Wednesday, 30 January 2019

நிறத்தை நம்பாதே

தினம் ஓர் குட்டிக் கதை•

அன்பு வாசகர் அனைவருக்கும்,
அன்புடன் இனிய மாலை வணக்கம் !!
இந்த நாள் உங்களுக்கு நல்ல நாளாய்
அமைவதாக!!!

சிந்திக்க வைக்கும் குட்டிக்கதையுடன் உங்களை  சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.!!!

“நிறத்தை நம்பாதே”..

ஒரு குளத்தில் பல வகையான வண்ண மீன்கள் வாழ்ந்து வந்தன. மீன்  குஞ்சுகள் எப்பொழுதும் கரையோரம் கூடி விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

அதில் சோமு, சிண்டு  என்ற மீன்கள் ஒரு நாள் விளையாடி கொண்டிருக்கும்போது

ஏய் சிண்டு... என்னைப் பிடி பார்க்கலாம் என்றான், என்கிட்டேயே சவால் விடறியா  இப்ப பாரு, ஒரு நொடியில் பிடிக்கறேன் என்று சொல்லி விளையாடி கொண்டிருந்தது.

அப்போது கரையில் ஒரு காகம் புழுக்களைக் கொத்திக் கொண்டிருப்பதை பார்த்து

 "ஏய் சோமு, அங்கே பார் அவன் எவ்வளவு கறுப்பாக இருக்கிறான்." அவன் குரலை நீ கேட்டிருகிறாயா? அருவருப்பாக இருக்கும்.

அவனை பார்த்தால் பயமாக இருக்கிறது வா போய்டலாம் என்று சிண்டு சொன்னதும், எல்லா மீன்களும்  குளத்துக்குள் வேகமாகச் சென்றன.

அவசர அவசரமாக மீன்கள் உள்ளே சென்ற போது  "பசங்களா? ஏன் இப்படி ஓடி வர்றீங்க? என ஒரு பெரிய மீன் கேட்டது

கரையில் காகம் இருக்கு. அதனோட நிறமும் குரலும் பயமா இருக்கு ? அதான்...

ஓ....! காகமா, அதால நமக்கு எந்த ஆபத்தும் இல்லே. உருவத்தை மட்டுமே வெச்சு ஒருத்தரைப் பற்றி தப்பா நினைக்கக் கூடாது என்று  அந்த பெரிய மீன் சொல்ல,

மற்ற மீன்குஞ்சுகள்
" இந்த தாத்தாவுக்கு வேற வேலை இல்லை. எப்பவும் உபதேசம் தான். வாங்க போகலாம்." என கூறி சென்றது

அடுத்த நாள் வந்தது;  குளத்தின் கரையில் கொக்கு ஒன்று அமர்ந்து இருந்தது; அதை பார்த்த மீன் குஞ்சுகள்,

 " ஏய் அங்கே பாரு வெள்ளையா... " அட! என்ன பறவை அது? வெள்ளையா எவ்வளவு அழகா இருக்கு! அலகும் நீளமா கச்சிதமா இருக்கு.

அடடே! அதனோட நடையைப் பாரேன். மீன் குஞ்சுகள் பேசும் சத்தம் கேட்டு குளத்தை நெருங்கியது கொக்கு.

உடனே மீன் குஞ்சுகள்; அண்ணே! நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. உங்க அலகைத் தொட்டுப் பார்க்கலாமா?

கொக்குக்கு ஒரே கொண்டாட்டம் ; 
ஓ! ......தொட்டுப் பாரேன்.

ஒரு மீன்  கொக்கை நெருங்க,
கொக்கு மீனை கவ்வியது. நல்லா மாட்டினியா? என்றது.  மாட்டிய மீன் ஆ! என்னை விட்டு விடு! என்று கெஞ்சியது. இதை பார்த்த மற்ற மீன் குஞ்சுகள் ஆபத்து... ஓடுங்க! ஓடுங்க! என்று குளத்திற்குள் சென்றன.

அந்த கொக்கு கவ்விய மீனுடன் வானத்தில் சென்று மறைந்தது.

மற்ற மீன் குஞ்சுகள் ; அந்த தாத்தா மீன் சொன்னது சரியாப் போச்சு. அழகை மட்டும் பார்த்து ஒருத்தரோட பழகக்கூடாது. ஆமாம்!  ஆமாம்! என்று உறுதியடுத்து கொண்டன.

அன்று முதல் மற்ற மீன் குஞ்சுகள் கவனமாக இருந்தன. சந்தோசமாக வாழ்ந்தன

என் அன்பு வாசகரே,
வெளிப்புறத்தைப் பாா்த்து ஏமாந்து போய்விடக் கூடாது.  உட்புறமாகிய மனசு தான் முக்கியம். 

இயேசு சொன்னாா்...
குருடரான வழிகாட்டிகளே, கொசுயில்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாய் இருக்கிறீர்கள். மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ,

போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள், உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது

குருடனான பரிசேயனே! போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு.

மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ,

வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள், அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும்.

அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள், உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.

• (மத்தேயு 23:24-28).

உள்ளம் பாிசுத்தமாயிருக்க ஆவியானவருக்கு உங்கள் இருதயத்தை ஒப்புக் கொடுங்கள்.அவா் உங்களை உள்ளும் புறமும் சுத்தமாக்கி செம்மையானவா்களாகவும் பாிசுத்தமானவா்களாகவும்  மாற்றி எல்லாருக்கும் ஆசீா்வாதமாக வைப்பார்.

மனதிலே பாிசுத்தமானவா்களாகவும்  வெளியில் பிரயோஜனமுள்ள பாத்திரமாகவும் உங்களை விளங்கக் பண்ணுவார். 

வெளியில் மட்டும் பாிசுத்தமானவா்களாக தங்களை காட்டிக் கொண்டிருக்கிறவா்களைக் குறித்து ஜாக்கிரதையாயிருங்கள்.  அவர்கள் உள்ளத்தில் பட்சிக்கிற ஓநாய்கள். வெண்மை  நிறத்தைப் பார்த்து ஏமாறாதிருங்கள்... 

நீங்கள் ஆசீா்வதிக்கப்பட்டவர்கள்!!!!                                             

ஆமென் அல்லேலூயா!.

No comments:

Post a Comment

உழைப்பாளியான ரூபவதி

"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…" - பிரசங்கி 9:10   செல்வமும், களியாட்டுகளும், புகழும், பெருமைய...