Monday, 4 February 2019

முதல் காரியத்திற்கு முதல் இடம்



முதலாவது (நீங்கள் அடைய வேண்டிய இலக்காக) தேவனுடைய இராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் (அவர் வழியில் சரியானதைச் செய்து சரியானபடி வாழ்வது) தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குகூடக் கொடுக்கப்படும்.

• (மத்தேயு 6:33).

தேவனை மட்டுமே நாடித் தேடிக்கொண்டிருக்க வேண்டியதற்குப் பதில் நாம் அநேக சந்தர்ப்பங்களில், நம் நேரத்தையெல்லாம் நம் பிரச்சனைகளுக்கான தீர்வுகளைத் தேடுவதிலேயே செலவிடுகிறோம்.

நம் தேவனை நாம் நாடித்தேடிக் கொண்டிருக்கும்போதெல்லாம், அவருடைய செட்டையின் மறைவில் பத்திரமாக இருக்கிறோம். “அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்” என சங்கீதம் 91:4 கூறுகிறது. ஆனால் நம்மை எதிர்கொள்ளும் எல்லா பிரச்சனைகளுக்கும், சூழ்நிலைகளுக்கும் விடைகளைத் தேட ஆரம்பித்தோமாயின், தேவனுடைய சித்தத்தைக் காட்டிலும் நம்முடைய விருப்பங்களை நிறைவேற்றவே முயல்வோமாயின், அவருடைய செட்டையின் மறைவுக்கு வெளியே வந்துவிடுகிறோம்.

அநேக ஆண்டுகள் நான் என் ஊழியத்தை மேம்படுத்துவதற்காகவே தேவனை நாடினேன். அதன் விளைவு? என் ஊழியம் அப்படியேதான் இருந்தது. அது வளரவே இல்லை. சில சமயம் பின்னோக்கியும் சென்றது. நான் விளங்கிக்கொள்ளாதது என்னவென்றால், நான் செய்ய வேண்டியதெல்லாம் தேவனுடைய ராஜ்யத்தைத் தேட வேண்டும்; அப்பொழுது அவர் வளர்ச்சியைக் கூடக் கொடுப்பார்.

உன் ஆவிக்குரிய வளர்ச்சியைக் குறித்து நீ கவலைப்பட வேண்டியது  அவசியமில்லை என்பதை நீ அறிவாயா? நீ செய்ய வேண்டியதெல்லாம் ராஜ்யத்தைத் தேட வேண்டியதுதான், அப்பொழுது நீ வளருவாய், தேவனைத் தேடி அவரை நாடு, அவரில் நிலைத்திரு. அப்பொழுது அவர் பெருக்கத்தையும், வளர்ச்சியையும் அனுமதிப்பார்.

ஒரு பச்சிளம் குழந்தை பாலைக்குடித்து வளர்கிறது. நீயும் நானும் செய்ய வேண்டியதெல்லாம் திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பலியின் மேல் வாஞ்சையாயிருக்க வேண்டியதுதான், அப்பொழுது நாம் வளருவோம் (1 பேதுரு 2:2 காண்க). மனித முயற்சியால் நாம் ஒருபோதும் மெய்யான வெற்றியை அனுபவிக்க முடியாது. அதற்குப் பதில் நாம் தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடவேண்டும். அப்பொழுது, நமக்குத் தேவையான மற்ற காரியங்களெல்லாம் நமக்குக் கொடுக்கப்படும்.

ஆமென் அல்லேலூயா!.

No comments:

Post a Comment

உழைப்பாளியான ரூபவதி

"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…" - பிரசங்கி 9:10   செல்வமும், களியாட்டுகளும், புகழும், பெருமைய...