✍ தேவனுடைய சபையில் போதகரின் இடம் சுவிசேஷகர், மேய்ப்பர் ஆகியோருக்கு உள்ளதுபோலவே மூன்றாவது இடமே!
(1கொரி.12:28)
அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகளுக்கு மேலாக ஒரு போதகன் தன்னை உயர்த்தாமல், தன் அளவை அறிந்து செயல்படவேண்டும்.
அதேவேளை, அப்போஸ்தலரை பிரதிஷ்டைச் செய்யும் கிருபை போதகருக்கும் உண்டு. (அப்.13:2,3)
ஒரு போதகரை பிற அழைப்புள்ள எவரும் [மூப்பர் சங்கத்தார்]
பிரதிஷ்டைச்செய்யலாம். (1தீமோத்.4:14)
ஞானஸ்நானம் கொடுக்வோ, திருவிருந்துகொடுக்கவோ, பிரதிஷ்டைச்செய்யவோ போதகருக்குத் தடையில்லை!
அந்தியோகியா சபையில் போதகரும் தீர்க்கதரிசிகளுமாயிருந்தவர்கள்தான் இவைகளைச்செய்தார்கள்! (அப்.13:1-3)
🤔அப்போஸ்தலர்களையே பிரதிஷ்டைச்செய்ய தகுதியுள்ள போதகர்களை இன்றைய மேய்ப்பர்கள் பலர், சபையில் ஞானஸ்நானம் மற்றும் திருவிருந்து கொடுக்கும் வேளைகளில் வெறும் பார்வையாளர்களாகவே வைத்துக்கொண்டிருக்கிறார்களே!
😊 நான் வருமளவும் வாசிக்கிறதிலும் புத்திசொல்லுகிறதிலும் உபதேசிக்கிறதிலும் ஜாக்கிரதையாயிரு.
1 தீமோத்.4:13
என்று போதகனாகிய தீமோத்தேயுவுக்கு பவுல் தரும் ஆலோசனையிலிருந்து நாம் அறியவேண்டியது என்னவெனில்:
வேதத்தை வாசிக்கிறதும், தேவஜனங்களாகிய சபைக்கு புத்திசொல்லுகிறதும், உபதேசிக்கிறதுமே, ஒரு போதனின் பிரதான பணியாகும்!
புத்திசொல்லவும் உபதேசிக்கவும் ஜாக்கிறதையாய் இருக்கவேண்டுமானால், வாசிக்கிறதில் போதகன் ஜாக்கிரதையாய் இருக்கவேண்டியது அவசியம்!
மூப்பராகிய சங்கத்தார் தன்மேல் கைகளை வைத்தபோது தனக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தீர்க்கதரிசனமாக உரைத்த வரத்தைப் பற்றி தீமோத்தேயு அசதியாயிருக்கக்கூடாது என்று அவருக்கு ஆலோசனைத் தருகிறார் பவுல்.
(1 தீமோத்.4:14)
தனக்கு தேவன் அளித்துள்ள வரத்தைப்பற்றி ஒரு போதகன் அசதியாய் இருக்கக்கூடாது.
வாசிக்கிறதில், புத்திசொல்லுகிறதில், உபதேசிக்கிறதில் நாளுக்குநாள் தேறும்படிக்கு, அவன் தேவன் தனக்கு அளித்த வரங்களையே சிந்தித்துக்கொண்டு, அவைகளில் நிலைத்திருக்கவேண்டும்!
நீ தேறுகிறது யாவருக்கும் விளங்கும்படி இவைகளையே சிந்தித்துக்கொண்டு, இவைகளிலே நிலைத்திரு.
1 தீமோத்.4:15
என்கிறார் பவுல்.
ஒரு போதகர் நாளுக்குநாள் தேறுகிறது, அவரை கவனிக்கிற யாவருக்கும் விளங்கும்படி காணப்படவேண்டும்.
🤔 "இது ஆயுசுக்கும் தேறவே தேறாது" என்று சொல்லக்கூடிய நிலையில்தானே பல போதகர்களின் நிலை உள்ளது!
வெட்கபடாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் தன்னைத் தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்துவதில்தான் ஒரு போதகனின் தேர்ச்சி விளங்கும்!
(2 தீமோத்.2:15)
தான் நிதானமாய் பகுத்து போதிக்கிற சத்தியத்தைக்குறித்து மற்றவர் என்ன நினைப்பார்களோ என்று ஒரு போதகன் வெட்கப்படவே கூடாது!
🤔 வெட்கப்படுவதால்தான் சத்தியத்தை நிதானமாகப் பகுக்காமல், பல போதகர்கள் தங்கள் மனசுக்குத் தோன்றினபடியெல்லாம் அடித்துவிடுகிறார்களோ!
😊 உன்னைக்குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்.
1 தீமோத்.4:16
என்று பவுல் சொல்லுகிறதை போதகர்கள் நன்கு கவனிக்கவேண்டும்.
தன் போதகத்திற்கேற்றபடி தன் வாழ்வு இருக்கிறதா என்பதை ஒரு போதகன் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்!
அப்போதுதான் தன்னையும் தன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் அவன் இரட்சித்துக்கொள்ளமுடியும்.
😁 வாழ்க்கையில் குறையில்லாதவர்கள் எவருமில்லை. ஆனால் வாழ்க்கை முழுவதும் ஒரு போதகன் குறைவுள்ளவனாக இருப்பது சரியில்லை!
நாட்கள் கூடக்கூட ஜீவியம் மாறவேண்டியது ஒரு போதகனுக்கு அவசியம்!!
😊 மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.
1 கொரிந்.9:27
என்று அப்போஸ்தலன் பவுல் சொல்லுகிறபடி, போதகனும் செய்யவேண்டும்!
பரலோகம் போக மற்றவர்களுக்கு சுலபமாக வழிகாட்டிவிட்டு, தாங்கள் பாதாளத்திற்குப் போகும் வாய்ப்பு போதகர்களுக்கு அதிகம் உண்டு!
என் சகோதரரே, அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக.
யாக்கோபு 3:1
என்று எச்சரிக்கிறார் யாக்கோபு.
குணப்படாதவர்கள் போதகராவது ஆபத்தானது!

No comments:
Post a Comment