Tuesday, 26 March 2019

வயிற்றுப் போக்கிற்கான நிவாரணம்


பொருளடக்கம் :

     முன்னுரை
     வரையறை
     காரணங்கள்
     அறிகுறிகள்
     பரிசோதனை முறைகள்
     சிகிச்சை முறை
     பின்விளைவுகள்
     தடுக்கும் முறைகள்
     முடிவுரை















வயிற்றுப் போக்கிற்கான நிவாரணம்

முன்னுரை :
     வயிற்று போக்கு (ஆ) நீர் வயிற்றுப் போக்கு என்பது
ஒரு நாளுக்கு மூன்று முறைக்கு மேலாக நீர்க்கலவையாக
மலம் உடலில் இருந்து வெளியேறுவது ஆகும். வைரஸ் (ஆ)
பாக்டிரியாவால் குடல் பகுதி புண்ணாகி லேசாக வீக்கம் அடைவது
வயிற்றுப் போக்கு உண்டாவதற்கான முக்கிய காரணம் ஆகும்.

வரையறை :
வயிற்றுப் போக்கு என்பது ஒரு நாளைக்கு மூன்று அல்லது அதற்க்கு
மேற்பட்ட முறை மலம் கழித்தலும் அல்லது நீர்ப்போக்காக மலம் கழித்தலும்
ஆகும்.
-    உலக சுகாதார இயக்கம் (WHO)

காரணங்கள் :
     சுகாதாரம் அற்ற வாழ்கை முறை
     சுற்றுசூழல் பாதுகாப்பற்ற / சுகாதாரமற்றநிலை
     திறந்த வெளியில் மலம் கழிப்பது
     மாசுபட்ட குடிநீர் பயன்பாடு




அறிகுறிகள் :
     நீர்ப் போக்குடன் கூடிய மலம்
     அடி வயிற்றில் வலி அல்லது வீக்கம்
     காய்ச்சல்
     மலத்துடன் இரத்தம் வெளியேறுதல்
     வயிறு எரிச்சலுடன் இருப்பது

பரிசோதனை முறைகள் :
     உடல் பரிசோதனை
     மலம் பரிசோதனை
     Stool Cultwrel test / மலம் ஆய்வு / ஆராய்ச்சிக்கான சோதனை

சிகிச்சை முறை :
     1 லிட்டர் காய்த்து வடிகட்டிய நீருடன் 2 தேக்கரண்டி சக்கரை மற்றும்
1 தேக்கரண்டி உப்பு, சிறிது எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றை சேர்த்து
நன்கு கலக்கி குடிக்க வேண்டும்.

பின்விளைவுகள் :
     வாய் மற்றும் சருமம் வறட்சியாக இருப்பது
     குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம்
     அடிக்கடி தலைசுற்றுதல்
     அளவுக்கு அதிகமான தாகம்


தடுக்கும் முறைகள் :
     தனிநபர் சுகாதாரம்
     பாதுகாப்பான குடிநீர்
     கைகளை சுத்தமாக வைத்திருத்தல்
     சாலையில் விற்கும் தின்பாண்டன்களை  சாப்பிடுவதைத் தவிர்த்தல்

முடிவுரை :
     சுகாதார முறைகளை கையாளுவதன் மூலம் நாம் வயிற்றுப் போக்கு
உண்டாகாமல் தடுக்க முடியும். மேலும் மற்றவர்களுக்கு பரவாமல் பாதுகாக்க
முடியும்.








Thursday, 21 March 2019

உம்மைத்தான் நான் பார்க்கின்றேன்

உம்மைத்தான் நான் பார்க்கின்றேன்
பிரகாசமடைகின்றேன்

அவமானம் அடைவதில்லை
அப்பா நான் உமது பிள்ளை -ஒருநாளும்

கண்கள் நீதிமானை பார்க்கின்றன
செவிகள் மன்றாட்டை கேட்கின்றன
இடுக்கண் நீக்கி விடுவுக்கின்றீர்
இறுதிவரை நீர் நடத்திச் செல்வீர் -அவமானம்

உடைந்த நொந்த உள்ளத்தோடு
கூடவே இருந்து பாதுகாக்கின்றீர்
அநேக துன்பங்கள் சேர்ந்து வந்தாலும்
அனைத்தினின்றும் நீர் விடுவிக்கின்றீர்

நல்லவர் இனியவர் என் ஆண்டவர்
நாளெல்லாம் சுவைத்து மகிழ்கின்றேன்
உண்மையாய்க் கர்த்தரைத் தேடும் எனக்கு
ஒரு நன்மையும் குறைவதில்லையே

Sunday, 10 March 2019

கிருபையுள்ள கரங்கள்!

"தாம் மகிமைக்காக எத்தனமாக்கின கிருபாபாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தைத் தெரியப்படுத்தவும் சித்தமானார்" (ரோமர். 9:23).

கிருபையுள்ள தேவனின் கரங்கள், உங்கள் ஒவ்வொருவரையும் கிருபையின் பாத்திரங்களாகவே வனைகின்றன. கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வசனத்தைப் பாருங்கள். "நீ எழுந்து, குயவன் வீட்டிற்குப்போ; அங்கே என் வார்த்தைகளை உனக்குத் தெரிவிப்பேன்" என்றார். "அப்படியே நான் குயவன் வீட்டிற்குப் போனேன்; இதோ, அவன் திரிகையினாலே வனைந்துகொண்டிருந்தான். குயவன் வனைந்து கொண்டிருந்த மண்பாண்டம், அவன் கையிலே கெட்டுப்போயிற்று; அப்பொழுது அதைத் திருத்தமாய்ச் செய்யும்படிக்கு, தன் பார்வைக்குச் சரியாய்க் கண்டபடி குயவன் அதைத் திரும்ப வேறே பாண்டமாக வனைந்தான்" (எரே. 18:2-4).

குயவன், உடைந்து போன மண்பாண்டத்தை தூக்கியெறிந்து விடவில்லை. அதை மிகுந்த ஜாக்கிரதை யோடு, அதிலுள்ள கற்களையும், தூசிகளையும் நீக்கி விட்டு, மீண்டும் அதில் தண்ணீர் விட்டுக் குழைத்து, மறுபடியும் அதை வேறே பாண்டமாக உருவாக்கினான். அந்த மண்ணுக்கு அந்தக் குயவன் கிருபை செய்தபடியினாலே, தூர எறிந்துவிடாமல், அழகிய புதிய பாத்திரமாக உருவாக்கினான்.

பூமியிலிருந்து எடுக்கப்பட்ட மண்ணை, கர்த்தர் தம்முடைய சாயலின்படியேயும், தம்முடைய ரூபத்தின்படியேயும் வனைந்தார். ஆனால் அதுவோ கெட்டுப் போயிற்று. விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்ததால், வஞ்சித்த சர்ப்பத்தைப் பார்த்து: "சகல நாட்டு மிருகங்களிலும், சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய்" என்ற கர்த்தர், மனுஷனை "வேண்டாம்" என்று ஒதுக்கிவிடவில்லை. கல்வாரியின் இரத்தத்தை ஊற்றி, சிலுவையின் புண்ணியத்தினாலே மீண்டும் அவனை கனத்தினாலும், மகிமையினாலும் நிரப்பி, வனையச் சித்தமானார். அதுதான், "தேவனுடைய கிருபை."

ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த தாவீதை கர்த்தர் கண்டு, வனைந்து உருவாக்கி, இஸ்ரவேலின்மேல் ராஜாவாய் அபிஷேகம் பண்ணினார். ஆனால் அவரோ, அரண்மனை உப்பரிகையிலே உலாவி, விபச்சாரத்திலே விழுந்து, பத்சேபாளின் கணவனைக் கொலை செய்து, முடிவில் தேவ சாபத்திற்குள்ளானார். அப்போது தாவீது கர்த்தரிடத்தில், "தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும்" என்று மன்றாடினார் (சங். 51:1). கர்த்தரோ கிருபையாகத் தம் கரத்தை நீட்டி, மீண்டும் அவரை வனைந்தார். தாவீதின் சந்ததியிலே, "இயேசுகிறிஸ்து" பிறக்கச் சித்தமானார்.

நீங்கள் ஒரு உடைந்த பாத்திரமாயிருக்கலாம். "நான் கண்ணீரின் பாத்திரமாய் வாழுகிறேனே" என்று கதறலாம். இதோ, கர்த்தர் மீண்டும் உங்களுக்குக் கிருபை பாராட்டி, உங்களை உருவாக்கச் சித்தமுள்ளவராயிருக்கிறார். "உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி, என்னை உருவாக்கிற்று; உம்முடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்கும்" (சங். 119:73).

நகோமியினுடைய வாழ்க்கை உடைந்து போனபோது, கர்த்தர் மீண்டும் வனைந்து உருவாக்கவில்லையா? யோபுவுக்குக் கர்த்தர் கிருபை பாராட்டி, அவரை மீண்டும் உருவாக்கி, இரட்டிப்பான ஆசீர்வாதத்தைக் கொடுக்கவில்லையா? தேவபிள்ளைகளே, அப்படியே உங்களையும் வனைந்து உருவாக்கி, இரட்டிப்பான ஆசீர்வாதங்களைத் தந்தருளுவார்.

நினைவிற்கு :- "கர்த்தருடைய கரம் அதைச் செய்தது என்றும், இஸ்ரவேலின் பரிசுத்தர் அதைப் படைத்தார் என்றும், யாவரும் கண்டு உணர்ந்து சிந்தித்து அறிவார்கள்" (ஏசாயா 41:20). 

உழைப்பாளியான ரூபவதி

"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…" - பிரசங்கி 9:10   செல்வமும், களியாட்டுகளும், புகழும், பெருமைய...