அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது....
• (1 யோவான் 3:9).
சர்க்கரை, வெல்லம் போன்றவற்றைக் கொட்டி வைத்து அதன் நடுவில் பாகற்காய் வித்தைப் போடுங்கள். அது முளைத்து வளர்ந்து வரும்போது தினமும் இனிப்புத் தன்மை உடைய ஏராளம் பொருட்களையே அதனைச் சுற்றிலும் போட்டு தண்ணீர் ஊற்றுங்கள். இப்போது பாகற்காய் செடி வளர்ந்து காய் காய்த்து விட்டது. இப்போது காயௌ வெட்டி சாப்பிட்டுப் பாருங்கள். அது நிச்சயம் இனிப்பாயிராமல் கசப்பாகவேயிருக்கம். இத்தனை நாளும் பாகற்காய் செடியை இனிப்பான ஒரு சூழ்நிலையில் தானே வளர்த்து வந்தோம். பின்னர் எப்படி அது கசக்கிறது என்று கேட்டால், பாகற்காய் செடி வளருகின்ற சூழ்நிலை அல்ல, அதன் வித்துதான் காயின் தன்மையை நிர்ணயிக்கும் என்பதை அறிந்து கொள்வீர்கள்.
நல்ல ஆராதனைச் சூழ்நிலையில் தான் பல கிறிஸ்தவர்கள் வாழ்கின்றார்கள். நல்ல உபதேசச் சூழலில்தான் பல கிறிஸ்தவர்கள் வளர்கின்றார்கள். நல்ல பக்திச் சூழ்நிலைகளில்தான் பல கிறிஸ்தவர்கள் போக்கும் வரத்துமாய் இருக்கின்றார்கள். ஆனால், அவர்களின் ஆசை, வாழ்க்கைமுறை, சுபாவம், குறிக்கோள் ஆகியவை வெளியரங்கமாகிற வேளைகள் வருகிறது. அவை பரிசுத்த தரமாய் இராமல் மாம்சீகத் தரமும், உலகத்தரமுமாகவே இருக்கின்றது. சபை சூழ்நிலைகளில் பக்திமான்கள், ஆராதனை சூழ்நிலையில் ஆவியில் நிறைந்தவர்கள், ஊழியச் சூழ்நிலையில் ஆத்தும தாகம் நிறைந்தவர்கள், பிரசங்க சூழ்நிலையில் வேதப் பிரியர்கள், உபதேசச் சூழ்நிலையில் வைராக்கியமானவர்கள்.
ஆனால், சுபாவங்களை வெளிப்படுத்தும் சூழ்நிலை வரும் போது, மனநிலை வெளிப்படும் போதும் இன்னும் அவர்கள் பாவத்தின் சாயலிலேயே இருப்பது தெரியவரும். ஏனென்றால், சூழ்நிலைகள் அல்ல வித்துதான் முக்கியம்.
சிலர் எவ்வளவு ஆராதித்தாலும், ஜெபித்தாலும், ஊழியம் செய்தாலும் அவர்கள் தேவனால் பிறந்தவர்கள் அல்ல. அவர்களுக்குள் பரிசுத்த ஆவியாகிய வித்து இல்லை. எனவே, அவர்களிடம் பரிசுத்த ரகமான சுபாவங்களையும், வாழ்க்கை முறையையும் காண முடியாது. ஏனென்றால், அவர்கள் இன்னும் உண்மையான இரட்சிப்பின் அனுபவம் பெறவில்லை. அவர்கள் இன்னும் உண்மையான மறுபிறப்பின் அனுபவம் பெறவில்லை. அவர்களிடம் இன்னும் அடிப்படையில் பாவ வித்தும், ஜென்ம சுபாவ வித்துமே சாகாமல் உள்ளது. எனவே, எத்தகைய பரிசுத்த சூழ்நிலைகளில் அவர்கள் வாழ்ந்தாலும், கனிகளோ ஜென்மசுபாவ வித்தின் அடிப்படையிலே இருக்கும். உண்மையான மனந்திரும்புதலின் அனுபவம் தேடி இயேசுவைப் பற்றிக் கொண்டால் பரிசுத்த வித்தின் செயல்பாடு ஆரம்பிக்கும்.
இன்றைய சிந்தனைக்கு :
சிங்கம் போல வாழவேண்டும். ஆனால், சிறுநரியைப் போல இருந்து கொண்டல்ல.
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை நம் அனைவரோடும் கூட இருப்பதாக. ஆமென். ஆமென்.
ஆமென் அல்லேலூயா!.

No comments:
Post a Comment