Sunday, 28 May 2017

Thasare Ith Thaaraniyil Anbai lyrics தாசரே இத்தரணியை அன்பாய்

207. தாசரே இத்தரணியை அன்பாய்
தாசரே இத்தரணியை அன்பாய்
இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்
அனுபல்லவி
நேசமாய் இயேசுவைக் கூறுவோம், அவரைக்
காண்பிப்போம், மாவிருள் நீக்குவோம்,
வெளிச்சம் வீசுவோம்
சரணங்கள்
1. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமப்போரை
வருந்தியன்பாய் அழைத்திடுவோம்
உரித்தாய் இயேசு பாவப்பாரத்தை
நமது துக்கத்தை நமது துன்பத்தைச் சுமந்து தீர்த்தாரே --- தாசரே
2. பசியுற்றோர்க்குப் பிணியாளிகட்குப்
பட்சமாக உதவி செய்வோம்
உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து
இயேசு கனிந்து திரிந்தனரே --- தாசரே
3. நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
நீசரை நாம் உயர்த்திடுவோம்
பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்
நிஷ்டூரத்துக்குள், படுகுழிக்குள் விழுந்தனரே --- தாசரே
4. இந்து தேச மாது சிரோமணிகளை
விந்தை யொளிக்குள் வரவழைப்போம்
சுந்தர குணங்களடைந்து அறிவிலுயர்ந்து
நிர்பந்தங்கள் தீர்ந்து சிறந்திலங்கிட --- தாசரே
5. மார்க்கம் தப்பி நடப்போரைச் சத்ய
வழிக்குள் வந்திடச் சேர்த்திடுவோம்
ஊக்கமாக ஜெபித்திடுவோம் நாமுயன்றிடுவோம்
நாம் உழைத்திடுவோம், நாம் ஜெயித்திடுவோம் --- தாசரே

Yesu Endra Thiru Namatherkku lyrics இயேசு என்ற திருநாமத்திற்கு Tamil Christian Song

இயேசு என்ற திரு நாமத்திற்கு
எப்போதுமே மிக ஸ்தோத்திரம் - 2
வானிலும் பூவிலும் மேலான நாமம்
வல்லமையுள்ள நாமம் அது - 2
தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது – 2                                                                            இயேசு என்ற திரு நாமத்திற்கு
எப்போதுமே மிக ஸ்தோத்திரம்
வேதாளம் பாதாளம்
யாவையும் ஜெயித்த
வீரமுள்ள திருநாமமது - 2
நாமும் வென்றிடுவோம் இந்த நாமத்திலே – 2                                                               இயேசு என்ற திரு நாமத்திற்கு
எப்போதுமே மிக ஸ்தோத்திரம்
பாவத்திலே மாளும் பாவியை மீட்க
பாரினில் வந்த மெய் நாமமது - 2
பரலோகத்தில் சேர்க்கும் நாமமது – 2                                                                                     இயேசு என்ற திரு நாமத்திற்கு
எப்போதுமே மிக ஸ்தோத்திரம்
உத்தம பக்தர்கள் போற்றித் துதித்திடும்
உன்னத தேவனின் நாமமது
உலகெங்கும் ஜொலித்திடும் நாமது – 2                                                                                இயேசு என்ற திரு நாமத்திற்கு
எப்போதுமே மிக ஸ்தோத்திரம்
சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில்
தாங்கி நடத்திடும் நாமமது - 2
தடை முற்றும் அகற்றிடும் நாமமது – 2                                                                                         இயேசு என்ற திரு நாமத்திற்கு
எப்போதுமே மிக ஸ்தோத்திரம் – 2


ENGUM PUGAZH YESU RAJANUKKE LYRICS எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே Tamil Christian Song

எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே
எழில் மாட்சிமை வளர் வாலிபரே - 2
உங்களையல்லவோ
உண்மை வேதங் காக்கும்
உயர் வீரரெனப் பக்தர் ஓதுகிறார்                                                                                         எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே
எழில் மாட்சிமை வளர் வாலிபரே
ஆயிரத் தொருவர் ஆவீரல்லோ நீரும்
அதை அறிந்து துதி செய்குவீர் - 2
தாயினும் மடங்கு சதம் அன்புடைய
சாமி யேசுவுக்கிதயம் தந்திடுவீர்                                                                                            எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே
எழில் மாட்சிமை வளர் வாலிபரே
கல்வி கற்றவர்கள் கல்வி கல்லாதோர்க்கு
கடன் பட்டவர் கண்திறக்கவே - 2
பல்வழி அலையும் பாதை தப்பினோரைப்
பரிந்து திருப்ப நிதம் பார்த்திடுவீர்                                                                                     எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே
எழில் மாட்சிமை வளர் வாலிபரே
தாழ்மை சற்குணமும் தயை காருண்யமும்
தழைப்பதல்லோ தகுந்த கல்வி -
பாழுந்துர்க்குணமும் பாவச் செய்கையாவும்
பறந்தோடப் பார்ப்பதுங்கள் பாரமன்றோ                                                                         எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே
எழில் மாட்சிமை வளர் வாலிபரே
சுத்த சுவிசேஷம் துரிதமாய் செல்ல
தூதர் நீங்களே தூயன் வீரரே - 2
கர்த்தரின் பாதத்தில் காலை மாலை தங்கி
கருணை நிறை வசனம் கற்றிடுவீர்                                                                                          எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே
எழில் மாட்சிமை வளர் வாலிபரே


Wednesday, 24 May 2017

Sthothiram Seivenae lyrics - ஸ்தோத்திரம் செய்வேனே இரட்சகனை Tamil Christian Song

ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை - 3
                                          ஸ்தோதிரம் செய்வேனே

பாத்திரமாக இம்மாத்திரம் கருணை வைத்த - 2
பாத்திரனை யூத கோத்திரனை -  என்றும்
         
                                            ஸ்தோதிரம் செய்வேனே         

அன்னை மரிசுதனை
புல்மீது அமிழ்ந்துக் கழுதவனை - 3
முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை - 2
முன்னுரை நூற்படி இந்நிலத்துற்றோனை

                                            ஸ்தோதிரம் செய்வேனே

செம்பொன்னுருவானைத்
தேசிகர்கள் தேடும் குரவானை - 3
அம்பரமேவிய உம்பர் கணத்தோடு - 2
அன்பு பெற நின்று பைம்பொன் மலர் துவி

                                            ஸ்தோதிரம் செய்வேனே

கந்தை பொதிந்தவனை
வானோர்களும் வந்தடி பணிபவனை - 3
மந்தையர்கானந்த மாட்சியளித் தோனை - 2
வான பரன் என்னும் ஞான குருவானை


                                           ஸ்தோதிரம் செய்வேனே

Monday, 22 May 2017

என்ன என் ஆனந்தம்! என்ன என் ஆனந்தம்! பாடல் வரிகள்

என்ன என் ஆனந்தம்! என்ன என் ஆனந்தம்!
சொல்லக் கூடாதே
மன்னன் கிறிஸ்து என் பாவத்தையெல்லாம்
மன்னித்து விட்டாரே
1. கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் ஒன்றாய்
மகிழ் கொண்டாடுவோம்
நாடியே நம்மை தேடியே வந்த
நாதனை ஸ்தோத்தரிப்போம்
2. பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம்
பரிகரித்தாரே
தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து
தங்கியே விட்டாரே
3. அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு
அருளினதாலே
நிச்சயம் ஸ்வாமியை பற்றிய சாட்சி
பகர வேண்டியதே

4. வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல் வீட்டில்
ஜெயக் கொடியுடனே
மண்ணுலகில் வந்து விண்ணுலகம் சென்ற
மன்னனை ஸ்தோத்தரிப்போம்

உழைப்பாளியான ரூபவதி

"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…" - பிரசங்கி 9:10   செல்வமும், களியாட்டுகளும், புகழும், பெருமைய...