தாவீது இஸ்ரவேலின் அரசராக இருந்த காலகட்டம். தாவீது எனும் மாபெரும் தலைவனுக்குக் கீழே ஒட்டு மொத்த இஸ்ரயேல் மக்களும் இணைந்திருந்தார்கள். தாவீது மன்னன் எதிரிகளையெல்லாம் வென்று உச்சத்தில் இருந்தார். எதிரியாய் மாறிய அவருடைய மகன் அப்சலோம் கூட தாவீதின் வீரர்களால் கொல்லப்பட்டனர்.
அந்தக் கால கட்டத்தில் பிக்ரி என்பவனின் மகனான சேபா என்றொரு இழி மகன் இருந்தான். அவன் எக்காளம் ஊதி, தாவீதிடம் எங்களுக்கு இனிமேல் பங்கு இல்லை. ஈசாயின் மகனிடம் மரபுரிமை இல்லை என கத்தினான். மக்கள் தாவீதை விட்டு விட்டு புதிய தலைவனான சேபாவின் பின்னால் திரளத் துவங்கினர். ஆனால் யூதா குலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் அவனோடு சேரவில்லை. காரணம் தாவீது யூதா குலத்தைச் சேர்ந்தவர்.
தாவீதுக்கு பத்து வைப்பாட்டிகள் இருந்தார்கள். தாவீது அவர்களைப் பாதுகாப்பான ஒரு இடத்தில் தங்க வைத்துப் பராமரிக்க ஏற்பாடுகள் செய்தார். பின் அசாமாவை அழைத்தார்.
“மூன்று நாட்களுக்குள் யூதாவினரை என்னிடம் அழைத்துக் கொண்டு வா. நீயும் கூடவே வா” ஏன்றார். ஆனால் அவனோ காலம் தாழ்த்தினான்.
பின்னர், தாவீது அரசர், அபிசாயை அழைத்தான். “போ.. வீரர்களைத் திரட்டிக் கொண்டு போய் சேபாவை அழியுங்கள். இல்லையேல் அவன் நமக்கு மிகப்பெரிய தீங்கு விளைவிப்பான். அப்சலோமை விட அதிகம் தீங்கு தருவான்” என்றார். அபிசாயின் தலைமையில் தாவீதின் முதன்மை வீரர் யோவாபு உட்பட எல்லோரும் அணிதிரண்டனர். அவர்கள் சேபாவை விரட்டிக் கொண்டு போனார்கள்.
போகும் வழியில் முதலில் அனுப்பப்பட்ட அசாமா வழியில் வந்தான். படைத்தளபதி யோபாவு அவனைக் கொன்றுவிட திட்டமிட்டார். அவருடைய இடையில் குறுவாள் ஒன்று இருந்தது. அசாமா பக்கத்தில் வந்ததும், “சகோதரனே நலமா ?” என்று கேட்டு முத்தமிடுவதற்காக நெருங்கினார். அருகில் சென்றதும் இடது கையால் குறுவாளை இறுகப் பற்றி அவனுடைய வயிற்றில் குத்தி அவனைக் கொன்றார்.
வீரர்கள் தொடர்ந்து சேபாவை விரட்டிக் கொண்டு போனார்கள். பெத்மாக்காவின் ஆபேல் எனுமிடத்தில் அவன் ஒளிந்து கொண்டான். அவனைப் பிடிப்பதற்காக தாவீதின் படை சென்றது. நகரம் பெரிய மதில் சுவரால் கட்டப்பட்டிருந்தது. தாவீதின் வீரர்கள் மதில் சுவரை இடிக்கத் துவங்கினார்கள்.
நகருக்குள்ளே புத்தி கூர்மையுள்ள ஒரு பெண் இருந்தாள். அவள் குரலுயர்த்தி
“தயவு செய்து யோவாபுவை இங்கே வரச் சொல்லுங்கள். அவரிடம் நான் பேசவேண்டும்” என்றாள். அவர் அவளுடைய அழைப்பை ஏற்று சென்றார்.
“யோவாபு நீர் தானா ?” அந்தப் பெண் கேட்டாள்.
“ஆம்”
“தயவு செய்து நான் சொல்வதைக் கேளும்”
“கேட்கிறேன் சொல்”
“ஆபேலுக்குப் போய் ஆலோசனை கேள் – என்று முற்காலத்தில் சொல்வார்கள். அந்த அளவுக்கு இஸ்ரேலில் அமைதியும் நாணயமும் உடையவர்கள் நாங்கள். இஸ்ரயேலின் தாய் போன்ற நகரம் இது. இதை ஏன் அழிக்கத் தேடுகிறீர்கள் ? கடவுளின் உரிமைச் சொத்தை ஏன் விழுங்கப் பார்க்கிறீர்கள்?” அவள் கேட்டாள்.
“நகரை அழிக்க வேண்டுமென்பது எங்கள் நோக்கமல்ல. பிக்கிரியின் மகன் சேபா இங்கே இருக்கிறான். அவனைக் கொடுங்கள், நகரை விட்டுச் செல்கிறோம்” யோவாபு சொன்னார்.
“சரி. அவன் தலையை நகருக்கு வெளியே எறிந்து தருகிறோம். எடுத்துக் கொள்ளுங்கள்” என்று அவள் சொல்ல யோவாபு அவளிடமிருந்து விடைபெற்றார்.
அந்தப் பெண் நகரின் தலைவர்களையெல்லாம் அழைத்தாள். நகரைக் காப்பாற்ற இது ஒன்றே வழி என்பது நகரத் தலைவர்களுக்கும் புரிந்தது. அவர்கள் கலகக்காரன் சேபாவின் தலையை வெட்டி நகருக்கு வெளியே எறிந்தார்கள். சேபா எனும் கலகக் காரனின் அத்தியாயம் அங்கே நிறைவுற்றது.
யோவாபு எக்காளம் ஊதினார். வீரர்களெல்லாம் நகரை விட்டுச் சென்றனர்.
அறிவுக் கூர்மையாலும், துணிச்சலினாலும் ஒரு பெண் செய்த காரியம் அந்த நகரையே காப்பாற்றியது. அந்தப் பெண்ணின் பெயர் கூட பைபிளில் எழுதப்படவில்லை. விவிலியத்தில் வரலாறாய் மாறிப்போன பெண்கள் பலர் உண்டு. அவர்களுடன் இந்த பெயர் தெரியாத பெண்ணும் இணைந்து கொள்கிறாள்.
இக்கட்டான சூழல் எழும்போது பதட்டமடையாமல், கடவுள் கொடுத்த ஞானத்தைப் பயன்படுத்தி அந்த சூழலில் இருந்து தனது சமூகத்தைக் காப்பாற்ற துணிவு கொள்ளவேண்டும். இதையே சேபா எனும் கலகக் காரனின் முடிவு நமக்குச் சொல்கிறது.

No comments:
Post a Comment