Friday, 11 September 2020

விட்டுக்கொடுக்கலையே ll தமிழ் கிருஸ்துவ பாடல் வரிகள்



விட்டுக்கொடுக்கலையே

விட்டுக்கொடுக்கலையே

சாத்தான் கையிலும்

மனுஷன் கையிலும்

விட்டுக்கொடுக்கலையே-2


கொஞ்சம் கூட நினைச்சி பாக்கல

என்னைத்தேடி வந்தீங்க

எந்த மனுஷன் உதவுல

நீங்க வந்து நின்னீங்க-2

                - விட்டுக்கொடுக்கலையே


1.கலங்கின என்னை கண்டு

கடல் மேல நடந்து வந்து

காற்றையும் கடலை அதற்றி

கரை சேர்த்தீங்க- 2


அற்ப விசுவாசம் நிறைந்த என் வாழ்க்கையில

அற்புதம் செய்பவராய் வந்து விட்டீங்க


என்னை ஆற்றி தேற்றி அரவணைச்சீங்க

நல்ல தகப்பனாக தூக்கி சுமந்தீங்க

                     - என்னை விட்டுக்கொடுக்கலையே


2.கல்லெறியும் மனிதர் முன்பு

கறைபட்ட வாழ்வைக்கண்டு

கல்லெறிய விடாமல் என்னை 

காத்துக்கொண்டீங்க-2


பாவம் நிறைந்த இருளான வாழ்க்கையில 

ஆக்கினைத்தீர்க்காமல் ஆதரித்தீங்க


என்னை ஆற்றி தேற்றி அரவணைச்சீங்க

நல்ல தகப்பனாக தூக்கி சுமந்தீங்க

                   - என்ன விட்டுக்கொடுக்கலையே

யோபு 5 : 9


 

சங்கீதம் 29 : 11


 

Psalms Chapter 1 ll English Bible ll Jesus Songs & Bible ll Mission for the Blind


 

Thursday, 10 September 2020

இயேசுவே என் இயேசுவே ll தமிழ் கிருஸ்துவ பாடல் வரிகள்

 இயேசுவே என் இயேசுவே

நீர் இல்லாமல் எனக்கு யாருமில்லையே

 

நான் செய்த பாவங்கள் பல ஆயிரம்

உம் இரத்தத்தால் என்னை மீட்டுக்கொண்டீரே

நன்றி இயேசுவே -4

 

பெலனில்லாமல் நான் நின்ற வேளையில்

உம் பெலத்தாலே என்னை தாங்கி கொண்டீரே

உம் பெலன் போதுமே -4

 

பாதை தெரியாமல் நான் அழுத வேளையில்

கண்ணீரை துடைத்து எந்தன் கரம் பிடித்தீரே

யாருமில்லை என்று ஏங்கும் நேரத்தில்

தோழனை போல் தோன்றி தோள் கொடுத்தீரே

உம் அன்பு போதுமே

உம் துணை போதுமே -2

Monday, 1 July 2019

Saronin Rojavaam Lyrics || சரோனின் ரோஜாவாம் என் திவ்விய நேசரே || Tamil Christian Song

https://www.youtube.com/watch?v=izYTxUEfSKU

சரோனின் ரோஜாவாம் என் திவ்விய நேசரே
என் சொந்தம் நீர் தான் அல்லவோ  2
உம்மைப்போல் நேசிக்க யாருண்டு பூவினில்
நன்றியால் நிறைந்துள்ளம் பாடுவேன்  2

வனாந்தரத்திலே என் வழியாய் வந்தீர்
வான்திறந்து ஆசிர் நல்கினீரே 2
பின்னானவைகளை மறந்து
முன்னானவைகளை தொடர்வேன் 2

தீங்கு நாளில் என்னை கூடாரத்தில்
மறைத்து கிருபையாய் காத்தீறன்றோ 2
கன்மலையாய் உம்மில் மறைந்து
நன் செயலை என்றும் கூறுவேன் 2

அக்கினி சோதனை வந்த வேலை
சிநேகத்தின் தழல் என்னில் எரியசெய்தீர் 2
துரோகத்தால் வாடிய வேலை
வார்த்தையால் சுகமதை ஈந்தீனிரே 2

பரிசுத்த ஆவியால் நிறைத்து என்னையே
பரிசுத்த ஆலயம் ஆக்கினீரே 2
பரிசுத்தர் உம்மைப்போல் ஜீவிக்க
பரிசுத்த உபதேசம் நள்கினீர் 2

குற்றம் குறை யாவும் போக்கிடுவீர்
முற்றும் என்னை மாற்றும் உம்சாயலாய் 2
என்னில் நீர் வெளிப்படும் வேலை
முக முகமாய் உம்மை காணுவேன் 2



உழைப்பாளியான ரூபவதி

"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…" - பிரசங்கி 9:10   செல்வமும், களியாட்டுகளும், புகழும், பெருமைய...