Monday, 4 February 2019

சத்துவத்தை தரும் ஞானம்



ஏசாயா 40:29
 சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்.

   சர்வ வல்லமையுள்ள தேவன் சோர்ந்துபோகின்றவனுக்கு பெலனையும், சத்துவமில்லாதவனுக்கு சத்துவத்தை பெருகப்பண்ணுகின்றவர் என்று சத்திய வார்த்தைகள் கூறுகின்றது.

   நீதிமொழிகள் 30-ம் அதிகாரத்தில் பூமியிலே மகா ஞானமுள்ளவைகளான நான்கு ஜெந்துக்களை குறித்து எழுதியிருக்கின்றது. அதில் குழிமுசலும் ஒன்று. இது சத்துவமற்ற ஜெந்து ஆனாலும் கன்மலையில் தன் வீட்டை தோண்டி வைக்கின்றது. இதனால் தன் பாதுகாப்பை பெருக்கிகொண்டது. இது எப்படி சாத்தியம்? தேவன் அதற்கு ஞானத்தை கொடுத்தார் அதனால்தான் முடிந்தது. அதுபோல் நீங்கள் சத்துவமற்று காணப்படலாம். அப்படிப்பட்டவர்களுக்கு தேவன் ஞானத்தை கொடுத்து சத்துவத்தை பெருகப்பண்ணுவார். ஆமென்.

No comments:

Post a Comment

உழைப்பாளியான ரூபவதி

"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…" - பிரசங்கி 9:10   செல்வமும், களியாட்டுகளும், புகழும், பெருமைய...