அன்பு வாசகர் அனைவருக்கும்,
அன்புடன் இனிய காலை வணக்கம் !!
இந்த நாள் உங்களுக்கு நல்ல நாளாய் அமைவதாக!!!
மனதை மாற்றும் குட்டிக்கதையுடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.!!!
அங்கலாய்ப்பு .....
*******
ஒருவனுக்கு கிணறு ஒன்று இருந்தது. .அதில் தண்ணீர் நிரம்பி இருந்தது.
அவன் போதாத நேரம் இந்த தண்ணீா் நிறைந்த கிணற்றை ஒரு விவசாயிக்கு விற்க்கும்படி நேர்ந்தது. இந்த கிணற்றில் பல ஊற்றுகண்கள் தண்ணீரை பெருக செய்து கொண்டிருந்தது.
கிணற்றை விலைக்கு வாங்கிய விவசாயி மகிழ்ச்சியோடு த்ண்ணீா் இறைத்து விவசாயம் பண்ணி மிகப் பெரிய அளவில் பணம் சம்பாதிக்கலாம் என்று அந்த கிணற்றுடன் தோட்டத்தையும் அதிக பணம் கொடுத்து வாங்கினான்.
தண்ணீா் நல்ல ருசியுள்ள தண்ணீராக இருந்தபடியினாலும் எக்கசக்கமான தண்ணீா் வரத்து இருந்தபடியினாலும் விவசாயத்திற்கு மாத்திரமல்ல. தண்ணீரையும் விற்று பணமாக்கலாம் என்ற யோசனையோடு கூட இருந்தான்.
கிணற்றை விலைக்கு வாங்கிய விவசாயி, அடுத்த நாள் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க ஆவலுடன் கிணற்றுக்கு வந்தார்.
கிணற்றை விற்றவனுக்கு அங்கலாய்ப்பு ..அடுத்த நாள் காலையில்
கிணற்றையும் திட்டத்தையும் விற்றவன் அதை வாங்கிய விவசாயி தோட்டத்தில் நின்று கொண்டிருந்தான்.
அவன்
விவசாயியைத் தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்தான்.
விவசாயிக்குக் கோபம் வந்தது.
“எனக்குக் கிணற்றை விற்று விட்டு அதிலிருந்து தண்ணீர் எடுக்க விடாமல் செய்கிறாயே? இது நியாயமா?” என்று விற்றவனைப் பார்த்துக் கோபத்துடன் கேட்டான்.
கிணறு விற்றவன், “நான் உனக்குக் கிணற்றையும் தோட்டத்தையும் தான் விற்றேன். கிணற்றிலிருக்கும் தண்ணீரை விற்கவில்லை.
எனவே நீ தண்ணீரை இங்கிருந்து எடுக்கக் கூடாது” என்று வாதம் செய்யத் தொடங்கினான்.
விவசாயி குழப்பத்துடனும் கோபத்துடனும் உள்ளூர் நீதிபதியிடம் சென்று முறையிட்டான்.
நீதிபதி
இருவரையும் அழைத்து இருவர் பக்கத்து நியாயத்தையும் விசாரித்தார்.
பின்னர் கிணற்றை விற்றவனிடம் “நீ கிணற்றை இந்த விவசாயிக்கு விற்றுவிட்டதால் கிணறு உன்னுடையதல்ல.
அதில் உனது தண்ணீரை இன்னமும் வைத்திருப்பது தவறு. உனக்கு அதில்தான் தண்ணீரைச் சேமித்து வைக்க வேண்டுமென்று விரும்பினால்,
விவசாயிக்கு அதற்கான வாடகையைத் தினமும் கொடுத்து விடு. இல்லையென்றால் கிணற்றிலிருந்து உனது தண்ணீரை எடுத்துக் கொண்டு உடனே வெளியேற வேண்டும்” என்று தீர்ப்புக் கூறினார்.
கிணறு விற்றவன், தனது தவறுக்கு மன்னிப்புக் கோரியதுடன் கிணற்றின் முழுப் பயனையும் விவசாயி அனுபவிக்கலாம் என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்றான்.
என் அன்பு வாசகரே,
அங்கலாய்ப்பு யாரைதான் விட்டு வைத்தது. அடுத்தவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கிருபைக்குள் வாழ்கிறவா்களுக்கு மட்டும் தான் இருக்கும். ஏனென்றால்
அவர்கள் கிருபையின் ஆவியினால் வழிநடத்தப்படுகிறாா்கள்.
இவர்கள் தனக்கானவைகளை மட்டுமல்ல பிறருக்கானவைகளையும் நோக்குபவா்கள் கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையை ஆவியானவா் அவா்களில் வைத்துள்ளார்.
பைபிள் சொல்கிறது.
உத்தமனுடைய நீதி அவன் வழியைச் செம்மைப்படுத்தும்: துன்மார்க்கனோ தன் துன்மார்க்கத்தினால் விழுவான்.
மாயக்காரன் தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுக்கிறான்: நீதிமானோ அறிவினால் தப்புகிறான். மாறுபாடுள்ள இருதயமுள்ளவர்கள் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்: உத்தம மார்க்கத்தாரோ அவருக்குப் பிரியமானவர்கள்.
வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு, அதிகமாய் பிசினித்தனம் பண்ணியும் வறுமையடைவாரும் உண்டு.
உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்: எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.
(நீதிமொழிகள் 11:5,9,20,24,25)
எனவே
கிருபையின் ஆவியானவருக்குள் உங்களை ஒப்புவியுங்கள். அவா் உங்களை வேதத்தின்படி போதித்து வழிநடத்தி இயேசுவின் சுபாவத்தைக் கொடுத்து அதில் நிலைத்திருக்கச் செய்வாா்.
நல்ல சுபாவமுள்ளவா்களாய் கா்த்தருக்கு மகிமையான நீதியின் விருட்சங்களாய் இவ்வுலகத்தில் கா்த்ருக்குச் சாட்சியாக இருப்பீா்கள்.
நீங்கள் ஆசீா்வதிக்கப் பட்டவர்கள்!!!!
No comments:
Post a Comment