ரஷ்ய அரசன் ஒருவன் ஆப்பிள் தோட்டம் வைத்திருந்தான். தோட்டத்திலிருந்த மரத்திலிருந்து ஆப்பிள் அருகில் ஓடிக்கொண்டிருந்த நதியில் விழுந்து மிதந்து சென்றது. சிறிது தூரம் சென்ற ஆப்பிள் குளித்து கொண்டிருந்த ஒரு வாலிபனின் கண்களில் பட்டது. மிகவும் சிரமப் பட்டு நீந்திப்போய் அதை கையில் எடுத்தவன் யோசிக்க ஆரம்பித்தான். இந்த ஆப்பிள் எப்படி இந்த நதியில் மிதந்து வர முடியும்? அப்போது தான் ராஜாவின் ஆப்பிள் தோட்டம் நதிக்கரை ஓரத்தில் இருப்பது நினைவுக்கு வந்தது. ராஜாவின் அனுமதி இல்லாமல் அவருடைய தோட்டத்து ஆப்பிளை நான் எப்படி உண்ண முடியும்? நதியில் கண்டெடுத்த ஆப்பிளை கையில் எடுத்துக் கொண்டு ராஜாவின் அரண்மனை நோக்கி சென்றான். விஷயத்தை பிரதானிகளிடம் கூறினான். பிரதானிகள் ராஜாவிடம் சொன்னார்கள். அரண்மனை தோட்டத்து ஆப்பிளை எடுத்தது தவறு என்று வாலிபன் மீது குற்றம் சாட்டபட்டு ஒரு பார்வையற்ற பெண்னை திருமணம் செய்ய வேன்டும் என்று ராஜா, கட்டளையிட்டார். திருமண நாளும் வந்தது அதுவரை அரண்மனைச் சிறையில் கைதியாக வைக்கப்பட்டிருந்த வாலிபன் விடுதலை செய்யப் பட்டு கைதி உடையிலிருந்து மணமகன் உடைக்கு மாறினான். அரண்மனை எங்கும் திருமண விழாக் கோலமாக அலங்கரிக்கப்பட்டது. மணமகள் அலங்கரிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டாள். முகம் சல்லாத் துணியினால் மூடப்பட்டுள்ளது. தனக்கு தண்டனையாக, தான் மணக்க இருக்கும் குருட்டு பெண்ணின் முகத்தை பார்க்க வாலிபன் ஆவல் கொண்டான். மணமகளின் கழுத்தில் மலர்மாலையை போடுவதற்கு முன்னால், மெல்ல அவள் முகத்தை மூடியிருந்த சல்லாத் துணியை அகற்றினான். முகத்தைப் பார்த்தவன் பேரதிர்ச்சி அடைந்தான். மணமகளாக ராஜாவின் அருமை மகள் அழகு ஓவியமாக நின்றாள். வாலிபனின் உண்மை, அரசனை கவர்ந்த படியால் மகளையேத் திருமணம் செய்து வைத்தார்.
சிந்தனைக்கு👇
நம்முடைய வாழ்க்கையிலும் உண்மையுள்ளவர்களாக இருப்போமானால், ஜீவ கிரீடத்தை பெறுவோம். அநேகத்தின் மேல் அதிகாரிகளாகவும் மாறுவோம்...💁🏻♂
உத்தமமும் உண்மையுமான ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்...🗣🗣🗣
சிந்தனைக்கு👇
நம்முடைய வாழ்க்கையிலும் உண்மையுள்ளவர்களாக இருப்போமானால், ஜீவ கிரீடத்தை பெறுவோம். அநேகத்தின் மேல் அதிகாரிகளாகவும் மாறுவோம்...💁🏻♂
உத்தமமும் உண்மையுமான ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்...🗣🗣🗣
No comments:
Post a Comment