Friday 19 April 2019

சிலுவை மட்டும் உம்மை தாழ்த்தீனீர்

சிலுவை மட்டும் உம்மை தாழ்த்தீனீர்
சிங்காசனம் வரை என்னை உயர்த்தினீர் -2
சுயநலமில்லா சிலுவையின் அன்பு
கல் மனம் கரைத்திடுதே -2

 முள்முடி சிரசினில் சூடியே
உம்மையே தரித்திரராக்கினீர் -2
எந்தன் சாபம் எல்லாம் நீக்கி
என்னை உயர்த்தினீரே -2  - (சிலுவை மட்டும்)

 பாடுகள் நீர் எனக்காய் சகித்து
உம்  இரத்தம் எல்லாம் நீர் சிந்தினீர் -2
எந்தன் பாவம் எல்லாம் போக்கி
என்னை இரட்சித்தீரே -2 - (சிலுவை மட்டும்)

சிலுவையை நீர் எனக்காய் சுமந்து
தழும்புகளை நீர் எனக்காய் தரித்தீர் -2
என் பலவீனம் எல்லாம் மாற்றி
என்னை வாழ்வித்தீரே -2  - (சிலுவை மட்டும்)

அழகானவரே அலங்கோலமானீரே எனக்காக

அழகானவரே அலங்கோலமானீரே எனக்காக
அழகானவரே அலங்கோலமானீரே எனக்காக
குருத்தானவரே குருதியற்றீரே எனக்காக
குருத்தானவரே குருதியற்றீரே எனக்காக
உம் அன்பிற்கு ஈடே இல்லை
உம் பாசத்திற்கு அளவே இல்லை
இதற்கு ஈடாய் நான் என்ன செய்வேன்
உம் அன்பை சொல்வேன்
உலகெங்கும் சொல்வேன்
உம் அன்பை சொல்வேன்
உலகெங்கும் சொல்வேன்

1.என் பாவ சிந்தையால் அன்றோ
உம் சிரசில் முள்மூடி
என் பாவ பாதையால் அன்றோ
உம் பாதத்தில் ஆணிகள்
இயேசுவே என்னை மன்னியும்
இயேசுவே என்னை மன்னியும் -
அழகானவரே அலங்கோலமானீரே எனக்காக அப்பா

2. என் பாவ செய்கையால் அன்றோ
உம் கைகளில் ஆணிகள்
என் பாவ இதயத்தால் அன்றோ
உம் விலாவில் ஈட்டி
இயேசுவே என்னை மன்னியும்
இயேசுவே என்னை மன்னியும்

சிலுவை அன்பை உணராயோ

சிலுவை அன்பை உணராயோ                 
இயேசுவின் பாடுகள் அறியாயோ       
நல் மீட்பர் உன் பாவம் நீக்கி சுத்திகரிக்க
மரித்தார் நீ ஓடி வாராயோ

ஓடி வா உன் நேசரண்டையே   
பாவம் தீர்க்கும் ஊற்றண்டையே
போக்குவார் உன் பாவக்கறையை
அளிப்பார் சமாதானத்தை

நீ சீர் கெட்டு போனதினாலே       
பாவ ரோகங்கள் சாபங்களும் சூழ்ந்ததே
யாவும் தன்னில் சுமந்தே உன்னை ஆசிர்வத்தித்தார்
மரித்தார் நீ ஓடி வாராயோ – ஓடி வா

இரத்த காயங்களும் குத்துகளும் நிறைந்து     
முள்முடியும் சிரசினில் அரைந்து 
கை கால்கள் கூர் ஆணிகளால் அடிக்கப்பட்டு
மரித்தார் நீ ஓடி வாராயோ – ஓடி வா

சிலுவை அன்பை உணர்ந்தேனே         
இயேசுவின் பாடுகள் அறிந்தேனே 
நல் மீட்பர் உன் பாவம் நீக்கி சுத்திகரிக்க
மரித்தார் நீ ஓடி வந்தேனே...ஓடி வா

ஓடி வந்தேனே என்  நேசரண்டையே           
பாவம் தீர்க்கும் ஊற்றின்னண்டையே
போக்கினார்  என் பாவக்கறையை
அளித்தார்  சமாதானத்தையே

இவர்களுக்கு மன்னியும்!

"அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்" (லூக்கா 23:34).

இயேசு சிலுவையிலே அவமானப்படுத்தப்பட்டு, காயப்படுத்தப்பட்டு, மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு, ஜீவனை இழக்கும் தருவாயிலும், "பிதாவே இவர்களுக்கு மன்னியும்" என்று மன்றாடினார். மிகக்கடினமான சூழ்நிலையிலும், வேதனைகளுக்கு மத்தியிலும் அதற்குக் காரணமானவர்களை மன்னிக்கும் சுபாவம், இயேசுகிறிஸ்துவை மேன்மையடையச் செய்தது.

சில சமயங்களில், உங்களுக்கு மற்றவர்களைப் பழிக்குப்பழி வாங்கும் எண்ணமும், தீமைக்குத் தீமை செய்யும் நினைவுமே மேலோங்கி நிற்கும். இது மனித சுபாவம் தான். ஆனாலும், இயேசுகிறிஸ்து மனித ரூபமெடுத்து சிலுவையில் மரிக்கும்போது, பகைவர்களை மன்னிக்கும் முன்மாதிரியை உங்களுக்குக் காண்பித்தார்.

உங்களில் அன்பு கூருவதற்காக, இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் பிறந்தார். அவர் மரணத் தருவாயிலும், மன்னிக்கும் சுபாவமுள்ளவராகவே காணப்பட்டார். இது, அவர் விட்டுச் சென்ற அடிச்சுவடு. உங்களில் அது பிரதிபலிக்கும்படியாக, அவர் காட்டிய பாதை. நீங்கள் அதற்கூடாக நடந்து செல்லுகிறீர்களா? அல்லது அதை விட்டு வழி விலகிச் செல்லுகிறீர்களா?

இயேசுகிறிஸ்து ஒருவரே, உங்கள் பாவங்களை மன்னிக்கிறவர். அவரின் நாமத்தினிமித்தம், உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. ஏனெனில் எல்லா நாமங்களுக்கும் மேலான நாமம் கிறிஸ்துவின் நாமம். "இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது" (எபி. 9:22).

உங்கள் வாழ்வில் ஏற்படும் தவறுகளிலும் உங்களுக்கு மன்னிப்பு அவசியமாய் இருக்கிறது. அது உங்கள் குடும்ப வாழ்க்கையானாலும் சரி, வேலை இடங்களானாலும் சரி, உறவினர் மத்தியிலும், நண்பர்களுக்கிடையேயானாலும் சரி, உங்கள் தவறுகளை நீங்கள் உணர்ந்து மனந்திரும்பும்போது, கர்த்தர் உங்களை மன்னித்து ஆசீர்வதிப்பார்.

"குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை" என்று நீதி. 19:11 சொல்லுகிறது. நீங்கள் மற்றவர்களை மன்னிக்கும்போது, இயேசுகிறிஸ்து உங்கள் குற்றங்களை மன்னித்து, பரலோகத்தை நீங்கள் சுதந்தரிக்கும்படிச் செய்வார்.

"மனுஷனுடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்." (மத். 6:14,15).

தேவபிள்ளைகளே, மற்றவர்கள் உங்களுக்கு எதிராக செய்கிற தவறுகளை நீங்கள் மன்னித்து மறந்துவிடவேண்டும். அதின் கசப்பு, அடிமனதினில் வேரூன்றி ஆழமாய் பதிய விடவேக் கூடாது. உங்களுக்குள் எப்படிப்பட்ட சுபாவங்கள் உண்டு? மற்றவர்கள் செய்த குற்றங்கள், தவறுகள், பிழைகளை மன்னிக்கிறவர்களாக இருக்கிறீர்களா?

நினைவிற்கு :- "நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது, ஒருவன் பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள். நீங்கள் மன்னியாதிருப்பீர்களானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவும் உங்கள் தப்பிதங்களை மன்னியாதிருப்பார்" (மாற்கு 11:25,26). 

சோர்ந்து போகாதே மனமே

"பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதிதேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது. சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப் பண்ணுகிறார்".
(ஏசாயா 40:28,29)

ஏசாயா தீர்கதரிசி கூறுகிறார், பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதிதேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார். இந்த நாட்களில் நாம் சோர்ந்து போகிறோமா? இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழுவார்கள்.  கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள். ஆம் கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.
(ஏசாயா 40:30,31)

ஒருவேளை நாம் பலவித சந்தர்ப்பங்களில் சோர்ந்து போகலாம் தேவன் கூறுகிறார் சோர்ந்து போகாதே என்று சோர்ந்து போகிறவனுக்கு பெலன் கொடுக்கிற தேவன் நம்மோடு கூட உண்டு இந்த நாட்களில் நாம் சோர்ந்து காணப்படுகிறோமா? நாம் சோர்ந்து போவது தேவனுடைய விருப்பம் இல்லை மத்தேயு 15 ம் அதிகாரம் 32 ம் வசனத்தை படிக்கும் போது பின்பு, இயேசு தம்முடைய சீஷர்களை அழைத்து: ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன், இவர்கள் என்னிடத்தில் மூன்றுநாள் தங்கியிருந்து சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிட எனக்கு மனதில்லை, வழியில் சோர்ந்துபோவார்களே என்றார்.

ஆம்,
நாம் சோர்ந்து போவது நம் தேவனுக்கு பிரியம் இல்லாதகாரியம் நம்முடைய சோர்வுக்காக அவர் பரிதபிக்கிற கர்த்தராக இருக்கிறார்.
இந்த நாட்களில் சோர்ந்து போகாதே எதற்காக சோர்வு?

எலியா தீர்க்கதரிசி தன் ஊழியத்தில் சோர்ந்து போனபோது, தேவன் எத்தனை கரிசனையாய் அவரை உயிர்ப்பிக்கிறார்! எலியா வனாந்தரத்தில் ஒருநாள் பிரயாணம் போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று கோரி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப்பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொல்லி,  ஒரு சூரைச்செடியின்கீழ்ப் படுத்துக்கொண்டு நித்திரைபண்ணினான்; அப்பொழுது ஒரு தூதன் அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு என்றான்
(1 இராஜாக்கள் 19:4,5).

இது போன்ற சூழ்நிலைகளில் நாமும் கூட அடிக்கடி கடந்து சென்றிருக்கிறோம் அல்லவா?

வாழ்க்கையிலும் ஊழியத்திலும் வருகிற பாடுகளை கண்டு, நம்முடைய ஜீவிததில் பாடுகளை கண்டு 'போதும் ஆண்டவரே, என் ஆத்துமாவை எடுத்து கொள்ளும். நான் என் பிதாக்களை பார்க்கிலும் நல்லவன் அல்ல' என நம் உள் மனதும் சொல்வதுண்டு. நாம் ஊழிய பாதையில் படும் சில பாடுகள் நம்மை அத்தனையாய் நினைக்கவும், போதும் இந்த ஊழியம் என்று சொல்லவும் வைத்தாலும் நம்மை அழைத்த கர்த்தர் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார் என்கிற நம்பிக்கை நமக்கு எப்போதும் இருக்க வேண்டும். உங்களுடைய தாலந்துகளை கர்த்தருக்கென்று இன்னும் வைராக்கியமாக உபபோயகப்படுத்துங்கள்! இன்னும் கர்த்தருக்கென்று வைராக்கியமாய் உழையுங்கள். சோர்வுகளை கண்டு மனம் தளர்ந்து போகாதிருங்கள். இயேசு கிறிஸ்து நம்மோடு இருக்கின்றார்.!.

#ஆமென்.!. #அல்லேலுயா.!!.

Sunday 14 April 2019

வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் || Varushathai nanmaiyaal mudisootum

G-Major---4/4---Ballad---Tempo-120 வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தெய்வமே வற்றாத கிருபைகளால் என்னை என்றும் நடத்திடுமே-2 தடைப்பட்ட நன்மைகள் இந்த ஆண்டு நடந்திடுமே அடைக்கப்பட்ட கதவுகள் எல்லாம் இந்த ஆண்டு திறந்திடுமே-2 மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை-2 எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை-2 அவர் தமது ஐஸ்வர்யத்தால் என் குறைவை நிறைவாய் மாற்றி-2 என் வாயை நன்மையால் திருப்தி ஆக்கும் நல்ல வருஷம்-2 மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை-2 எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை-2 அவர் எனக்காய் சிலுவைதனிலே அனைத்தையும் செய்து முடித்தார்-2 அவர் எனக்காய் சொன்னதை நிச்சயமாய் (நிச்சயமாக) செய்து முடிப்பார்-2 மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை-2 எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை-2 வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தெய்வமே வற்றாத கிருபைகளால் என்னை என்றும் நடத்திடுமே-2 தடைப்பட்ட நன்மைகள் இந்த ஆண்டு நடந்திடுமே அடைக்கப்பட்ட கதவுகள் எல்லாம் இந்த ஆண்டு திறந்திடுமே-2 மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை-2 எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை-2- (2) Varushathai nanmaiyaal mudisootum deivamae Vatraadha kirubaigalal ennai endrum nadathidumae-2 Thadaipatta nanmaigal indha aandu nadandhidumae Adaikapatta kadhavugal ellam indha aandu thirandhidumae -2 Magimai mel magimai ennai marurubam aakum magimai-2 Endhan vazhvai maatridum maaraadha unthan magimai-2 1.Avar thamadhu aiswaryathal En kuraivai niraivaai maatri-2 En vaayai nanmaiyaal Thripthi aakum nalla varusham-2 Magimai mel magimai ennai marurubam aakum magimai-2 Endhan vazhvai maatridum maaraadha unthan magimai-2 2. Avar enakaai siluvaidhanilae Anaithayum seidhu mudithaar-2 Avar enakaai sonnadhai Nichayamai (Nichayamaga) seidhu mudipaar-2 Magimai mel magimai ennai marurubam aakum magimai-2 Endhan vazhvai maatridum maaraadha unthan magimai-2 Varushathai nanmaiyaal mudisootum deivamae Vatraadha kirubaigalal ennai endrum nadathidumae-2 Thadaipatta nanmaigal indha aandu nadandhidumae Adaikapatta kadhavugal ellam indha aandu thirandhidumae -2 Magimai mel magimai ennai marurubam aakum magimai-2 Endhan vazhvai maatridum maaraadha unthan magimai-2-(2) Chords: G-Major G வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தெய்வமே G வற்றாத கிருபைகளால் என்னை என்றும் நடத்திடுமே-2 D C தடைப்பட்ட நன்மைகள் இந்த ஆண்டு நடந்திடுமே D C (G) அடைக்கப்பட்ட கதவுகள் எல்லாம் இந்த ஆண்டு திறந்திடுமே-2 G Am G(Bm) C மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை Am D Em Am(G) எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை-2 G அவர் தமது ஐஸ்வர்யத்தால் G என் குறைவை நிறைவாய் மாற்றி-2 Am என் வாயை நன்மையால் (D) Em(G) திருப்தி ஆக்கும் நல்ல வருஷம்-2 G Am G(Bm) C மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை Am D Em Am(G) எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை-2 G அவர் எனக்காய் சிலுவைதனிலே C(G) அனைத்தையும் செய்து முடித்தார்-2 Am அவர் எனக்காய் சொன்னதை D Em(G) Am நிச்சயமாய் (நிச்சயமாக) செய்து முடிப்பார்-2 G Am G(Bm) C மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை Am D Em Am(G) எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை-2 G வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தெய்வமே G வற்றாத கிருபைகளால் என்னை என்றும் நடத்திடுமே-2 D C தடைப்பட்ட நன்மைகள் இந்த ஆண்டு நடந்திடுமே D C (G) அடைக்கப்பட்ட கதவுகள் எல்லாம் இந்த ஆண்டு திறந்திடுமே-2 G Am G(Bm) C மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை Am D Em Am(G) எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை-2-(2)
Show less

உழைப்பாளியான ரூபவதி

"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…" - பிரசங்கி 9:10   செல்வமும், களியாட்டுகளும், புகழும், பெருமைய...