“…ஒளியின் பிள்ளைகளைப்பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள்.” – லூக்கா 16:8
மேடம் உங்க உயரம் என்ன? உங்க எடை என்ன?... என்று கேட்டவாறே கையிலுள்ள ஒரு சின்ன இயந்திரத்தைக் கீழே வைத்து அதின் மேல் ஏறி நிற்கச் சொன்னார் ஒருவர். நின்றேன். ஏதேதோ கணக்கிட்டார். “ஐயோ, மேடம் நீங்க ஓவர்வெயிட். இதை குறைக்காவிட்டால் ஏற்படும் பக்கவிளைவுகள் இருதயத்தைப் பாதிக்கும். ஆகவே தீவிரமாய் எடையைக் குறைக்க முயற்சியுங்கள். எங்களிடம் ஒரு உடற்பயிற்சி இயந்திரம் உள்ளது. அதை வாங்கி தினமும் பயிற்சி செய்யுங்கள். 6 மாதத்தில் எடை குறைந்துவிடும்” என்று மூச்சுவிடாமல் முழங்கினார். அடிக்கடி சந்தித்து இதைக் குறித்து பேசினார். 6 மாதங்களில் 100 போன்கால்கள் செய்திருப்பார். ஒரு விளக்க கூட்டத்திற்கும் அழைத்தார். போகத் தீர்மானித்தேன்.
ஒரு ஞாயிறுமாலை அந்த ஆடிட்டோரியம் நோக்கி சென்றேன். ஏகப்பட்ட கூட்டம், ஹால் முழுவதும் உற்சாக வெள்ளம். நல்ல இசை, கைதட்டல்கள். பலர் தாங்கள் எப்படி உடல் எடையைக் குறைத்தோம் என தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்கள். என்னை அழைத்தவர் என்னைக் கண்டு ஓடோடி வந்தார். முகத்தில் எக்கச்சக்கமான மகிழ்ச்சி. ஒரு இயந்திரத்தை அறிமுகப்படுத்த அவர் எடுத்துக் கொண்ட விடாமுயற்சியை யோசித்தபடியே வீட்டை நோக்கிச் சென்றேன்.
நான் இரட்சிக்கப்பட்டு எத்தனை ஆண்டுகள் ஆயிற்று! எனக்கு கிடைத்த விலையேறப்பெற்ற இரட்சிப்பை பிறருக்கு சொல்லியிருக்கிறேனா? தேவஇராஜ்யத்தில் ஆத்துமாக்களை சேர்ப்பதற்கு ஏதாவது முயற்சி எடுத்திருக்கிறேனா? அழியும் ஆத்துமாக்களைக் குறித்த கரிசனை எனக்குண்டா? சே! வெட்கமாக இருந்தது. “இருதயத்தை பாதிக்கும் மேடம். இந்த இயந்திரத்தைப் பயன்படுத்துங்கள்” என்று அந்த நண்பர் எத்தனை முறை சொல்லியிருப்பார். நான் ஒரு முறையாவது, ஒருவரிடமாவது பேசியிருக்கிறேனா? எப்போதும் உலகப்பிரகாரமான காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பரம காரியங்களுக்கு உணர்வு அற்றுப்போனது ஏன்? வெறுங்கையோடு உம்மை எப்படி சந்திப்பேன்? என்று மனதிற்குள் புலம்பியபடியே வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். அன்று இரவே ஏதாவது செய்ய ஆழமாக தூண்டப்பட்டேன். என் வீட்டில் மாதத்தின் முதல் சனிக்கிழமை ஜெபக்கூடுகையை ஆரம்பித்தேன். அற்பமான ஆரம்பம்தான். ஆனாலும் ஜெபவாசனை பக்கத்து வீடுகளில் எட்டிப்பார்க்கும் என்ற நம்பிக்கை எனக்குள்ளிருக்கிறது.

No comments:
Post a Comment