Monday, 1 July 2019

Saronin Rojavaam Lyrics || சரோனின் ரோஜாவாம் என் திவ்விய நேசரே || Tamil Christian Song

https://www.youtube.com/watch?v=izYTxUEfSKU

சரோனின் ரோஜாவாம் என் திவ்விய நேசரே
என் சொந்தம் நீர் தான் அல்லவோ  2
உம்மைப்போல் நேசிக்க யாருண்டு பூவினில்
நன்றியால் நிறைந்துள்ளம் பாடுவேன்  2

வனாந்தரத்திலே என் வழியாய் வந்தீர்
வான்திறந்து ஆசிர் நல்கினீரே 2
பின்னானவைகளை மறந்து
முன்னானவைகளை தொடர்வேன் 2

தீங்கு நாளில் என்னை கூடாரத்தில்
மறைத்து கிருபையாய் காத்தீறன்றோ 2
கன்மலையாய் உம்மில் மறைந்து
நன் செயலை என்றும் கூறுவேன் 2

அக்கினி சோதனை வந்த வேலை
சிநேகத்தின் தழல் என்னில் எரியசெய்தீர் 2
துரோகத்தால் வாடிய வேலை
வார்த்தையால் சுகமதை ஈந்தீனிரே 2

பரிசுத்த ஆவியால் நிறைத்து என்னையே
பரிசுத்த ஆலயம் ஆக்கினீரே 2
பரிசுத்தர் உம்மைப்போல் ஜீவிக்க
பரிசுத்த உபதேசம் நள்கினீர் 2

குற்றம் குறை யாவும் போக்கிடுவீர்
முற்றும் என்னை மாற்றும் உம்சாயலாய் 2
என்னில் நீர் வெளிப்படும் வேலை
முக முகமாய் உம்மை காணுவேன் 2



உழைப்பாளியான ரூபவதி

"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…" - பிரசங்கி 9:10   செல்வமும், களியாட்டுகளும், புகழும், பெருமைய...