற்றிகரமாக முடித்து, பாரதம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
இந்திய விடுதலைப் போராட்டதில் ஈடுபடக் காரணம்
பம்பாய் மற்றும் ராஜ்கோட்டில் சிறிதுகாலம் பணியாற்றிய மகாத்மா காந்தி அவர்கள், 1893 ஆம் ஆண்டு ஒரு இந்திய நிறுவனத்தின் உதவியால் தென் ஆப்பிரிக்காவில் பணிபுரிய பயணம் ஆனார். அன்றுவரை அரசியல் ஈடுபாடின்றி இருந்த காந்தியின் மனதில் அந்தப் பயணம் அவருக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாகவும் மாற்றியது. குறிப்பாக தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரிலுள்ள நீதிமன்றத்தில் தலைப்பாகை அணிந்து வாதாடக்கூடாது எனப் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வும், ஒரு நாள் பிரிட்டோரியா செல்வதற்காக, இரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்தபோது, ‘வெள்ளையர் இல்லை’ என்ற காரணத்தால் பயணம் செய்ய மறுக்கப்பட்ட நிகழ்வும், அவருடைய மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், தென்னாப்ப்ரிக்காவில் கறுப்பின மக்கள் படும் இன்னலுக்கும், அங்கு குடியேறிய இந்திய மக்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி, 1894 ஆம் ஆண்டு இந்திய காங்கிரஸ் என்ற கட்சியினை தொடங்கி, அதற்கு அவரே பொறுப்பாளரானார். பிறகு 1906 ஆம் ஆண்டு ஜோகர்ன்ஸ்பர்க் என்ற இடத்தில், அகிம்சை வழியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு, கைது செய்யப்பட்டு பலமுறை சிறை சென்றார். இவ்வாறு அகிம்சை வழியில் தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்திய மக்களின் பிரச்சனையில் வெற்றிக் கண்ட மகாத்மா காந்தி, இந்தியா திரும்பியதும், கோபாலகிருஷ்ண கோகலே மற்றும் ரவீந்திரநாத் தாகூர் போன்ற பெரும் அரசியல் தலைவர்களின் நட்பு ஏற்பட காரணமாக அமைந்தது.
இந்திய விடுதலைப் போராட்டதில் காந்தியின் பங்கு
இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல 1885 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் திவீரமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், 1921 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகவும் தேர்தெடுக்கப்பட்டார். ரவ்லத் சட்டம் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு குரல்கொடுக்கவும், 1919 இந்திய அரசு சட்டத்தில் இந்தியருக்கு வழங்கப்பட்டிருந்த குறைவான அதிகாரங்களை ஏற்க மறுத்தலை வெளிக்காட்டவும், காந்தி ஒத்துழையாமையை இயக்கத்தினை 1922  ஆம் ஆண்டு தொடங்கினார். மாணவர்கள் கல்லூரிக்குச் செல்லாமல் இருப்பது, வழக்கறிஞர்கள் நீதி மன்றத்திற்கு செல்லாமல் இருப்பது, பிரிட்டிஷ்காரர்கள் தயாரிக்கப்பட்ட துணி மற்றும் பொருட்களை புறக்கணித்தல் என பெரும் தாக்கத்தை இந்தியா முழுவதும் ஏற்படுத்தியது. இளையத் தலைமுறை மற்றும் தேசியவாதிகளிடையே இந்த இயக்கம் பெரும் ஆதரவைப் பெற்றது மட்டுமல்லாமல், ஒத்துழையாமை இயக்கத்தின் வெற்றியால், காந்தி இந்திய தேசிய காங்கிரஸின் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்தார். பின்னர் 1922 ல் உத்திரபிரதேசத்தில் சௌரி சௌரா என்ற இடத்தில் நடந்த நிகழ்வினால் இவ்வியக்கம் கைவிடப்பட்டது.
காந்தியின் தண்டி யாத்திரை
1930 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு உப்புக்கு வரி விதித்தது. ஆனால், இதனை ஏற்க மறுத்த காந்தியடிகள், ‘தன்னுடைய நாட்டில் விளைந்த பொருளுக்கு அன்னியர் வரி விதிப்பதா?’ எனக் கருதி, சத்தியாகிர முறையில் இதை எதிர்க்க முடிவு செய்து, 1930 மார்ச் 02 தேதி அகமதாபாத்திலிருந்து சுமார் 240 மைல் தூரத்தில் இருந்த தண்டியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டார். இறுதியில் 23 நாள் பயணத்திற்குப் பிறகு தண்டியை வந்தடைந்த அவர், அங்கிருந்த கடல் நீரில் உப்பு காய்ச்சி ஆங்கில சட்டத்திற்கு எதிராக அதை விநியோகித்தார். இந்த நிகழ்வு இந்தியாவில் பல இடங்களில் பரவியது மட்டுமல்லாமல், போராட்டம் தீவிரம் அடைந்து காந்தி உட்பட பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், போராட்டம் தீவிரம் அடைவதைக் கண்ட ஆங்கில அரசு, வேறு வழியில்லாமல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் விதித்த உப்புவரியை திரும்பப் பெற்று கொண்டனர். ‘உப்பு சத்தியாகிரகம்’ என்ற இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என கூறலாம்.
வெள்ளையனே வெளியேறு இயக்கம்
1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஆங்கில அரசுக்கு எதிராக ‘ஆகஸ்ட் புரட்சி’ என அழைக்கப்படும் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தினை காந்தி தொடங்கி வைத்தார். காந்தியின் மன உறுதியையும், அகிம்சை பலத்தையும் கண்ட ஆங்கில அரசு திகைத்தது. இறுதியில் காந்தியின் இடைவிடாத போராட்டத்தால், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்திய சுதந்திரப் பிரகடனம் அரங்கேறியது. ஆனால், இந்திய – பாகிஸ்தான் பிரிவினை காந்தியை பெரிதும் பாதித்தது.
இறப்பு
அகிம்சை என்னும் வார்த்தைக்கு அர்த்தம் சொன்ன மகாத்மா காந்தி அவர்கள், 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் (அதாவது இந்தியா சுதந்திரம் அடைந்த அடுத்த ஆண்டே) புது தில்லியில் நாதுராம் கோட்சே என்னும் கொடியவனால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஆங்கில ஆட்சிக்கு எதிராகவும், இந்திய விடுதலைக்காகவும் அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு, உப்பு சத்தியாகிரகம், வரி கொடா இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என பலப் போராட்டங்களை அறவழியில் முன்னெடுத்து நடத்தி, துப்பாக்கி ஏந்தி தன்னுடைய முரட்டுக்கரங்களால் அடக்கி ஒடுக்கிய வெள்ளையர்களை திகைக்கச் செய்தவர். பாரத நாட்டிற்காக தன்னுடைய உயிரையும் காணிக்கையாக்கிய மகாத்மாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் போராட்டங்கள் உலக சரித்திரத்தில் எழுதப்பட்ட அழியா சுவடுகள் ஆகும்.
 

Thursday, 10 August 2017

சுவிசேஷத்தைக் கேள்விப்படாதவர்களை தேவன் நரகத்துக்கு அனுப்புவது சரியா?

 சுவிசேஷத்தைக் கேள்விப்படாதவர்களை தேவன் நரகத்துக்கு அனுப்புவது சரியா?

கேள்வி: நம்மைச் சுற்றி எத்தனையோ பேர் உள்ளனர். இயேசுவை அறியாதவர்கள் எத்தனையோ நல்லவர்கள் இருக்கிறார்கள், இறந்து போகிறார்கள். அவர்களுக்கு இயேசுவைப்பற்றி யாரும் சொல்லாமலே இறந்தும் போகிறார்கள். அவர்கள் அநேக நன்மைகள் செய்து இருக்கலாம், மற்றவர்களால் துன்புறுத்தப்பட்டு இருக்கலாம். இவர்கள் அனைவரும் நரகத்துக்கு போவார்களா அல்லது வித்தியாசமான நியாயத்தீர்ப்பு இருக்குமா?

பதில்:

இந்தக் கேள்வி பல ஆண்டுகளாக  எழுப்பப்பட்டுள்ளது. பைபிளில் சொல்லப்பட்டுள்ள  சுவிசேஷத்தை கேள்விப்படாதவர்களும் ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்படுவார்கள் என்று காட்டுவதுபோல் உள்ளது. இப்படி வாய்ப்பு கிடைக்காதவர்கள் நரகத்துக்கு போவது நியாயமாக தோன்றவில்லை என்ற எண்ணம் எழுவது இயல்பு. இன்று தொழில்நுட்பமானது எங்கேயோ சென்றுவிட்டது, இப்படி இயேசுவைக் கேள்விப்படவதர்கள் ஒருவேளை மிகவும் சொற்பமானவர்களாக இருக்கலாம்.

"எத்தனையோ நல்லவர்கள் இருக்கிறார்கள்" என்பது முழுக்க தவறு. There is no one good. நல்லவன் ஒருவனும் இல்லை என்று பைபிளில் தெளிவாக உள்ளது (ரோமர் 3:10-12) . நீங்கள் நல்லவர்கள் என்று நினைப்பவர்களின் மற்ற பக்கங்கள் உங்களுக்கு தெரியாது. மிகவும் சரியாக சொல்லவேண்டும் என்றால் நம்மைப்பற்றியே நமக்கு சரியாக தெரியாது. கொடுக்கப்பட்ட ஒரு சூழ்நிலையில் எப்படி நடந்துகொண்டோம், ஏன் இப்படி செய்தோம், நினைத்தோம், பேசினோம் என்று வருந்துபவர்கள் எல்லாருமே. எனவே பைபிளில் நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை, இருதயமே மகா திருக்கும், கேடுள்ளதுமாக இருக்கிறது -heart is deceitful and desperately wicked என்பது முழுக்க முழுக்க உண்மை.

மேலும், நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னையன்றி ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் என்றும், நானே ஆடுகளுக்கு வாசல் என்வழியாய் பிரவேசியாமல் வேறு வழியாய் பிரவேசிக்க முயற்சிப்பவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாக இருக்கிறான் என்று தெளிவாக இயேசு சொல்லியிருக்கிறார். இயேசுதான் ஒரே வழி, வேறு வழியில்லை.

இயேசுவைப்பற்றி கேள்விப்படாதவர்களைப் பற்றிய நியாயத்தீர்ப்பைப் பார்ப்போம். இதற்காக பதில் பைபிளில் என்ன சொல்லப்பட்டுள்ளது? அப்போஸ்தலனாகிய பவுல் இப்படியாக சொல்கிறார். ரோமர் 2ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம்:

14. அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் (naturally) நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள்.

15. அவர்களுடைய மனச்சாட்சியும் கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்க்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்.

16. என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்.

"புறஜாதியார் ஆக்கினைத்தீர்ப்பு அடைவார்கள், ஏனெனில் தேவனுடைய கற்பனைகளை அவர்கள் அனுசரிப்பதில்லை" என்று யூதர்கள் நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், புறஜாதிகளுக்கும் நியாயப்பிரமாணமானது அவர்களுடைய இருதயங்களில் எழுதப்பட்டிருக்கிறது என்று பவுல் சொல்கிறார். இங்கே பவுலின் நோக்கம்: யூதர்கள் மோசே கொடுத்த நியாயப்பிரமாணத்தை கேள்விப்பட்டால் மட்டும் போதாது, அதை பின்பற்றவேண்டும் என்கிறார். நியாயப்பிரமாணத்தைக் கேள்விப்பட்டுவிட்டு பாவத்தில் வாழ்வது நீதியல்ல.

பவுலின் விவாதம் புறஜாதியார்மேல் வரவிருக்கும் நியாயத்தீர்ப்பினைப் பற்றி அல்ல.  யூதர்கள் நியாயப்பிரமாணத்தைக் கேள்விப்பட்டு அதைப் புரிந்துகொண்டு அதின்படி செய்யாமல் (அதற்கு கீழ்ப்படியாமல்) போனால் நியாயத்தீர்ப்பு அடைவார்கள். பாவத்தில் வாழ்ந்து யூதர்களாக ஜீவிப்பதால் எந்த விதத்திலும் தேவனுக்கு முன்பாக மேன்மையானவர்களாக முடியாது. ரோமர் 2:13ல் சொன்னபடி: "நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்ல, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள்." புறஜாதிகள் யூதர்களாக மாறினாலும் பிரயோஜனமில்லை, பாவத்தில் ஜீவிக்காமல் இருக்கவேண்டும் என்பதே கருத்தாகும்.

எனவே பவுல் "யூதர்களும், புறஜாதிகளும் தங்கள் செய்யும் கிரியைகளைக்கொண்டே நியாயம்தீர்க்கப்படுவார்கள், மோசேயின் கட்டளைகளை படித்ததால் மட்டும் அல்ல" என்று  சொல்வதாக நாம் முடிவுக்கு வரலாம்.

ஒருமுறை ஒரு கிராமத்துக்கு என் தந்தையோடு சென்றேன், அங்கே செல்ல பேருந்து கிடையாது, வயல்-வரப்புகளைத் தாண்டி செல்லவேண்டும்.  அப்போது மிகவும் இளைஞனாக இருந்தேன். ஒரு வயதான முதியவரிடம் "இயேசுவைத் தெரியுமா?" என்றேன். "எனக்கு  அவங்க வீடு தெரியாது,  கடைக்காரரிடம் கேளுங்கள் அவருக்குத் தெரியும்" என்றார். இயேசுவைப்பற்றி கேள்விப்படாத சிலர் வாழ்ந்த கிராமம் அது. பின்புதான் தேவனைப்பற்றி விளக்க ஆரம்பித்தேன். அதே கிராமத்தில் ஒருவரிடம் "கெட்ட வார்த்தை பேசுவது சரியா?" என்றேன். "தப்புதான்" என்றார்.  "திருடினால்?" என்றேன்... "வரண்டுவது தப்புதான்" என்றார். "பொய், கொலை... என்று சொல்லிக்கொண்டே போகும் போது இதெல்லாம் தவறு என்று யார் இவர்களுக்கு சொன்னது? என்ற எண்ணம் எழுந்தது.   ஆனால் இதெல்லாம் இவர்களுடைய இருதயத்தில் எழுதப்பட்டுள்ளது.

புறஜாதியார் அவர்கள் செய்யும் பாவம் மற்றும் பாவம் அல்லாத கிரியைகளைக் கொண்டே நியாயத்தீர்ப்பு அடைவார்கள். நியாயத்தீர்ப்பு தங்களுக்கு தெரியாத ஒரு அளவுகோல் வைத்து அல்ல தெரிந்த அளவுகோல் வைத்துதான்.  ஆனால் புறஜாதியாரில் அவர்களுடைய அளவுகோலின்படி பாவம் செய்யாதவர் யார்?



யோவான் 8ம் அதிகாரத்தில் நாம் அறிந்த சம்பவம் இங்கே நம் நினைவிற்காக: 
அவர்(இயேசு) நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொன்னார்...அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார். (இங்கே பாவம் செய்யாதவர் இயேசு மட்டுமே! இல்லையென்றால் அவரும் சென்றிருக்கவேண்டும்)

இயேசுவைப்பற்றி கேள்விப்பட்டு அதை தள்ளிவிட்டவர்களும் ஆக்கினைத்தீர்ப்பு அடைவார்கள். இயேசுவை ஏற்றுக்கொண்டு பாவத்தில் ஜீவிப்பவர்களும் ஆக்கினைத்தீர்ப்பு அடைவார்கள்.

II கொரிந்தியர் 5:10 ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.

தேவன் நீதியுள்ள நியாயாதிபதி. தீட்டும், தீங்குள்ளதொன்றும் அதற்குள் (பரலோகத்திற்குள்) பிரவேசிப்பதில்லை.

I பேதுரு 4:18 நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்?
இந்த வசனத்தை சற்றே தியானியுங்கள். 

Sunday, 6 August 2017

II சாமுவேல் 24 அதிகாரம்

II சாமுவேல்
24 அதிகாரம்

    1. கர்த்தருடைய கோபம் திரும்ப இஸ்ரவேலின்மேல் மூண்டது. இஸ்ரவேல் யூதா என்பவர்களை இலக்கம் பார் என்று அவர்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதற்கு தாவீது ஏவப்பட்டான்.

    2. அப்படியே ராஜா தன்னோடிருக்கிற சேனாபதியாகிய யோவாபைப் பார்த்து: ஜனங்களின் இலக்கத்தை நான் அறியும்படிக்கு நீ தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள இஸ்ரவேலரின் கோத்திரமெங்கும் சுற்றித்திரிந்து ஜனங்களைத் தொகையிடுங்கள் என்றான்.

    3. அப்பொழுது யோவாப் ராஜாவைப்பார்த்து: ராஜாவாகிய என் ஆண்டவனுடைய கண்கள் காணும்படி உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஜனங்களை இப்பொழுது இருக்கிறதைப்பார்க்கிலும், நூறுமடங்கு அதிகமாய் வர்த்திக்கப்பண்ணுவாராக; ஆனாலும் என் ஆண்டவனாகிய ராஜா இந்தக் காரியத்தை விரும்புகிறது என்ன என்றான்.

    4. ஆகிலும் யோவாபும் இராணுவத்தலைவரும் சொன்ன வார்த்தை செல்லாதபடிக்கு, ராஜாவின் வார்த்தை பலத்தது; அப்படியே இஸ்ரவேல் ஜனங்களைத் தொகையிட, யோவாபும் இராணுவத்தலைவரும் ராஜாவைவிட்டு புறப்பட்டுப்போய்,

    5. யோர்தானைக் கடந்து, காத் என்னும் ஆறுகளின் நடுவே இருக்கிற பட்டணத்திற்கு வலதுபுறமான ஆரோவேரிலும் யாசேரிடத்திலும் பாளயமிறங்கி,

    6. அங்கேயிருந்து கீலேயாத்திற்கும் தாதீம்ஒத்சிக்கும் போய், அங்கேயிருந்து தாண்யானுக்கும், சீதோனின் சுற்றுப்புறங்களுக்கும் போய்,

    7. பிற்பாடு தீரு என்னும் கோட்டைக்கும் ஏவியர் கானானியருடைய சகல பட்டணங்களுக்கும் போய், அங்கேயிருந்து யூதாவின் தென்புறமான பெயெர்செபாவுக்குப் போய்,

    8. இப்படி தேசமெங்கும் சுற்றித்திரிந்து, ஒன்பது மாதமும் இருபதுநாளும் ஆனபிற்பாடு எருசலேமுக்கு வந்தார்கள்.

    9. யோவாப் ஜனத்தை இலக்கம்பார்த்த தொகையை ராஜாவுக்குக் கொடுத்தான்; இஸ்ரவேலிலே பட்டயம் உருவத்தக்க யுத்த சேவகர் எட்டுலட்சம்பேர் இருந்தார்கள்; யூதா மனுஷர் ஐந்து லட்சம் பேர் இருந்தார்கள்.

    10. இவ்விதமாய் ஜனங்களை எண்ணின பின்பு, ராஜாவின் இருதயம் அவனை வாதித்தது; அப்பொழுது தாவீது கர்த்தரை நோக்கி: நான் இப்படிச் செய்ததினாலே பெரிய பாவஞ்செய்தேன்; இப்போதும் ஆண்டவரே, உமது அடியானின் அக்கிரமத்தை நீக்கிவிடும், நான் மகாபுத்தியீனமாய்ச் செய்தேன் என்றான்.

    11. தாவீது காலமே எழுந்திருந்தபோது, தாவீதின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத் என்னும் தீர்க்கதரிசிக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகிச் சொன்னது:

    12. நீ தாவீதினிடத்தில் போய், மூன்றுகாரியங்களை உனக்கு முன்பாக வைக்கிறேன்; அவைகளில் ஒரு காரியத்தைத் தெரிந்துகொள், அதை நான் உனக்குச்செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

    13. அப்படியே காத் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி: உம்முடைய தேசத்திலே ஏழு வருஷம் பஞ்சம் வரவேண்டுமோ, அல்லது மூன்றுமாதம் உம்முடைய சத்துருக்கள் உம்மைப் பின்தொடர, நீர் அவர்களுக்கு முன்பாக ஓடிப்போகவேண்டுமோ? அல்லது உம்முடைய தேசத்திலே மூன்றுநாள் கொள்ளைநோய் உண்டாகவேண்டுமோ? இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான் என்ன மறு உத்தரவு கொண்டுபோகவேண்டும் என்பதை நீர் யோசித்துப்பாரும் என்று சொன்னான்.

    14. அப்பொழுது தாவீது காத்தை நோக்கி: கொடிய இடுக்கணில் அகப்பட்டிருக்கிறேன், இப்போது நாம் கர்த்தருடைய கையிலே விழுவோமாக; அவருடைய இரக்கங்கள் மகா பெரியது; மனுஷர் கையிலே விழாதிருப்பேனாக என்றான்.

    15. அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலிலே அன்று காலமே தொடங்கி குறித்தகாலம்வரைக்கும் கொள்ளைநோயை வரப்பண்ணினார்; அதினால் தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள ஜனங்களில் எழுபதினாயிரம்பேர் செத்துப்போனார்கள்.

    16. தேவதூதன் எருசலேமை அழிக்கத் தன் கையை அதின்மேல் நீட்டினபோது, கர்த்தர் அந்தத் தீங்குக்கு மனஸ்தாபப்பட்டு, ஜனங்களைச் சங்கரிக்கிற தூதனை நோக்கி: போதும், இப்போது உன் கையை நிறுத்து என்றார்; அந்த வேளையில் கர்த்தருடைய தூதன் எபூசியனாகியா அர்வனாவின் போரடிக்கிற களத்திற்கு நேரே இருந்தான்.

    17. ஜனத்தை உபாதிக்கிற தூதனை தாவீது கண்டபோது, அவன் கர்த்தரை நோக்கி: இதோ, நான்தான் பாவஞ்செய்தேன்; நான்தான் அக்கிரமம்பண்ணினேன்; இந்த ஆடுகள் என்ன செய்தது? உம்முடைய கை எனக்கும் என் தகப்பன் வீட்டுக்கும் விரோதமாயிருப்பதாக என்று விண்ணப்பம்பண்ணினான்.

    18. அன்றைய தினம் காத் என்பவன் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் போய், எபூசியனாகிய அர்வனாவின் களத்திலே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கும் என்றான்.

    19. காத்துடைய வார்த்தையின்படியே தாவீது கர்த்தர் கற்பித்த பிரகாரமாகப் போனான்.

    20. அர்வனா ஏறிட்டுப்பார்த்து: ராஜாவும் அவனுடைய ஊழியக்காரரும் தன்னிடத்தில் வருகிறதைக்கண்டு, அர்வனா எதிர்கொண்டுபோய் தரைமட்டும்குனிந்து ராஜாவை வணங்கி,

    21. ராஜாவாகிய என் ஆண்டவன் தமது அடியானிடத்தில் வருகிற காரியம் என்ன என்று கேட்டதற்கு, தாவீது: வாதை ஜனத்தைவிட்டு நிறுத்தப்படக் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படிக்கு இந்தக் களத்தை உன் கையிலே கொள்ளவந்தேன் என்றான்.

    22. அர்வனா தாவீதைப் பார்த்து ராஜாவாகிய என் ஆண்டவன் இதை வாங்கிக்கொண்டு, தம்முடைய பார்வைக்கு நலமானபடி பலியிடுவாராக; இதோ, தகனபலிக்கு மாடுகளும் விறகுக்குப் போரடிக்கிற உருளைகளும் மாடுகளின் நுகத்தடிகளும் இங்கே இருக்கிறது என்றுசொல்லி,

    23. அர்வனா ராஜயோக்கியமாய் அவை எல்லாவற்றையும் ராஜாவுக்குக் கொடுத்தபின்பு, அர்வனா ராஜாவை நோக்கி: உம்முடைய தேவனாகிய கர்த்தர் உம்மிடத்தில் கிருபையாயிருப்பாராக என்றான்.

    24. ராஜா அர்வனாவைப் பார்த்து: அப்படியல்ல; நான் இலவசமாய் வாங்கி, என் தேவனாகிய கர்த்தருக்கு சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தாமல், அதை உன் கையிலே விலைக்கிரயமாய் வாங்குவேன் என்று சொல்லி, தாவீது அந்தக் களத்தையும் மாடுகளையும் ஐம்பது சேக்கல் நிறை வெள்ளிக்குக் கொண்டான்.

    25. அங்கே தாவீது கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினான்; அப்பொழுது கர்த்தர்தேசத்துக்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டருளினார், இஸ்ரவேலின்மேல் இருந்த அந்த வாதை நிறுத்தப்பட்டது.

Saturday, 5 August 2017

தேவாலயத்தை விட்டு நீங்காமலிருந்தது யார்? வேதாகம கேள்வி

 கேள்வி

தேவாலயத்தை விட்டு நீங்காமலிருந்தது யார்? 


பதில் 

அன்னாள் லூக்கா 2:36


லூக்கா 2:37 
ஏறக்குறைய எண்பத்துநாலு வயதுள்ள அந்த விதவை தேவாலயத்தை விட்டு                    நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை                  செய்துகொண்டிருந்தாள்.

II சாமுவேல் 23 அதிகாரம்

II சாமுவேல்
23 அதிகாரம்

    1. தாவீதுடைய கடைசி வார்த்தைகள் மேன்மையாய் உயர்த்தப்பட்டு, யாக்கோபுடைய தேவனால் அபிஷேகம் பெற்று, இஸ்ரவேலின் சங்கீதங்களை இன்பமாய்ப்பாடின ஈசாயின் குமாரனாகிய தாவீது என்னும் புருஷன் சொல்லுகிறது என்னவென்றால்:

    2. கர்த்தருடைய ஆவியானவர் என்னைக்கொண்டு பேசினார்; அவருடைய வசனம் என்னுடைய நாவில் இருந்தது.

    3. இஸ்ரவேலின் தேவனும் இஸ்ரவேலின் கன்மலையுமானவர் எனக்குச் சொல்லி உரைத்ததாவது: நீதிபரராய் மனுஷரை ஆண்டு, தெய்வபயமாய்த் துரைத்தனம்பண்ணுகிறவர் இருப்பார்.

    4. அவர் காலையில் மந்தாரமில்லாமல் உதித்து, மழைக்குப்பிற்பாடு தன் காந்தியினால் புல்லைப் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணுகிற சூரியனுடைய விடியற்கால வெளிச்சத்தைப்போல இருப்பார் என்றார்.

    5. என்னுடைய வீடு தேவனிடத்தில் இப்படியிராதோ? சகலமும் திட்டம்பண்ணப்பட்டிருக்கிற நிச்சயமான நித்திய உடன்படிக்கையை என்னுடன் அவர் செய்திருக்கிறார்; ஆதலால் என்னுடைய எல்லா ரட்சிப்பும் எல்லா வாஞ்சையும் வளர்ந்தோங்கச் செய்யாரோ?

    6. பேலியாளின் மக்கள் அனைவருமோ, கையினால் பிடிக்கப்படக் கூடாததாய் எறிந்துபோடப்படவேண்டிய முள்ளுக்குச் சமமானவர்கள்.

    7. அவைகளை ஒருவன் தொடப்போனால், இருப்பாயுதத்தையும் ஈட்டித்தாங்கையும் கெட்டியாய்ப் பிடித்துகொள்ளவேண்டும்; அவைகள் இருக்கிற இடத்தில்தானே அக்கினியினால் முற்றும் சுட்டெரிக்கப்படும் என்றான்.

    8. தாவீதுக்கு இருந்த பராக்கிரமசாலிகளின் நாமங்களாவன: தக்கெமோனியின் குமாரனாகிய யோசேப்பாசெபெத் என்பவன் சேர்வைக்காரரின் தலைவன்; இவன் எண்ணூறுபேர்களின்மேல் விழுந்து அவர்களை ஒருமிக்க வெட்டிப்போட்ட அதீனோஏஸ்னி ஊரானானவன்.

    9. இவனுக்கு இரண்டாவது, அகோயின் குமாரனாகிய தோதோவின் மகன் எலெயாசார் என்பவன்; இவன் பெலிஸ்தர் யுத்தத்திற்குக் கூடின ஸ்தலத்திலே இஸ்ரவேல் மனுஷர் போகையில், தாவீதோடே இருந்து, பெலிஸ்தரை நிந்தித்த மூன்று பராக்கிரமசாலிகளில் ஒருவனாயிருந்தான்.

    10. இவன் எழும்பித் தன் கைசலித்து, தன் கை பட்டயத்தோடு ஒட்டிக்கொள்ளுமட்டும் பெலிஸ்தரை வெட்டினான்; அன்றையதினம் கர்த்தர் பெரிய ரட்சிப்பை நடப்பித்தார்; ஜனங்கள் கொள்ளையிடமாத்திரம் அவனைப் பின்சென்றார்கள்.

    11. இவனுக்கு மூன்றாவது, ஆகேயின் குமாரனாகிய சம்மா என்னும் ஆராரியன்; சிறுபயறு நிறைந்த வயலிருந்த இடத்திலே பெலிஸ்தர் ஏராளமாய்க் கூடி, ஜனங்கள் பெலிஸ்தரைக் கண்டு ஓடுகிறபோது,

    12. இவன் அந்த நிலத்தின் நடுவிலே நின்று அதைக் காப்பாற்றி, பெலிஸ்தரை மடங்கடித்துப்போட்டான்; அதனால் கர்த்தர் பெரிய ரட்சிப்பை நடப்பித்தார்.

    13. முப்பது தலைவருக்குள்ளே இந்தமூன்றுபேரும் அறுப்புநாளிலே அதுல்லாம் கெபியிலே தாவீதிடத்தில் போயிருந்தார்கள்; பெலிஸ்தரின் தண்டு ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பாளயமிறங்கினபோது,

    14. தாவீது அரணான ஒரு இடத்தில் இருந்தான்; அப்பொழுது பெலிஸ்தரின் தாணையம் பெத்லகேமிலே இருந்தது.

    15. தாவீது பெத்லகேமின் ஒலிமுகவாசலில் இருக்கிற கிணற்றின் தண்ணீரின்மேல் ஆவல்கொண்டு: என் தாகத்திற்குக் கொஞ்சந் தண்ணீர் கொண்டுவருகிறவன் யார் என்றான்.

    16. அப்பொழுது இந்த மூன்று பராக்கிரமசாலிகளும் பெலிஸ்தரின் பாளயத்திலே துணிந்து புகுந்துபோய், பெத்லகேமின் ஒலிமுகவாசலில் இருக்கிற கிணற்றிலே தண்ணீர் மொண்டு, தாவீதினிடத்தில் கொண்டுவந்தார்கள்; ஆனாலும் அவன் அதைக் குடிக்க மனதில்லாமல் அதைக் கர்த்தருக்கென்றுஊற்றிப்போட்டு:

    17. கர்த்தாவே, தங்கள் பிராணனை எண்ணாமல் போய்வந்த அந்த மனுஷரின் இரத்தத்தைக் குடிக்கும் இந்தச்செயல் எனக்குத் தூரமாயிருப்பதாக என்றுசொல்லி, அதைக் குடிக்க மனதில்லாதிருந்தான்; இப்படி இந்த மூன்று பராக்கிரமசாலிகளும் செய்தார்கள்.

    18. யோவாபின் சகோதரனும் செருயாவின் குமாரனுமான அபிசாய் என்பவன், அந்த மூன்றுபேரில் பிரதானமானவன்; அவன் தன் ஈட்டியை ஓங்கி முந்நூறுபேரை மடங்கடித்ததினால், இந்த மூன்றுபேர்களில் பேர்பெற்றவனானான்.

    19. இந்த மூன்றுபேர்களில் அவன் மேன்மையுள்ளவனாயிருந்ததினாலல்லவோ, அவர்களில் தலைவனானான்; ஆனாலும் அந்த முந்தின மூன்று பேருக்கு அவன் சமமானவன் அல்ல.

    20. பராக்கிரமசாலியாகிய யோய்தாவின் குமாரனும் கப்செயேல் ஊரானுமாகிய பெனாயாவும் செய்கைகளில் வல்லவனாயிருந்தான்; அவன் மோவாப் தேசத்தின் இரண்டு வலுமையான சிங்கங்களைக் கொன்றதுமல்லாமல், உறைந்த மழைகாலத்தில் அவன் இறங்கிப்போய், ஒருகெபிக்குள் இருந்த ஒரு சிங்கத்தையும் கொன்றுபோட்டான்.

    21. அவன் பயங்கரரூபமான ஒரு எகிப்தியனையும் கொன்றுபோட்டான்; அந்த எகிப்தியன் கையில் ஒரு ஈட்டியிருக்கையில், இவன் ஒரு தடியைப்பிடித்து, அவனிடத்தில் போய், அந்த எகிப்தியன் கையிலிருந்த ஈட்டியைப்பறித்து, அவன் ஈட்டியினாலே அவனைக் கொன்றுபோட்டான்.

    22. இவைகளை யோய்தாவின் குமாரனாகிய பெனாயா செய்தபடியினால், மூன்று பராக்கிரமசாலிகளுக்குள்ளே பேர்பெற்றவனாயிருந்தான்.

    23. முப்பதுபேரிலும் இவன் மேன்மையுள்ளவன்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேருக்கும் இவன் சமானமானவனல்ல; இவனைத் தாவீது தன் மெய்க்காவலருக்குத் தலைவனாக வைத்தான்.

    24. யோவாபின் தம்பி ஆசகேல் மற்ற முப்பதுபேரில் ஒருவன்; அவர்கள் யாரெனில், பெத்லகேம் ஊரானாகிய தோதோவின் குமாரன் எல்க்கானான்,

    25. ஆரோதியனாகிய சம்மா, ஆரோதியனாகிய எலிக்கா,

    26. பல்தியனாகிய ஏலெஸ், இக்கேசின் குமாரனாகிய ஈரா என்னும் தெக்கோவியன்.

    27. ஆனதோத்தியனாகிய அபியேசர், ஊசாத்தியனாகிய மெபுன்னாயி,

    28. அகோகியனாகிய சல்மோன், நெத்தோபாத்தியனாகிய மகராயி,

    29. பானாவின் குமாரனாகிய ஏலேப் என்னும் நெத்தோபாத்தியன், பென்யமீன் புத்திரரின் கிபியா ஊரானாகிய ரிபாயின் குமாரன் இத்தாயி,

    30. பிரத்தோனியனாகிய பெனாயா, காகாஸ் நீரோடைகளின் தேசத்தானாகிய ஈத்தாயி,

    31. அர்பாத்தியனாகிய அபிஅல்பொன், பருமியனாகிய அஸ்மாவேத்,

    32. சால்போனியனாகிய எலியூபா, யாசேனின் குமாரரில் யோனத்தான் என்பவன்.

    33. ஆசாரியனாகிய சம்மா, சாராரின் குமாரனாகிய அகியாம் என்னும் ஆராரியன்,

    34. மாகாத்தியனின் குமாரனாகிய அகஸ்பாயிம் மகன் எலிப்பெலேத், கீலோனியனாகிய அகித்தோப்பேலின் குமாரன் எலியாம் என்பவன்.

    35. கர்மேலியனாகிய எஸ்ராயி, அர்பியனாகிய பாராயி,

    36. சோபா ஊரானாகிய நாத்தானின் குமாரன் ஈகால், காதியனாகிய பானி,

    37. அம்மோனியனாகிய சேலேக், செருயாவின் குமாரனாகிய யோவாபின் ஆயுததாரியான பெரோத்தியனாகிய நகராய்,

    38. இத்ரியனாகிய ஈரா, இத்ரியனாகிய காரேப்,

    39. ஏத்தியனாகிய உரியா என்பவர்களே; ஆக முப்பத்தேழுபேர்.

Sunday, 28 May 2017

Thasare Ith Thaaraniyil Anbai lyrics தாசரே இத்தரணியை அன்பாய்

207. தாசரே இத்தரணியை அன்பாய்
தாசரே இத்தரணியை அன்பாய்
இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்
அனுபல்லவி
நேசமாய் இயேசுவைக் கூறுவோம், அவரைக்
காண்பிப்போம், மாவிருள் நீக்குவோம்,
வெளிச்சம் வீசுவோம்
சரணங்கள்
1. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமப்போரை
வருந்தியன்பாய் அழைத்திடுவோம்
உரித்தாய் இயேசு பாவப்பாரத்தை
நமது துக்கத்தை நமது துன்பத்தைச் சுமந்து தீர்த்தாரே --- தாசரே
2. பசியுற்றோர்க்குப் பிணியாளிகட்குப்
பட்சமாக உதவி செய்வோம்
உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து
இயேசு கனிந்து திரிந்தனரே --- தாசரே
3. நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
நீசரை நாம் உயர்த்திடுவோம்
பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்
நிஷ்டூரத்துக்குள், படுகுழிக்குள் விழுந்தனரே --- தாசரே
4. இந்து தேச மாது சிரோமணிகளை
விந்தை யொளிக்குள் வரவழைப்போம்
சுந்தர குணங்களடைந்து அறிவிலுயர்ந்து
நிர்பந்தங்கள் தீர்ந்து சிறந்திலங்கிட --- தாசரே
5. மார்க்கம் தப்பி நடப்போரைச் சத்ய
வழிக்குள் வந்திடச் சேர்த்திடுவோம்
ஊக்கமாக ஜெபித்திடுவோம் நாமுயன்றிடுவோம்
நாம் உழைத்திடுவோம், நாம் ஜெயித்திடுவோம் --- தாசரே

Yesu Endra Thiru Namatherkku lyrics இயேசு என்ற திருநாமத்திற்கு Tamil Christian Song

இயேசு என்ற திரு நாமத்திற்கு
எப்போதுமே மிக ஸ்தோத்திரம் - 2
வானிலும் பூவிலும் மேலான நாமம்
வல்லமையுள்ள நாமம் அது - 2
தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது – 2                                                                            இயேசு என்ற திரு நாமத்திற்கு
எப்போதுமே மிக ஸ்தோத்திரம்
வேதாளம் பாதாளம்
யாவையும் ஜெயித்த
வீரமுள்ள திருநாமமது - 2
நாமும் வென்றிடுவோம் இந்த நாமத்திலே – 2                                                               இயேசு என்ற திரு நாமத்திற்கு
எப்போதுமே மிக ஸ்தோத்திரம்
பாவத்திலே மாளும் பாவியை மீட்க
பாரினில் வந்த மெய் நாமமது - 2
பரலோகத்தில் சேர்க்கும் நாமமது – 2                                                                                     இயேசு என்ற திரு நாமத்திற்கு
எப்போதுமே மிக ஸ்தோத்திரம்
உத்தம பக்தர்கள் போற்றித் துதித்திடும்
உன்னத தேவனின் நாமமது
உலகெங்கும் ஜொலித்திடும் நாமது – 2                                                                                இயேசு என்ற திரு நாமத்திற்கு
எப்போதுமே மிக ஸ்தோத்திரம்
சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில்
தாங்கி நடத்திடும் நாமமது - 2
தடை முற்றும் அகற்றிடும் நாமமது – 2                                                                                         இயேசு என்ற திரு நாமத்திற்கு
எப்போதுமே மிக ஸ்தோத்திரம் – 2


ENGUM PUGAZH YESU RAJANUKKE LYRICS எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே Tamil Christian Song

எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே
எழில் மாட்சிமை வளர் வாலிபரே - 2
உங்களையல்லவோ
உண்மை வேதங் காக்கும்
உயர் வீரரெனப் பக்தர் ஓதுகிறார்                                                                                         எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே
எழில் மாட்சிமை வளர் வாலிபரே
ஆயிரத் தொருவர் ஆவீரல்லோ நீரும்
அதை அறிந்து துதி செய்குவீர் - 2
தாயினும் மடங்கு சதம் அன்புடைய
சாமி யேசுவுக்கிதயம் தந்திடுவீர்                                                                                            எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே
எழில் மாட்சிமை வளர் வாலிபரே
கல்வி கற்றவர்கள் கல்வி கல்லாதோர்க்கு
கடன் பட்டவர் கண்திறக்கவே - 2
பல்வழி அலையும் பாதை தப்பினோரைப்
பரிந்து திருப்ப நிதம் பார்த்திடுவீர்                                                                                     எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே
எழில் மாட்சிமை வளர் வாலிபரே
தாழ்மை சற்குணமும் தயை காருண்யமும்
தழைப்பதல்லோ தகுந்த கல்வி -
பாழுந்துர்க்குணமும் பாவச் செய்கையாவும்
பறந்தோடப் பார்ப்பதுங்கள் பாரமன்றோ                                                                         எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே
எழில் மாட்சிமை வளர் வாலிபரே
சுத்த சுவிசேஷம் துரிதமாய் செல்ல
தூதர் நீங்களே தூயன் வீரரே - 2
கர்த்தரின் பாதத்தில் காலை மாலை தங்கி
கருணை நிறை வசனம் கற்றிடுவீர்                                                                                          எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே
எழில் மாட்சிமை வளர் வாலிபரே


Wednesday, 24 May 2017

Sthothiram Seivenae lyrics - ஸ்தோத்திரம் செய்வேனே இரட்சகனை Tamil Christian Song

ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை - 3
                                          ஸ்தோதிரம் செய்வேனே

பாத்திரமாக இம்மாத்திரம் கருணை வைத்த - 2
பாத்திரனை யூத கோத்திரனை -  என்றும்
         
                                            ஸ்தோதிரம் செய்வேனே         

அன்னை மரிசுதனை
புல்மீது அமிழ்ந்துக் கழுதவனை - 3
முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை - 2
முன்னுரை நூற்படி இந்நிலத்துற்றோனை

                                            ஸ்தோதிரம் செய்வேனே

செம்பொன்னுருவானைத்
தேசிகர்கள் தேடும் குரவானை - 3
அம்பரமேவிய உம்பர் கணத்தோடு - 2
அன்பு பெற நின்று பைம்பொன் மலர் துவி

                                            ஸ்தோதிரம் செய்வேனே

கந்தை பொதிந்தவனை
வானோர்களும் வந்தடி பணிபவனை - 3
மந்தையர்கானந்த மாட்சியளித் தோனை - 2
வான பரன் என்னும் ஞான குருவானை


                                           ஸ்தோதிரம் செய்வேனே

Monday, 22 May 2017

என்ன என் ஆனந்தம்! என்ன என் ஆனந்தம்! பாடல் வரிகள்

என்ன என் ஆனந்தம்! என்ன என் ஆனந்தம்!
சொல்லக் கூடாதே
மன்னன் கிறிஸ்து என் பாவத்தையெல்லாம்
மன்னித்து விட்டாரே
1. கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் ஒன்றாய்
மகிழ் கொண்டாடுவோம்
நாடியே நம்மை தேடியே வந்த
நாதனை ஸ்தோத்தரிப்போம்
2. பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம்
பரிகரித்தாரே
தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து
தங்கியே விட்டாரே
3. அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு
அருளினதாலே
நிச்சயம் ஸ்வாமியை பற்றிய சாட்சி
பகர வேண்டியதே

4. வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல் வீட்டில்
ஜெயக் கொடியுடனே
மண்ணுலகில் வந்து விண்ணுலகம் சென்ற
மன்னனை ஸ்தோத்தரிப்போம்

உழைப்பாளியான ரூபவதி

"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…" - பிரசங்கி 9:10   செல்வமும், களியாட்டுகளும், புகழும், பெருமைய...