Tuesday, 18 December 2018

ஞாயிறு பள்ளி உவமை கதை

ரஷ்ய அரசன் ஒருவன் ஆப்பிள் தோட்டம் வைத்திருந்தான். தோட்டத்திலிருந்த மரத்திலிருந்து ஆப்பிள் அருகில் ஓடிக்கொண்டிருந்த நதியில் விழுந்து மிதந்து சென்றது. சிறிது தூரம் சென்ற ஆப்பிள் குளித்து கொண்டிருந்த ஒரு வாலிபனின் கண்களில் பட்டது. மிகவும் சிரமப் பட்டு நீந்திப்போய் அதை கையில் எடுத்தவன் யோசிக்க ஆரம்பித்தான். இந்த ஆப்பிள் எப்படி இந்த நதியில் மிதந்து வர முடியும்? அப்போது தான் ராஜாவின் ஆப்பிள் தோட்டம் நதிக்கரை ஓரத்தில் இருப்பது நினைவுக்கு வந்தது. ராஜாவின் அனுமதி இல்லாமல் அவருடைய தோட்டத்து ஆப்பிளை நான் எப்படி உண்ண முடியும்? நதியில் கண்டெடுத்த ஆப்பிளை கையில் எடுத்துக் கொண்டு ராஜாவின் அரண்மனை நோக்கி சென்றான். விஷயத்தை பிரதானிகளிடம் கூறினான். பிரதானிகள் ராஜாவிடம் சொன்னார்கள். அரண்மனை தோட்டத்து ஆப்பிளை எடுத்தது தவறு என்று வாலிபன் மீது குற்றம் சாட்டபட்டு ஒரு பார்வையற்ற பெண்னை திருமணம் செய்ய வேன்டும் என்று ராஜா, கட்டளையிட்டார். திருமண நாளும் வந்தது அதுவரை அரண்மனைச் சிறையில் கைதியாக வைக்கப்பட்டிருந்த வாலிபன் விடுதலை செய்யப் பட்டு கைதி உடையிலிருந்து மணமகன் உடைக்கு மாறினான். அரண்மனை எங்கும் திருமண விழாக் கோலமாக அலங்கரிக்கப்பட்டது. மணமகள் அலங்கரிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டாள். முகம் சல்லாத் துணியினால் மூடப்பட்டுள்ளது. தனக்கு தண்டனையாக, தான் மணக்க இருக்கும் குருட்டு பெண்ணின் முகத்தை பார்க்க வாலிபன் ஆவல் கொண்டான். மணமகளின் கழுத்தில் மலர்மாலையை போடுவதற்கு முன்னால், மெல்ல அவள் முகத்தை மூடியிருந்த சல்லாத் துணியை அகற்றினான். முகத்தைப் பார்த்தவன் பேரதிர்ச்சி அடைந்தான். மணமகளாக ராஜாவின் அருமை மகள் அழகு ஓவியமாக நின்றாள். வாலிபனின் உண்மை, அரசனை கவர்ந்த படியால் மகளையேத் திருமணம் செய்து வைத்தார்.

சிந்தனைக்கு👇

நம்முடைய வாழ்க்கையிலும் உண்மையுள்ளவர்களாக இருப்போமானால், ஜீவ கிரீடத்தை பெறுவோம். அநேகத்தின் மேல் அதிகாரிகளாகவும் மாறுவோம்...💁🏻‍♂

உத்தமமும் உண்மையுமான ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்...🗣🗣🗣

Friday, 14 December 2018

IFSC Code of Indian Bank (ib) Golden Rock branch - Tiruchiorappalli. Contact phone number and address

IFSC Code of Golden Rock Branch - INDIAN BANK

The IFSC Code of GOLDEN ROCK branch - INDIAN BANK is IDIB000G011. Branch code is the last six characters of the IFSC Code - 00G011. Bank branch's details are listed below.
Bank :
Indian Bank
State :
Tamil Nadu
District :
Tiruchiorappalli
Branch :
Golden Rock
City :
Tiruchirappalli
IFSC Code :
MICR Code :
Branch Code :
00G011 (Last 6 Characters of the IFSC Code)
Address :
Mathuram Complex Ponmalai Patti, Golden Rock Trichy 620004
Phone number :
0431 2491478

Thursday, 13 December 2018

ராகாப் Rahab

யோசேப்பு எகிப்து நாட்டின் ஆளுநராய் இருந்த காலத்தில் அவரது குடும்பத்தினர் 70 பேர் அந்த நாட்டில் நுழைந்தார்கள். அப்போதைய மன்னன் அவர்களை ஆதரித்து பராமரித்தான். வருடங்கள் ஓடின. இஸ்ரயேலர்களுக்கு எகிப்தில் எதிர்ப்பு எழுந்தது. 430 வருட எகிப்து நாட்டு வாழ்க்கை 70 எனும் எண்ணிக்கையை 6 இலட்சம் என உயர்த்தியிருந்தட்து. அவர்கள் எகிப்தியர்களின் அடிமைகள் எனும் நிலையிலேயே இருந்தார்கள்.

அவர்களை மோசே எகிப்திலிருந்து மீட்டு வந்தார். மோசேயின் மறைவுக்குப் பின் யோசுவா மக்களை தலைமையேற்று நடத்தினார். அவர்கள் பாலை நிலத்தில் அலைந்து கொண்டிருந்த காலம். எரிகோ எனும் நகரம் மிகவும் காவல் பலத்துடன் இருக்கிறது. அதைக் இஸ்ரயேல் மக்கள் கைப்பற்ற வேண்டுமென்பது கடவுளின் திட்டமாய் இருந்தது.

நகரம் மிகப்பெரிய மதில் சுவரினால் கட்டப்பட்டு, பலமான கதவுகளால் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தது. எனவே யோசுவா முதலில் உள்ளே சென்று உளவு பார்த்து வர இரண்டு பேரை அனுப்பினார். அவர்கள் அந்த நகருக்குள் நுழைந்தார்கள். நகருக்குள் இருந்த ராகாப் எனும் பெண்ணின் வீட்டில் அன்று தங்கினார்கள். அவள் ஒரு விலை மாது.

அதற்குள் விஷயம் மன்னனின் காதுகளுக்கும் போய்விட்டது. “ராகாபின் வீட்டிலிருக்கும் இஸ்ரயேல் ஒற்றர்களை இழுத்து வாருங்கள். அவர்கள் நாடு முழுவதும் உளவு பார்க்க வந்திருக்கிறார்கள்” என மன்னன் கட்டளையிட்டான். வீரர்கள் ராகாபின் வீட்டுக் கதவைத் தட்டினார்கள். ராகாபோ ஒற்றர்களை மாடியில் சணல் தட்டுகளுக்கு அடியில் ஒளித்து வைத்தாள்.

“சிலர் வந்தார்கள், ஆனால் அவர்கள் யார் எங்கிருந்து வந்தார்கள் என்பதெல்லாம் தெரியாது “ என்றாள் ராகாப். வீரர்கள் அவர்களைத் தேடி நகருக்கு வெளியே சென்றனர்.

ராகாப் உளவாளிகளிடம் வந்து, “இஸ்ரயேலர்களின் கடவுளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். செங்கடலை வற்றிப் போகச் செய்தவர். பல வெற்றிகளை உங்களுக்குத் தந்தவர். இப்போதும் இந்த நகர் மக்கள் உங்களை நினைத்து நடுங்குகிறார்கள். எனவே நீங்கள் வெல்வது நிச்சயம். ஆனால் என்னையும் என் குடும்பத்தினரையும் காப்பாற்றுங்கள்” என்று வேண்டினாள்.

உளவாளிகள் அவளிடம், “எங்களைக் காட்டிக் கொடுக்காமல், இந்த விஷயங்களை யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டால் நிச்சயம் உன் குடும்பத்தைக் காப்பாற்றுவோம்” என்றார்கள். அவளும் ஒத்துக் கொண்டார். பின்னர் வீட்டுச் சாளரம் வழியே ஒரு கயிறைக் கட்டி மதிலுக்கு வெளியே அவர்களை அனுப்பி விட்டாள். அவள் வீடு அந்த மதிலோடு இணைந்திருந்தது.

அவர்கள், போகும் போது, “இந்தச் சன்னலில் ஒரு சிவப்புக் கயிறைக் கட்டிவை. உன் குடும்பத்தினர் அனைவரையும் இங்கே கூட்டி வை. எல்லோரும் உள்ளேயே இருங்கள். உங்களை அழிக்கமாட்டோம்” என்று வாக்கு கொடுத்தனர்.

அப்படியே ராகாப் செய்தாள். கடவுள் இஸ்ரயேலர்களுக்காக எரிகோ மதில் சுவரை தகர்த்தார். நகரைக் கைப்பற்றிய இஸ்ரயேலர்கள் ராகாபின் குடும்பத்துக்கு மட்டும் தீங்கு இழைக்கவில்லை ! அந்தக் குடும்பத்தினரை அவர்கள் தங்களோடு இணைத்துக் கொண்டார்கள்.

ராகாபின் விசுவாசம் வியப்பூட்டுகிறது. பலமான நகருக்குள் காவல் இருக்கும் அவள் ஒரு விலைமாது. ஆனால் கடவுளைப் பற்றிய அறிவும், நம்பிக்கையும் அவளிடம் மிகவும் அதிகமாகவே இருந்திருக்கிறது. “உங்கள் கடவுளாகிய ஆண்டவர், மேலே விண்ணுலகம் முதல் கீழே மண்ணுலகம் அனைத்திற்கும் கடவுள் ( யோசுவா 2 : 11 ) எனும் அவளுடைய வார்த்தைகள் அவற்றை அறிக்கையிடுகின்றன. அரசனுடைய கட்டளையைப் புறக்கணித்து, தனது உயிர் போய்விடலாம் எனும் கவலையைக் கூட களைந்து, இஸ்ரயேல் உளவாளிகளைக் காப்பாற்றுவதில் அவளுக்கு இருக்கும் உறுதி பிரமிக்க வைக்கிறது !

எனவே தான் புதிய ஏற்பாடு ராகாபை மறக்காமல் குறித்து வைக்கிறது ! “விலைமகளான இராகாபு ஒற்றர்களை நன்கு வரவேற்று, கீழ்ப்படியாதவரோடு அழியாது தப்பித்துக் கொண்டதும் நம்பிக்கையினால்தான் ( எபிரேயர் 11 : 31 ) என்கிறது புதிய ஏற்பாடு !

இதைவிட மிகப்பெரிய பாக்கியமும், வியப்பூட்டும் அங்கீகாரமும் ராகாபுக்குக் கிடைக்கிறது. பல நூற்றாண்டுகள் கடந்தபின் இந்த ராகாபின் வம்சா வழியில் ஒரு மாபெரும் மனிதர் தோன்றினார். அவர் தான் இயேசு கிறிஸ்து !

பாவிகளை மீட்க வந்தேன் என பறைசாற்றிய இயேசு, தனது வம்சாவழியை பாவிகளோடு அடையாளப்படுத்திக் கொண்டே வந்தார் என்பது வியப்பூட்டுகிறது ! ‘நான் இன்னாரோட பரம்பரையில வந்தவன்” என கர்வத்தின் கயிறைப் பிடித்துத் தொங்குபவர்களுக்கு இயேசுவின் இந்த வம்சப் பரம்பரை தாழ்மை என்றால் என்ன என்பதைப் போதிக்கிறது.

நாம் எந்தக் குடும்பப் பின்னணியில் வந்தோம் என்பதை வைத்து நமது வாழ்க்கை அளவிடப் படுவதில்லை. நாம் எந்த அளவுக்கு இறை விசுவாசத்தில் இருக்கிறோம் என்பதை வைத்தே அளவிடப்படும் என்பதை நினைவில் கொள்வோம்

Wednesday, 12 December 2018

அன்பான நண்பர்களே! பிறரை இரட்சிப்பிற்குள் நடத்த நீங்களும் ஏதாவது செய்வீர்களா?

“…ஒளியின் பிள்ளைகளைப்பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள்.” – லூக்கா 16:8

மேடம் உங்க உயரம் என்ன? உங்க எடை என்ன?... என்று கேட்டவாறே கையிலுள்ள ஒரு சின்ன இயந்திரத்தைக் கீழே வைத்து அதின் மேல் ஏறி நிற்கச் சொன்னார் ஒருவர்.  நின்றேன்.  ஏதேதோ கணக்கிட்டார்.  “ஐயோ, மேடம் நீங்க ஓவர்வெயிட்.  இதை குறைக்காவிட்டால் ஏற்படும் பக்கவிளைவுகள் இருதயத்தைப் பாதிக்கும்.  ஆகவே தீவிரமாய் எடையைக் குறைக்க முயற்சியுங்கள்.  எங்களிடம் ஒரு உடற்பயிற்சி இயந்திரம் உள்ளது.  அதை வாங்கி தினமும் பயிற்சி செய்யுங்கள்.  6 மாதத்தில் எடை குறைந்துவிடும்” என்று மூச்சுவிடாமல் முழங்கினார்.  அடிக்கடி சந்தித்து இதைக் குறித்து பேசினார்.  6 மாதங்களில் 100 போன்கால்கள் செய்திருப்பார்.  ஒரு விளக்க கூட்டத்திற்கும் அழைத்தார்.  போகத் தீர்மானித்தேன்.

ஒரு ஞாயிறுமாலை அந்த ஆடிட்டோரியம் நோக்கி சென்றேன்.  ஏகப்பட்ட கூட்டம், ஹால் முழுவதும் உற்சாக வெள்ளம்.  நல்ல இசை, கைதட்டல்கள்.  பலர் தாங்கள் எப்படி உடல் எடையைக் குறைத்தோம் என தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்கள்.  என்னை அழைத்தவர் என்னைக் கண்டு ஓடோடி வந்தார்.  முகத்தில் எக்கச்சக்கமான மகிழ்ச்சி.  ஒரு இயந்திரத்தை அறிமுகப்படுத்த அவர் எடுத்துக் கொண்ட விடாமுயற்சியை யோசித்தபடியே வீட்டை நோக்கிச் சென்றேன்.

நான் இரட்சிக்கப்பட்டு எத்தனை ஆண்டுகள் ஆயிற்று! எனக்கு கிடைத்த விலையேறப்பெற்ற இரட்சிப்பை பிறருக்கு சொல்லியிருக்கிறேனா? தேவஇராஜ்யத்தில் ஆத்துமாக்களை சேர்ப்பதற்கு ஏதாவது முயற்சி எடுத்திருக்கிறேனா? அழியும் ஆத்துமாக்களைக் குறித்த கரிசனை எனக்குண்டா? சே! வெட்கமாக இருந்தது.  “இருதயத்தை பாதிக்கும் மேடம்.  இந்த இயந்திரத்தைப் பயன்படுத்துங்கள்” என்று அந்த நண்பர் எத்தனை முறை சொல்லியிருப்பார்.  நான் ஒரு முறையாவது, ஒருவரிடமாவது பேசியிருக்கிறேனா? எப்போதும் உலகப்பிரகாரமான காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பரம காரியங்களுக்கு உணர்வு அற்றுப்போனது ஏன்? வெறுங்கையோடு உம்மை எப்படி சந்திப்பேன்? என்று மனதிற்குள் புலம்பியபடியே வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்.  அன்று இரவே ஏதாவது செய்ய ஆழமாக தூண்டப்பட்டேன்.  என் வீட்டில் மாதத்தின் முதல் சனிக்கிழமை ஜெபக்கூடுகையை ஆரம்பித்தேன்.  அற்பமான ஆரம்பம்தான்.  ஆனாலும் ஜெபவாசனை பக்கத்து வீடுகளில் எட்டிப்பார்க்கும் என்ற நம்பிக்கை எனக்குள்ளிருக்கிறது.


Tuesday, 11 December 2018

பிலயாம் Balaam



எகிப்தில் அடிமைத் தனத்தில் இருந்த இஸ்ரயேல் மக்களை கடவுள் மோசே வாயிலாய் மீட்டுக் கொண்டு வந்தார். ஏறக்குறைய ஆறு இலட்சம் எனும் எண்ணிக்கையில் இருந்த அவர்கள் வழியில் மோவாபிய சமவெளிகளில் தங்கினார்கள். பெருங்கூட்டமான இஸ்ரயேலரைப் பார்த்து மன்னன் பாலாக் பயந்தான். இஸ்ரயேல் மக்களை விரட்டியடிக்க நினைத்தான்.

இஸ்ரயேல் மக்களைத் தோற்கடிக்க வேண்டுமெனில் கடவுளின் தூதர் ஒருவர் அவர்களைச் சபிக்க வேண்டும் என முடிவுசெய்தான். ‘பிலயாம்’ அந்தக் காலத்தில் மிகப்பெரிய இறை தூதராக இருந்தார். அவர் சபிப்பவர்கள் அழிந்தனர்,, அவர் வாழ்த்தியவர்கள் உயர்ந்தனர். எனவே மன்னன் அவரை அழைத்துவர ஆளனுப்பினான்.

பிலயாமை அழைக்க மன்னனின் ஆட்கள் வந்தனர். கடவுளோ பிலயாமைத் தடுதார். அவர் அவர்களுடன் போகவில்லை. எனவே மன்னன் அவர்களை விட மரியாதைக்குரிய வேறு சிலரை அனுப்பினான். இந்த முறை அவர் கழுதையில் ஏறி மன்னனின் ஆட்களுடன் சென்றார். போகும் வழியில் கடவுளின் தூதர் கழுதையை வழிமறித்தார். கழுதை, வழியை விட்டு விலகி வயலில் இறங்கியது. பிலயாம் கழுதையை அடித்தார்.

இரண்டாவது முறை தூதர் இருபுறமும் சுவர் கட்டப்பட்டிருந்த பாதையில் கழுதையை வழிமறித்தார். இப்போது கழுதை சுவரோடு சாய்ந்து உரசியது. பிலயாம் கழுதையை இரண்டாவது முறையாக அடித்தார். மூன்றாவது முறையாக தூதர் குறுகலான வழியில் கழுதையை வழிமறித்தார். இப்போது கழுதை வழியிலேயே படுத்துக் கொண்டது. பிலயாம் மூன்றாம் முறையாக கழுதையை அடித்தார்.

கழுதை வாய்திறந்து பேசியது ! “மூன்று முறை நீ என்னை அடிக்க நான் என்ன செய்தேன்” என்றது. பிலேயாம் சட்டென தனக்கு முன்னால் நின்ற கடவுளின் தூதனைக் கண்டார். முகங்குப்புற விழுந்தார். கடவுளே உமக்குப் பிடிக்காவிட்டால் நான் இதோ திரும்பிப் போய்விடுகிறேன், என்றார். கடவுளோ அவரிடம், “நீ போ. ஆனால் நான் சொல்வதை மட்டுமே சொல்” என அனுப்பி வைத்தார்.

பிலயாமை மன்னன் வெகு விமரிசையாய் வரவேற்றான். உமக்குத் தேவையான அனைத்தையும் தருவேன் இந்த மக்களைச் சபித்து விடும் என்றார். பிலயாமோ, “கடவுள் சொல்வதை மட்டுமே சொல்வேன்” என்றார். பின் சபிப்பதற்குப் பதிலாக இஸ்ரேல் மக்களை வாழ்த்தினார்.

மன்னன் எரிச்சலடைந்தான். இன்னொரு இடத்துக்குக் கூட்டிப் போய், இப்போது சபியும் என்றான். இரண்டாவது முறையாகவும் இஸ்ரயேல் மக்களை பிலயாம் வாழ்த்தினார். மன்னன் கோபமடைந்தான். மூன்றாவதாய் இன்னொரு இடத்துக்குக் கூட்டிப் போய், “இஸ்ரயேல் மக்களைச் சபியும்” என்றான். பிலயாமோ கடவுளின் அறிவுறுத்தல்படி மூன்றாவது முறையாகவும் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிவழங்கினார்.

மன்னன் கடுங்கோபமடைந்தான். “நீர் வீடு நிறைய பொன்னும் வெள்ளியும் நிரப்பினாலும் கடவுளின் வார்த்தைக்கு எதிராக என்னால் பேச முடியது என்று நான் முதலிலேயே சொல்லி விட்டேனே” என்றார் பிலயாம்.

பிலயாமின் வாழ்க்கை பல இறை அனுபவங்களையும், புரிதல்களையும் நமக்குத் தருகிறது. இஸ்ரவேல் குலத்தில் இல்லாத அவன், இறைவனின் மிகப்பெரிய ஆசீர்வாதங்களுக்குச் சொந்தக்காரனாய் இருந்தான் என்பது ஊக்கமூட்டும் செய்தியாகும். “நீர் எவனுக்கு ஆசி வழங்குவீரோ அவன் ஆசிபெறுவான், நீர் எவனைச் சபிப்பீரோ அவன் சாபம் அடைவான்” என்கிறது விவிலியம்.

பிலயாமிடம் கடவுளே போ என்று சொல்கிறார். பின் வழிமறிக்கிறார். குழப்பமூட்டுவது போல இருக்கும் இந்த செய்தி இறைவனின் மென்மையான மனதைக் காட்டுகிறது. இதைச் செய்யாதே என இறைவன் தடுத்த ஒரு விஷயத்தை, மனிதர்களின் வற்புறுத்தலால் மீண்டும் கடவுளிடம் கேட்பது என்பது இறைவனின் விருப்பத்துக்கு மாறானது. எனவே தான் அனுமதி அளித்தபின் கடவுள் வழிமறிக்கிறார். மீண்டும் ஒரு முறை மனிதர்களின் வற்புறுத்தலால் பிலயாம் மனித வார்த்தைகளைப் பேசக் கூடாது என்பதை எச்சரிக்கவே அப்படிச் செய்கிறார்.

ஒரு கழுதையால் காண முடிந்த காட்சியைக் கூட காண முடியாதபடி பிலயாம் கழுதையின் மீது இருந்தார். அவருடைய கண்கள் திறக்கப்படாமல் இருந்தது ! மூன்று எச்சரிக்கைகளுக்குப் பிறகே பிலயாம் இறைவனைக் காணும் நிலைக்கு வருகிறார். காரணம் அவனுடைய கண்களில் செல்வத்தின் ஆசை மிதந்தது. இதை புதிய ஏற்பாடு நமக்குச் சொல்லித் தருகிறது ( 2 பேது 2 : 15 )

கடவுளின் பிள்ளைகளை ஒருவர் சபிக்க நினைத்தாலும், அந்த சாபத்தைக் கடவுள் வாழ்த்தாய் மாற்றிவிடுகிறார் என்பது இன்னொரு வியப்பூட்டும் உண்மை. இறை நம்பிக்கை இருந்தால் பிறர் நமக்கு என்னென்ன கெடுதல்கள் செய்கிறார்களோ, அவை எல்லாமே கடைசியில் நன்மைக்காகவே முடியும்.

பிலயாம் தவறும், சரியும் கலந்த மனிதன்.  அவருடைய போதனை இஸ்ரயேல் மக்களை பாவத்துக்குள் அழைத்துச் சென்றது என்கிறது பைபிள். குறைபாடுகள் உள்ள மனிதனும் இறைபணியில் இணையலாம் எனும் நம்பிக்கையையும் பிலயாமின் வாழ்க்கை நமக்குச் சொல்கிறது.

Monday, 10 December 2018

அதிகாலமே உம்மைத் தேடுகிறேன். Early will I seek thee:

சங்கீதம்  63

1: தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது.

A Psalm of David, when he was in the wilderness of Judah. O God, thou art my God; early will I seek thee: my soul thirsteth for thee, my flesh longeth for thee in a dry and thirsty land, where no water is;

2: இப்படியே பரிசுத்த ஸ்தலத்தில் உம்மைப்பார்க்க ஆசையாயிருந்து, உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன்.

To see thy power and thy glory, so as I have seen thee in the sanctuary.

3: ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது; என் உதடுகள் உம்மைத் துதிக்கும்.

Because thy lovingkindness is better than life, my lips shall praise thee.

4: என் ஜீவனுள்ளமட்டும் நான் உம்மைத் துதித்து, உமது நாமத்தைச் சொல்லிக் கையெடுப்பேன்.

Thus will I bless thee while I live: I will lift up my hands in thy name.

5: நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என் ஆத்துமா திருப்தியாகும்; என் வாய் ஆனந்தக்களிப்புள்ள உதடுகளால் உம்மைப் போற்றும்.

My soul shall be satisfied as with marrow and fatness; and my mouth shall praise thee with joyful lips:

6: என் படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது, இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன்.

When I remember thee upon my bed, and meditate on thee in the night watches. 

Sunday, 9 December 2018

சொன்ன நல்வார்த்தையை நிறைவேற்றுவேன். I will perform that good thing which I have promised

எரேமியா  33

11: இன்னும் களிப்பின் சத்தமும், மகிழ்ச்சியின் சத்தமும், மணவாளனின் சத்தமும், மணவாட்டியின் சத்தமும்: சேனைகளின் கர்த்தரைத் துதியுங்கள், கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளதென்று சொல்லுகிறவர்களின் சத்தமும், கர்த்தருடைய ஆலயத்துக்கு ஸ்தோத்திரபலிகளைக் கொண்டுவருகிறவர்களின் சத்தமும் கேட்டகப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் முன்னிருந்தது போலிருக்கும்படி தேசத்தின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

The voice of joy, and the voice of gladness, the voice of the bridegroom, and the voice of the bride, the voice of them that shall say, Praise the LORD of hosts: for the LORD is good; for his mercy endureth for ever: and of them that shall bring the sacrifice of praise into the house of the LORD. For I will cause to return the captivity of the land, as at the first, saith the LORD.

12: மனுஷனும் மிருகமும் இல்லாமல் அவாந்தரவெளியாய்க்கிடக்கிற இவ்விடத்திலும், இதற்கடுத்த பட்டணங்களிலும், ஆட்டுமந்தையை மேய்த்து மடக்குகிற மேய்ப்பர்களின் தாபரங்கள் உண்டாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Thus saith the LORD of hosts; Again in this place, which is desolate without man and without beast, and in all the cities thereof, shall be an habitation of shepherds causing their flocks to lie down.

13: மலைத்தேசமான பட்டணங்களிலும், பள்ளத்தாக்குகளான பட்டணங்களிலும், தென்திசைப் பட்டணங்களிலும் பென்யமீன் நாட்டிலும், எருசலேமின் சுற்றுப்புறங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும், ஆட்டுமந்தைகள் தங்களைத் தொகையிடுகிறவனுடைய கைக்குள்ளாகக் கடந்துவரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

In the cities of the mountains, in the cities of the vale, and in the cities of the south, and in the land of Benjamin, and in the places about Jerusalem, and in the cities of Judah, shall the flocks pass again under the hands of him that telleth them, saith the LORD.

14: இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது நான் இஸ்ரவேலின் குடும்பத்துக்கும், யூதாவின் குடும்பத்துக்கும் சொன்ன நல்வார்த்தையை நிறைவேற்றுவேன்.

Behold, the days come, saith the LORD, that I will perform that good thing which I have promised unto the house of Israel and to the house of Judah.

உழைப்பாளியான ரூபவதி

"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…" - பிரசங்கி 9:10   செல்வமும், களியாட்டுகளும், புகழும், பெருமைய...