Monday, 28 September 2020

1நாளாகமம் 28,29 அதிகாரங்கள் மற்றும் ரோமர் 8 வது அதிகாரம் வேத வினா விடை

 வேதப்பகுதி : 1நாளாகமம் 28,29  அதிகாரங்கள் மற்றும் ரோமர் 8வது அதிகாரம்

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥


 🖍🖍 கேள்விகள்.


✍️✍️1. நாம் தேவனை எப்படி சேவிக்க வேண்டும்❓


✍️✍️2. எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறவர் யார் ❓


✍️✍️3. நீ அவரைத் தேடினால் உனக்குத் ➖➖➖➖➖➖; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் ➖➖➖➖➖➖.


✍️✍️4. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, சதாகாலங்களிலும் தேவரீருக்கு ➖➖➖➖➖➖ உண்டாவதாக.


✍️✍️5. கர்த்தாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் ➖➖➖➖➖➖.


✍️✍️6. கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் ➖➖➖➖➖➖.


✍️✍️7. கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் ➖➖➖➖➖➖, ஆவியானது நீதியினிமித்தம் ➖➖➖➖➖➖ இருக்கும்.


✍️✍️8. மாம்சத்தின்படி பிழைப்பதற்கு நாம் மாம்சத்துக்குக் ➖➖➖➖➖➖.


✍️✍️9. மாம்சத்தின்படி பிழைத்தால் ➖➖➖➖➖➖; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் ➖➖➖➖➖➖.


✍️✍️10. எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய ➖➖➖➖➖➖.

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

✍️✍️  என் தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக..! ஆமென்..! அல்லேலூயா..!✍️✍️

Thursday, 24 September 2020

நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது

பல நன்மை செய்த இயேசுவுக்கே

நன்றி நன்றி நன்றி என்று

சொல்லி நான் துதிப்பேன்

நாள் தோறும் போற்றுவேன்

- நன்றி


1. எத்தனையோ நன்மைகளை என் வாழ்வில்

செய்தாரே ஏராளமாய் நன்றி சொல்வேன்

அத்தனையும் நினைத்து நினைத்து

நான் துதிப்பேன் ஆண்டவரை போற்றுவேன்

- நன்றி


2. மரண பள்ளத்தாக்கில் நான் நடக்கும்

போதெல்லாம் பாதுகாத்தீர் ஐயா

மீண்டும் ஜீவனை கொடுத்து

நீர் என்னை வாழ வைத்தீர் ஐயா

- நன்றி


3. தேவன் அருளிய சொல்லி முடியாத

ஈவுகளுக்காய் ஸ்தோத்திரம்

அளவில்லாத அவரின் கிருபைகளுக்காய்

ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம்

- நன்றி

Sunday, 20 September 2020

தாசரே இத்தரணியை அன்பாய் ll தமிழ் கிருஸ்துவ பாடல் வரிகள்

Dasare Itharaniyai Anbai – தாசரே இத்தரணியை அன்பாய்

Dasare Itharaniyai Anbai

தாசரே இத்தரணியை அன்பாய்
இயேசுவுக்குச் சொந்தமாக்குவோம்

நேசமாய் இயேசுவைக் கூறுவோம்
அவரைக் காண்பிப்போம்
மாஇருள் நீக்குவோம்
வெளிச்சம் வீசுவோம்

1. வருத்தப்பட்டு பாரஞ் சுமந்தோரை
வருந்தியன்பாய் அழைத்திடுவோம்
உரித்தாய் இயேசு பாவ பாரத்தை
நமது துக்கத்தை நமது துன்பத்தை சுமந்து தீர்த்தாரே

2. பசியுற்றோர்க்கும் பிணியாளிகட்கும்
பட்சமாக உதவி செய்வோம்
உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து இயேசு கனிந்து திரிந்தனரே

3. நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
நீசரை நாம் உயர்த்திடுவோம்
பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்
நிஷ்டூரத்துக்குள் படுகுழிக்குள் விழுந்தனரே

4.இந்துதேச மாது சிரோமணிகளை
விந்தை யொளிக்குள் வரவழைப்போம்
சுந்தர குணங்களடைந்து அறிவிலுயர்ந்து
நிர்ப்பந்தங்கள் தீர்ந்து சிறந்திலடங்கிட

5. மார்க்கம் தப்பி நடப்போரை சத்திய
வழிக்குள் வந்திட சேர்த்திடுவோம்
ஊக்கமாய் ஜெபித்திடுவோம் நாம்
முயன்றிடுவோம் நாம் ஜெயித்திடுவோம்

Dasare Itharaniyai Anbai – தாசரே இத்தரணியை அன்பாய் Lyrics in English

Dasare Itharaniyai Anbai

thaasarae iththaranniyai anpaay
Yesuvukkuch sonthamaakkuvom

naesamaay Yesuvaik kooruvom
avaraik kaannpippom
maairul neekkuvom
velichcham veesuvom

1. varuththappattu paaranj sumanthorai
varunthiyanpaay alaiththiduvom
uriththaay Yesu paava paaraththai
namathu thukkaththai namathu thunpaththai sumanthu theerththaarae

2. pasiyuttaோrkkum pinniyaalikatkum
patchamaaka uthavi seyvom
usitha nanmaikal nirainthu thamai maranthu Yesu kaninthu thirinthanarae

3. nerukkappattu odukkappattaோrai
neesarai naam uyarththiduvom
porukka vonnnnaa kashdaththukkul
nishtooraththukkul padukulikkul vilunthanarae

4.inthuthaesa maathu siromannikalai
vinthai yolikkul varavalaippom
sunthara kunangalatainthu ariviluyarnthu
nirppanthangal theernthu siranthiladangida

5. maarkkam thappi nadapporai saththiya
valikkul vanthida serththiduvom
ookkamaay jepiththiduvom naam
muyantiduvom naam jeyiththiduvom

PowerPoint Presentation Slides for the song Dasare Itharaniyai Anbai – தாசரே இத்தரணியை அன்பாய்

by clicking the fullscreen button in the Top left

Song Lyrics in Tamil & English

Dasare Itharaniyai Anbai
Dasare Itharaniyai Anbai

தாசரே இத்தரணியை அன்பாய்
thaasarae iththaranniyai anpaay
இயேசுவுக்குச் சொந்தமாக்குவோம்
Yesuvukkuch sonthamaakkuvom

நேசமாய் இயேசுவைக் கூறுவோம்
naesamaay Yesuvaik kooruvom
அவரைக் காண்பிப்போம்
avaraik kaannpippom
மாஇருள் நீக்குவோம்
maairul neekkuvom
வெளிச்சம் வீசுவோம்
velichcham veesuvom

1. வருத்தப்பட்டு பாரஞ் சுமந்தோரை
1. varuththappattu paaranj sumanthorai
வருந்தியன்பாய் அழைத்திடுவோம்
varunthiyanpaay alaiththiduvom
உரித்தாய் இயேசு பாவ பாரத்தை
uriththaay Yesu paava paaraththai
நமது துக்கத்தை நமது துன்பத்தை சுமந்து தீர்த்தாரே
namathu thukkaththai namathu thunpaththai sumanthu theerththaarae

2. பசியுற்றோர்க்கும் பிணியாளிகட்கும்
2. pasiyuttaோrkkum pinniyaalikatkum
பட்சமாக உதவி செய்வோம்
patchamaaka uthavi seyvom
உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து இயேசு கனிந்து திரிந்தனரே
usitha nanmaikal nirainthu thamai maranthu Yesu kaninthu thirinthanarae

3. நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
3. nerukkappattu odukkappattaோrai
நீசரை நாம் உயர்த்திடுவோம்
neesarai naam uyarththiduvom
பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்
porukka vonnnnaa kashdaththukkul
நிஷ்டூரத்துக்குள் படுகுழிக்குள் விழுந்தனரே
nishtooraththukkul padukulikkul vilunthanarae

4.இந்துதேச மாது சிரோமணிகளை
4.inthuthaesa maathu siromannikalai
விந்தை யொளிக்குள் வரவழைப்போம்
vinthai yolikkul varavalaippom
சுந்தர குணங்களடைந்து அறிவிலுயர்ந்து
sunthara kunangalatainthu ariviluyarnthu
நிர்ப்பந்தங்கள் தீர்ந்து சிறந்திலடங்கிட
nirppanthangal theernthu siranthiladangida

5. மார்க்கம் தப்பி நடப்போரை சத்திய
5. maarkkam thappi nadapporai saththiya
வழிக்குள் வந்திட சேர்த்திடுவோம்
valikkul vanthida serththiduvom
ஊக்கமாய் ஜெபித்திடுவோம் நாம்
ookkamaay jepiththiduvom naam
முயன்றிடுவோம் நாம் ஜெயித்திடுவோம்
muyantiduvom naam jeyiththiduvom

 

Saturday, 12 September 2020

தமிழ் கிருஸ்துவ கீர்த்தனைகள் பாடல் புத்தகங்கள் PDF பதிவிறக்கம்

 





உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்-2 ll தமிழ் கிருஸ்துவ பாடல் வரிகள்

 உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்-2

என் நாட்கள் முடியும் வரை

என் ஜீவன் பிரியும் வரை

என் சுவாசம் ஒழியும் வரை

உம்மையே ஆராதிப்பேன்

உம்மையே ஆராதிப்பேன் -2


1. தாயின் கருவில் உருவாகும் முன்னே

பேர் சொல்லி அழைத்தவர் நீரே

தாயினும் மேலாக அன்பு வைத்து

நீர் எனக்காக ஜீவன் தந்தீரே -2


என் நாட்கள் முடியும் வரை

என் ஜீவன் பிரியும் வரை

என் சுவாசம் ஒழியும் வரை

உம்மையே ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன்-2


2. எத்தனை முறை இடறினாலும்

அத்தனையும் மன்னித்தீரே

நன்மையையும் கிருபையும் தொடரச்செய்து

என்னய் மீண்டும் நடக்க வைத்தீர் -2


என் நாட்கள் முடியும் வரை

என் ஜீவன் பிரியும் வரை

என் சுவாசம் ஒழியும் வரை

உம்மையே ஆராதிப்பேன்

உம்மையே ஆராதிப்பேன்-2


3. பாவி என்றே என்னை தள்ளிடாமல்

அன்போடு அணைத்து கொண்டீரே

என்னயும் உம்முடன் சேர்த்துகொள்ள

நீர் எனக்காக மீண்டும் வருவீர் -2


என் நாட்கள் முடியும் வரை

என் ஜீவன் பிரியும் வரை

என் சுவாசம் ஒழியும் வரை

உம்மையே ஆராதிப்பேன்

உம்மையே ஆராதிப்பேன்-2

பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதே ll தமிழ் கிருஸ்துவ பாடல் வரிகள்

 பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதே

அலங்கார மனவாட்டியாய்

அழகாக ஜொலித்திடுதே


 1.எருசலேமே கோழி தன் குஞ்சுகளை

ஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன்

தாய்ப்பறவை துடித்திடும் பாசம் கண்டேன்

தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன் – கனிவான எருசலேமே


2.விடுதலையே விடுதலை விடுதலையே

லோகமதின் மோகத்தில் விடுதலையே

நானேயெனும் சுயவாழ்வில் விடுதலையே

நாதர் தனில் வாழ்வதால் விடுதலையே – சுயாதீன எருசலேமே 


3.ஜீவ தேவன் நகரினில் குடிபுகுந்தேன்

சீயோன் மலைச் சீருக்குச் சொந்தமானேன்

நீதி தேவன் நிழலடி சிரம் புதைத்தேன்

நீதிமான்கள் ஆவியில் மருவி நின்றேன் – மேலான எருசலேமே 

ஆமென் அல்லேலூயா (4)

Friday, 11 September 2020

சிலுவையில் இயேசுவை கண்டேன் ll தமிழ் கிருஸ்துவ பாடல் வரிகள்

 🗣️Song: Siluvaiyl yesuvai Kanden 

🎙️Singer: Sis. Beryl Natasha

✍ Lyrics : 👇


எத்தனை பாவம் என் மேல் பாரம் 

அறியாமல் அலைந்தேனே தூரம்

பாதையை மறந்து வழிதெரியாமல் 

கலங்கினேன் நான் பரிதாபம் – 2 


1️⃣சிலுவையில் இயேசுவை கண்டேன் 

அவர் கண்களில் கண்ணீரை கண்டேன் – 2

கரங்களை நீட்டி அழைக்கும் அன்பின் 

சத்தம் நானும் கேட்டேன்  - 2


2️⃣ஏன் என்னை தேடினீரோ

என் இதயம் அழுக்கானதோ – 2

கண்டிரே என் இயேசுவே

கரை சேரும் என்னை மாற்றியே – 2


3️⃣என்னை காணிக்கையை 

தருகிறேன் உம் கரத்தில்  - 2

வழிகாட்டும் என் இயேசுவே

உமக்காக நான் வாழ்ந்திடவே – 2

என் மனதில் பட்டவை 2

 மத்தேயு 20:31 ல் அவர்கள் பேசாதிருக்கும்படி ஜனங்கள் அவர்களை அதட்டினார்கள். அவர்களோ: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று அதிகமாய்க் கூப்பிட்டார்கள்.


ஜனங்கள் அதட்டினார்கள். ஆனால் குருடர்களோ அதிகமாய் கூப்பிட்டார்கள்.


நாம் எதை பேசினால் பிசாசு பயப்படுகிறானோ, அதை அதிகமாய் பேசும்போதே நமது கண்கள் திறக்கப்படுகின்றன.


ஜனங்கள் அதட்டுகிறார்கள் என்பதற்காக நாம் பேச வேண்டியதை பேசாமல் இருந்துவிட்டால், நாம் குருடாகவே வாழவேண்டியது தான்.


பிசாசு சிலுவையில் தோற்கடிக்கப்பட்டதையும், அவன் தலை சிலுவையில் நசுக்கப்பட்டதையும், அவன் வல்லமைகள் உரியப்பட்டதையும், நாம் பேசும் போதே பிசாசு பயப்படுகிறான், நமது கண்களும் திறக்கப்படும்.


இயேசு சிலுவையில் பெற்ற வெற்றிகளை நாம் பேசும்போதே, நமது வாழ்க்கையில் வெளிச்சம் உண்டாகிறது.

என் மனதில் பட்டவை

 சங்கீதம் 91:15 ல் ... ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.


உன்னதமானவரின் மறைவில் வாழ்பவனின் ஆசீர்வாதம் தான் இது. ஆபத்தில் நானே நானே நானே.. என்னா ஆறுதலான வார்த்தை !


நமது ஆபத்தில் அவரே நம்மோடு இருக்கும் போது, நமக்கு வேறென்ன வேணும் ! எந்த ஆபத்தும் அவரை மீறி நம்மை தொட்டுவிடுமா !


நமக்கு எதிராக கோலியாத்தே வந்தாலும் அவன் காலியாத்தான் போவான்.


நமக்கு எதிராய் பார்வோனே வந்தாலும், இனி அவனால் ஃபார்வேடாக(forward) முடியாது.


நாம் நமது ஆபத்தில் யாரை பார்க்கிறோம் என்பதை பொறுத்தே நமது வெற்றி அமைகிறது.

விட்டுக்கொடுக்கலையே ll தமிழ் கிருஸ்துவ பாடல் வரிகள்



விட்டுக்கொடுக்கலையே

விட்டுக்கொடுக்கலையே

சாத்தான் கையிலும்

மனுஷன் கையிலும்

விட்டுக்கொடுக்கலையே-2


கொஞ்சம் கூட நினைச்சி பாக்கல

என்னைத்தேடி வந்தீங்க

எந்த மனுஷன் உதவுல

நீங்க வந்து நின்னீங்க-2

                - விட்டுக்கொடுக்கலையே


1.கலங்கின என்னை கண்டு

கடல் மேல நடந்து வந்து

காற்றையும் கடலை அதற்றி

கரை சேர்த்தீங்க- 2


அற்ப விசுவாசம் நிறைந்த என் வாழ்க்கையில

அற்புதம் செய்பவராய் வந்து விட்டீங்க


என்னை ஆற்றி தேற்றி அரவணைச்சீங்க

நல்ல தகப்பனாக தூக்கி சுமந்தீங்க

                     - என்னை விட்டுக்கொடுக்கலையே


2.கல்லெறியும் மனிதர் முன்பு

கறைபட்ட வாழ்வைக்கண்டு

கல்லெறிய விடாமல் என்னை 

காத்துக்கொண்டீங்க-2


பாவம் நிறைந்த இருளான வாழ்க்கையில 

ஆக்கினைத்தீர்க்காமல் ஆதரித்தீங்க


என்னை ஆற்றி தேற்றி அரவணைச்சீங்க

நல்ல தகப்பனாக தூக்கி சுமந்தீங்க

                   - என்ன விட்டுக்கொடுக்கலையே

யோபு 5 : 9


 

சங்கீதம் 29 : 11


 

Psalms Chapter 1 ll English Bible ll Jesus Songs & Bible ll Mission for the Blind


 

Thursday, 10 September 2020

இயேசுவே என் இயேசுவே ll தமிழ் கிருஸ்துவ பாடல் வரிகள்

 இயேசுவே என் இயேசுவே

நீர் இல்லாமல் எனக்கு யாருமில்லையே

 

நான் செய்த பாவங்கள் பல ஆயிரம்

உம் இரத்தத்தால் என்னை மீட்டுக்கொண்டீரே

நன்றி இயேசுவே -4

 

பெலனில்லாமல் நான் நின்ற வேளையில்

உம் பெலத்தாலே என்னை தாங்கி கொண்டீரே

உம் பெலன் போதுமே -4

 

பாதை தெரியாமல் நான் அழுத வேளையில்

கண்ணீரை துடைத்து எந்தன் கரம் பிடித்தீரே

யாருமில்லை என்று ஏங்கும் நேரத்தில்

தோழனை போல் தோன்றி தோள் கொடுத்தீரே

உம் அன்பு போதுமே

உம் துணை போதுமே -2

உழைப்பாளியான ரூபவதி

"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…" - பிரசங்கி 9:10   செல்வமும், களியாட்டுகளும், புகழும், பெருமைய...