Friday, 30 November 2018

மீனைக்கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானா?

 if he ask a fish, will he for a fish give him a serpent?

லூக்கா  11

8: பின்பு, தனக்கு அவன் சிநேகிதனாயிருக்கிறதினிமித்தம் எழுந்து அவனுக்குக் கொடாவிட்டாலும், தன்னிடத்தில் அவன் வருந்திக் கேட்கிறதினிமித்தமாவது எழுந்திருந்து, அவனுக்குத் தேவையானதைக் கொடுப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

I say unto you, Though he will not rise and give him, because he is his friend, yet because of his importunity he will rise and give him as many as he needeth.

9: மேலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.

And I say unto you, Ask, and it shall be given you; seek, and ye shall find; knock, and it shall be opened unto you.

10: ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.

For every one that asketh receiveth; and he that seeketh findeth; and to him that knocketh it shall be opened.

11: உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பங்கேட்டால், அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக்கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானா?

If a son shall ask bread of any of you that is a father, will he give him a stone? or if he ask a fish, will he for a fish give him a serpent?

12: அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா?

Or if he shall ask an egg, will he offer him a scorpion?

13: பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்.

If ye then, being evil, know how to give good gifts unto your children: how much more shall your heavenly Father give the Holy Spirit to them that ask him? 

ஜெபக் குறிப்புகள்!

"ஜெப வேளையாகிய ஒன்பதாம்மணி நேரத்திலே, பேதுருவும், யோவானும், தேவாலயத்துக்குப் போனார்கள்" (அப். 3:1).

பாருங்கள்! பேதுருவுக்கும், யோவானுக்கும் ஜெப நேரமிருந்தது. ஜெபத்தின் இடமாக தேவாலயத்தை அவர்கள் தெரிந்துகொண்டார்கள். மாத்திரமல்ல, ஒழுங்காய் ஜெபிக்கிற வழக்கத்தையும் ஏற்படுத்திக்கொண்டார்கள். நீங்கள் ஊக்கமாக நீண்டநேரம் ஜெபிக்க வேண்டுமென்றால், ஜெபக் குறிப்புகளை வைத்துக்கொள்ளுங்கள். மட்டுமல்ல, ஒரு நல்ல ஜெப வழி முறையை உருவாக்குங்கள். அதற்கென்று ஒரு நோட்டுப் புத்தகத்தை தயாரித்துக்கொள்ளுங்கள்.

முதலாவது, கர்த்தருடைய ஊழியக்காரர்கள் பெயர்கள் என்னென்ன உங்கள் ஞாபகத்திற்கு வருகிறதோ, அத்தனையையும் எழுதி வைத்து, அவர்களுடைய பரிசுத்த ஜீவியத்திற்காகவும், பிரயாணத்திற்காகவும், ஊழியத்திற்கு திறந்த வாசல் இருக்கும்படியாகவும் ஊக்கமாக ஜெபியுங்கள். உங்கள் ஜெபம் ஊழியக்காரர்களை மட்டுமல்ல, உங்களையும்கூட பாதுகாக்கக்கூடியதாயிருக்கிறது. "யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார்" (யோபு 42:10). ஆகவே, ஊழியக்காரர்களுக்காக ஜெபித்தபிறகு, உங்கள் சிநேகிதர்கள், உறவினர்களுக்காக ஜெபியுங்கள். விசேஷமாக உங்களுடைய வாழ்க்கைத் துணை, பிள்ளைகளுக்காக போராடி, மன்றாடி ஜெபியுங்கள்.

நான் கொரியா தேசத்திற்குச் சென்றபோது, போதகர் பால் யாங்கி சோ அவர் கள், "பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே" என்ற ஜெபத்தை, ஏழு பகுதிகளாகப் பிரித்து, அதை ஒரு மணி நேரமாக, ஜெபித்து வருவதாகக் கூறினார்கள். எப்படியானாலும், ஜெபத்தின் முதல் பகுதியிலே, கர்த்தரைத் துதியுங்கள். அவருடைய நாமங்களை சொல்லித் துதியுங்கள். வேதத்தில் அவர் செய்த அற்புதங்களை தியானித்து, அவரைத் துதியுங்கள். அதற்கு உதவியாக, "ஸ்தோத்திரபலிகள் ஆயிரம்," "விசுவாச வார்த்தைகள் ஆயிரம்," "வாக்குத்தத்தங்கள் ஆயிரம்" என்ற புத்தகங்களையெல்லாம் நாங்கள் வெளியிட்டிருக்கிறோம். கர்த்தருடைய ஆவியினால் நிரம்பி, ஆவியானவரின் வழி நடத்துதலுக்கு ஒப்புக்கொடுத்து, கர்த்தர் ஏவுகிறபடி ஜெபித்துக்கொண்டிருங்கள்.

மற்றவர்கள், அநேகர் உங்களுடைய ஜெப உதவியை நாடி, எங்களுக்காக ஜெபியுங்கள். எங்கள் பிரச்சனைகளுக்காக ஜெபியுங்கள். குடும்பத்தில் ஒருமனப்பாடோ, அன்பின் ஐக்கியமோ இல்லை, "ஜெபியுங்கள்" என்று கேட்டிருக்கக்கூடும். அதையும்கூட உங்களுடைய ஜெபக் குறிப்பு நோட்டிலே, எழுதிக்கொள்ளுங்கள். அது சின்ன ஜெப நோட்டுப் புத்தகமாயிருந்தால், நீங்கள் வெளியே செல்லும் நேரத்தில், அல்லது பஸ் ஸ்டாப்பில் காத்திருக்கிற நேரத்தில், ஜெபித்துக் கொண்டேயிருக்கலாம். பிரயாணம் பண்ணுகிற நேரத்தில், அதை கையில் வைத்துக்கொண்டால் சிந்தனைகளை சிதற விடாதபடி, கருத்தூன்றி ஜெபிக்க உதவியாயிருக்கும்.

ஒவ்வொரு ஜெபக் குறிப்புக்காக ஜெபித்து வரும்போது, கர்த்தர் அதைக் கேட்டு விட்டார். நிச்சயமாய் பதில் கிடைக்கும் என்று, உங்களுடைய உள்ளம் சாட்சியிடுகிற நேரத்தில் ஜெபிப்பதற்கு அடுத்த ஜெபக் குறிப்புக்காக நீங்கள் செல்லலாம். ஜெப நேரத்தில், முதலாவது நீங்கள் தேவனைப் பார்க்கிறீர்கள். இரண்டாவது, உங்களை நீங்களே பார்க்கிறீர்கள். மூன்றாவது, மற்றவர்களைப் பார்க்கிறீர்கள். தேவனை நோக்கிப் பார்க்கும்போது, அவரைத் துதிக்க வேண்டும். அவரைப் பாடிப் போற்றி, அவருக்கு ஆராதனை செய்ய வேண்டும். மட்டுமல்ல, அவர் உங்களுக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும், அவரை துதித்துப் போற்றிப் புகழ வேண்டும்.

நினைவிற்கு :- "என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே" (சங். 103:2).

தூதர்கள் பற்றிய சில தகவல்கள்:

தூதர்களின் தன்மைகள் என்ன என்ன❓

1. அறிவு

2.உணர்ச்சி தொடர்புடைய செயல்பாடுகள்

3. தெரிந்தெடுக்கும் ஆற்றல் உண்டு

4. ஊனுடல் இல்லாத ஆவி உயிரினம்

5. மனிதனைவிட வல்லமை உள்ளது

6. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மை கொண்டு இருக்க வேண்டும்

7. இவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று சொல்ல முடியாது

8. மனிதனை விட சற்று உயர்ந்த நிலையில் கூறப்படுகிறது

9. தேவனின் கட்டளையை மட்டும் நிறைவேற்றுவாரர்கள்

10. மனித உருவத்திலும் வருவார்கள்.

தூதர்களை இரு குழுவாக பிரிக்கலாம் அவை:

1.பரிசுத்த தூதர்கள் (மத் 8:38,1தீமோ 5:20)

2.வீழ்ச்சியடைந்த தூதர்கள் (மத் 25:41, வெளி 12:9)

பரிசுத்த தூதர்களின் பெயர்கள் :

1. ஊழியக்காரர் (சங் 103:20,21; 104:4)

2. சேனை
(ஆதி 32:1,2 ; யோசு 5:14; 1சாமு17:45;சங்89:8)

3. இரதங்கள் (2இராஜா 6:16,17; சங்68:17; சங்6:5)

4. காவலாளன் (தானி4:13,17)

5. பலவான்களின் புத்திரர் (சங்29:1;89:6)

6. தேவ புத்திரர்
    (ஆதி 6:2,4; யோபு1:6 ;2:1 ;38:7)

7. பரிசுத்தவான்கள் (சங்89:7 ;தானி8:13; சக14:5)

8. நட்சத்திரங்கள் (யோபு38:7; சங்148:2,3;வெளி12:3,4)

9. பணிவிடை ஆவிகள் (நமக்கு வேலை செய்கிறவர்கள்) -

விழுந்து போன தூதனின் பெயர்:
லூசிபர்  (ஏசாயா 14 & எசக்கியேல் 28)

 அவன் கூட்டாளிகள்:

1. பேய்கள் (உபா 32:17
     எபிரேய மொழியில் இது ஷெடிம் (shedim)என்று அழைக்கப்படுகிறது)

2. தேவர்கள் (சங் 96:8 எபிரேய மொழியில் எலிலிம் (Elilim)எனப்படும்)

3. பிசாசின் தூதர்கள் (மத் 25:41; 
     வெளி12:9)

4. ஆதிமேன்மையைக் காத்துக் கொள்ளாத தூதர்கள் (2 பேது 2:4 , யூதா 6)

5. அசுத்த ஆவிகள் (மத்10:1 ;மாற்1:27;3:11;5:13)

6. வஞ்சிக்கிற ஆவிகள் (1தீமோ 4:1)

7. பொல்லாத ஆவிகள் (லூக்11:26)

8. பிசாசு (மத் 4:24;7:22; 8:16; 9:32; 10:8; மாற்1:32)
…………………………………………………………
தூதர்களை எபிரேயத்தில் 'மலாக் ' என்றும் கிரேக்கத்தில் 'அங்கெலொஸ்' என்றும் பயன்படுத்தப்படுகிறது.

தூதர்களைப் பற்றி வேதாகமத்தில்
34 நூல்களில் சுமார் 273 முறை காணமுடியும் ( பழைய ஏற்பாட்டில் 108 முறையும் புதிய ஏற்பாட்டில் 165 முறையும் உள்ளது.

தூதர்களின் செயல்கள்:

செய்திகள் கொண்டுவரும் தூதன் : காப்ரியேல் - தேவ சந்நிதானத்திலே நிற்கிற தூதன் - செய்தி கொண்டு வரும் தூதன் தேவதூதன் அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவசந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன், உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன், (லூக்கா 1: 19) இவர்கள் மிகாவேலைப்போல வல்லமையில்லாதவர்கள் அல்லது வல்லமையில் குறைந்தவர்கள். (தானி 10: 13) வல்லமையான தூதன் : மிகாவேல் வானத்திலே யுத்தமுண்டாயிற்று, மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே யுத்தம்பண்ணினார்கள், வலுசர்ப்பமும் அதைச்சேர்ந்த தூதரும் யுத்தம்பண்ணியும் ஜெயங்கொள்ளவில்லை. (வெளி. விசேஷம் 12:7) மிகாவேலும் அவனைச்சேர்ந்த தூதர்களும் என வேதம் சொல்லுகிறது. அப்படியென்றால் எங்கு யுத்தம் நடந்தாலும் மிகாவேலைச்சேர்ந்த தூதர்களே இருப்பார்கள் என அறிய முடிகிறது. மேலும் கர்த்தரின் சேனை பரலோகத்திலே உண்டு. இவர்களும் மிகாவேலின் கூட்டமே. (தானி 10:13) குணமாக்கும் தூதன் : பெயர் குறிப்பிடபடவில்லை, ஆனாலும் பெதஸ்தா குளத்திலே தண்ணீரை கலக்கிய தூதனை குணமாக்கும் தூதன் எனலாம். சில சமயங்களிலே தேவதூதன் ஒருவன் அந்தக் குளத்திலே இறங்கி, தண்ணீரைக் கலக்குவான்: தண்ணீர் கலங்கின பின்பு யார் முந்தி அதில் இறங்குவானோ அவன் எப்பேர்ப்பட்ட வியாதிஸ்தனாயிருந்தாலும் சொஸ்தமாவான். (யோவான் 5 :4) நகரத்தை நாட்டை சங்காரிக்கும் தூதன் : சங்காரத்தூதன் தேவதூதன் எருசலேமை அழிக்கத் தன்கையை நீட்டினபோது, கர்த்தர் அந்தத் தீங்குக்கு மனஸ்தாபப்பட்டு, ஜனங்களைச் சங்கரிக்கிற தூதனை நோக்கி: போதும், இப்போது உன் கையை நிறுத்து என்றார். அந்த வேளையில் கர்த்தருடைய தூதன் எபூசியனாகிய அர்வனாவின் போரடிக்கிற களத்திற்கு நேரே இருந்தான். (2 சாமுவேல் 24: 16) வெளிப்படுத்தின விஷேசம் புத்தகத்திதிலுள்ள முக்கியமான தூதர்கள் : ( தனியாய் பதிவு உள்ளது) எக்காளம் ஊதும் தூதர்கள்: பின்பு, ஒரு தூதன் வானத்தின் மத்தியிலே பறந்துவரக்கண்டேன், அவன் மகா சத்தமிட்டு: இனி எக்காளம் ஊதப்போகிற மற்ற மூன்று தூதருடைய எக்காளசத்தங்களினால் பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ, (ஆபத்துவரும்) என்று சொல்லக்கேட்டேன். (வெளி. விசேஷம் 8:13) சிறந்த ஸ்தானத்திலுள்ள தூதன் : பின்பு, பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன், மேகம் அவனைச் சூழ்ந்திருந்தது, அவனுடைய சிரசின்மேல் வானவில்லிருந்தது, அவனுடைய முகம் சூரியனைப்போலவும், அவனுடைய கால்கள் அக்கினி ஸ்தம்பங்களைப்போலவும் இருந்தது. (வெளி. விசேஷம் 10:1) இப்படிப்பட்ட தூதன் வேதத்திலே ஒருமுறையே வருகிறார். மேகம் சூழ, தலையிலே வானவில்லோடு, முகம் சூரியனைப்போலவும், அவனுடைய கால்கள் அக்கினி ஸ்தம்பம்போல ஒரு சிறந்த ஸ்தானத்தில் உள்ளவனாக காணப்படுகிறான். நம்மிடமிருந்து செய்தி / ஜெபங்களை எடுத்தும் செல்லும் தூதன் : பெயர் சொல்லப்படவில்லை. வேறொரு தூதனும் வந்து, தூபங்காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துப் பலிபீடத்தின் படியிலே நின்றான், சிங்காசனத்திற்குமுன்பாக இருந்த பொற்பீடத்தின்மேல் சகல பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தும்படி மிகுந்த தூபவர்க்கம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. அப்படியே பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தப்பட்ட தூபவர்க்கத்தின் புகையானது தூதனுடைய கையிலிருந்து தேவனுக்குமுன்பாக எழும்பிற்று. (வெளி. விசேஷம் 8 :3 -4) இவரே ஜெபங்களை எடுத்துச்செல்லும் தூதன். சூரியனின் தூதன் : பின்பு ஒரு தூதன் சூரியனில் நிற்கக்கண்டேன், அவன் வானத்தின் மத்தியில் பறக்கிற சகல பறவைகளையும் பார்த்து: (வெளி. விசேஷம் 19 :17) காற்றின் தூதன் : இவைகளுக்குப்பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின்மேலாவது, சமுத்திரத்தின்மேலாவது, ஒரு மரத்தின்மேலாவது, காற்று அடியாதபடிக்கு, பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக்கண்டேன். (வெளி. விசேஷம் 7: 1) ஆராதனையின் தூதன் : [விடிவெள்ளியின் மகன் (இவன் தள்ளப்பட்ட தூதன்) நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன், வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும், (ஏசாயா 14 :13)] பரலோகத்தில் ஆராதனை தூதர்கள் இருக்கிறார்கள். சேராபீன்களும் ஆராதனையிலிருக்கிறார்கள் என்பதை ஏசாயா 6:6 ல் காணலாம். இருந்தும் இந்த தூதன் ஏசாயா உதட்டை தணலால் தொட்டு பாவ நிவர்த்தி செய்தான். இரண்டு விதமான ஊழியத்தைச்செய்கிறதை பார்க்கலாம். அப்பொழுது சேராபீன்களில் ஒருவன் பலிபீடத்திலிருந்து, தன் கையிலே பிடித்த குறட்டால் ஒரு நெருப்புத்தழலை எடுத்து, என்னிடத்தில் பறந்து வந்து, (ஏசாயா 6 :6) அதினால் என் வாயைத் தொட்டு: இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவர்த்தியானது என்றான். (ஏசாயா 6 :7) காக்கும் தூதன் : இப்படி பல வகையான தூதர்களை வேதத்தில் காண முடிகிறது. சங்கீதம் 91 ல் உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார். (சங்கீதம் 91 :11) இந்த தூதன் விசுவாசிகளை காக்கும் தூதன் மற்றும் மத்தேயு 18: 10 ல், இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்பொழுதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அவர்களுக்குரிய தேவ தூதன் அல்ல தூதர்கள் என சொல்லப்பட்டிருக்கிறது. காக்கும் தூதர் ஒருவர் உண்டென்பதை சங் 91: 11 ல் கண்டோம். நமக்குரிய தேவ தூதர்கள் பரம பிதாவின் சமூகத்தை தரிசிக்கிறார்கள். நமக்கு தூதராகவும் பிதாவுக்கு நம்மைப்பற்றிய செய்தியை சொல்லுகிறவார்களாகவும் இருக்கிறார்கள். இப்படி எல்லா வகையிலும் எவ்வளவு தூதர்கள் இருப்பார்கள்? சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர்களுடைய எண்ணிக்கை பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது. (வெளி. விசேஷம் 5 :11) நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமிடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களினிடத்திற்கும்……… எபிரெயர் 12:22 ல் தேவ தூதர்கள் (Myriads) மைரியாட்ஸ் (கிரேக்க வார்த்தையில்) குறிக்கப்பட்டுள்ளது. அது எண்ணற்ற தேவதூதர்களைக் குறிக்கிறது, அதாவது தேவதூதர்கள் கோடிக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள்!! நன்றி அப்பா பிதாவே!

Thursday, 29 November 2018

தீர்க்கதரிசிகள் எப்படிப்பட்ட குணங்களை உடையவராக இருக்கவேண்டும்?

✍1⃣ ஜனங்கள் கேட்டாலும் கேளாவிட்டாலும்,  தேவன் சொல்ல சொல்லுகிறதை அப்படியே சொல்லுகிறவராக இருக்கவேண்டும்.

கலகக்காரராகிய அவர்கள் *கேட்டாலும்* சரி, *கேளாவிட்டாலும்* சரி, நீ என் வார்த்தைகளை *அவர்களுக்குச் சொல்லு.*
                       எசேக்கி.2:7

என்று எசேக்கியேலிடம் கரத்தர் சொல்லுகிறதை கவனிக்கவும்.

2⃣ எவ்வளவு வேண்டியவரானாலும் தேவன் அவருக்கு எதிராகச் சொல்லும் காரியங்களை மறைக்காமல் சொல்லவேண்டும்.

நீ போய், சிறைப்பட்ட *உன் ஜனத்தின் புத்திரரிடத்திலே* சேர்ந்து, அவர்கள் கேட்டாலும் கேளாவிட்டாலும் அவர்களோடே பேசி, கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைக்கிறார் என்று *அவர்களோடே சொல்*
                     எசேக்கி.3:11

என்று கர்த்தர் எசேக்கியேலுக்கு கட்டளையிட்டதைப் பாருங்கள்.

3⃣ ஒருவருக்கு எதிராக தீர்க்கதரிசனம் உரைக்கவேண்டியிருந்தாலும், அவர்மேல் மனதுருக்கமுள்ளவராக இருக்கவேண்டும்.

*ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால்* நலமாயிருக்கும், அப்பொழுது *என் ஜனமாகிய குமாரத்தி கொலையுண்ணக் கொடுத்தவர்கள் நிமித்தம் நான் இரவும்பகலும் அழுவேன்.*
                     எரேமியா 9:1

என்று எரேமியாவும்,

எருசலேம் நகரத்திற்கு சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, *அதற்காகக் கண்ணீர் விட்டழுது,* (லூக்கா 19:41)

உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது.
                    லூக்கா 19:42
உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி,
                    லூக்கா 19:43
*உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் உனக்கு வரும்*
                    லூக்கா 19:44

என்று, மாகதீர்க்கதரிசி இயேசு கிறிஸ்துவும், தண்டணைப்பெறப்போகிறவர்களுக்காக பரிதபிக்கிறதை,  தீர்க்கதரிசிகள் மாதிரியாக எடுத்துக்கொள்ளவேண்டும்.

*"நான் சொன்னபடியே தண்டணை கிடைத்துவிட்டதே"* என்று   பெருமைப்பாராட்டவோ, மகிழ்ச்சியடையவோ கூடாது.

சவுலுக்கு எதிராக தீர்க்கதரிசனம் உரைத்துவிட்டு, அவனுக்காக துக்கித்துக்கொண்டிருந்த சாமுவேல் தீர்க்கதரிசியும் நல்ல மாதிரியே!
(1சாமு.15:26,28,35)

*வேண்டியவருக்கு சாதகமான, வேண்டாதவருக்கு எதிரான மனநிலையில் தீர்க்கதரிசிகள் இருக்கக்கூடாது.*

4⃣ எவ்வளவு பெரிய மனுஷனானாலும், எவ்வளவு பழகினவனானாலும் தெய்வபயமில்லாதவனோடு ஐக்கியம் பாராட்டக்கூடாது.

*சவுல் மரணமடையும் நாள்மட்டும் சாமுவேல் அப்புறம் அவனைக் கண்டு பேசவில்லை.*
                      1 சாமு.15:35

இது எவ்வளவு ஆச்சரியமாய் இருக்கிறது.

சாமுவேல் சவுலின்மேல் அதிகம் பிரியம் வைத்திருந்தார்.

ஆனால், சவுல் தேவனுக்குப் பிரியமில்லாதவனானபோது, அவனை சந்திப்பதைத் தவிர்த்துவிட்டார்!

👨🏻‍⚖ நான் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் முகத்தைப் பாராதிருந்தால் *நான் உம்மை நோக்கவுமாட்டேன், உம்மைப் பார்க்கவுமாட்டேன்* என்று சேனைகளுடைய கர்த்தருக்கு முன்நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.
                  2 இராஜா.3:14

என்று இஸ்ரவேலின் ராஜாவை புறக்கணித்த எலிசா இன்றைய தீர்க்களுக்கு சவால்!

5⃣ எவ்வளவு பெரிய மனுஷனானலும் கர்த்தர் ஏவுவரானால், எத்தனை பெரிய தண்டணை பெறவேண்டியிருந்தாலும் அவனுடைய தவறுகளை கண்டிக்கத் தயங்கக்கூடாது.

👨🏻‍⚖ *"நீர் உம்முடைய சகோதரன் மனைவியை வைத்துக்கொள்வது நியாயமல்ல"*
என்று ஏரோதை கண்டித்தார் மனுஷரில் பெரிய தீர்க்கதரிசி யோவான் ஸ்நானன்.

*விளைவு?*

ஏரோது சேவகரை அனுப்பி, அவனை் பிடித்துக் கட்டிக் காவலில் வைத்தான்.
(மாற்கு 6:18)

பிறகு தலையையும் இழந்தார் யோவான் ஸ்நானன்!
(மாற்கு 6:25-28)

*உயிரையும் இழக்க ஆயத்தமாய் இருக்கிறவனே உண்மையான தீர்க்கதரிசி!*

6⃣ தன் தீர்க்கதரிசனத்தை மனுஷர் உதாசீனப்படுத்தினாலும் கவலைப்படக்கூடாது.

எருசலேமில் பவுலுக்கு நேரிடப்போகிற பிரச்சனையை தீர்க்கதரிசனமாக அகபு சொல்லுகிறார்.
(அப்.21:10-11)

அதனால், எருசலேமுக்குப் போகவேண்டாம் என்று ஜனங்கள்  பவுலைத் தடுக்கிறார்கள்.(21:12)

ஆனால், "எருசலேமில் இயேசுவுக்காய் சாகவும் ஆயத்தமாயிருக்கிறேன்" என்று சொல்லிவிட்டு பவுல் எருசலேமுக்குக் கௌம்பிவிட்டார்!(21:13)

அதற்காக அகபு வருத்தப்படவில்லை.

அகபுவை சொல்ல வைத்தவரும் கர்த்தரே! பவுலை உறுதியாய் புறப்பட வைத்தவரும் கர்த்தரே!

பாடுகளை எதிர்ப்பார்த்தே பவுல் எருசலேமுக்கு செல்லவேண்டும் என்று, முன்னமே அவரை கர்த்தர் அகபு மூலமாக  ஆயத்தப்படுத்தியிருக்கிறார்.

7⃣ இயேசுவின் அன்பை உடையலராக ஒரு தீர்க்கதரிசி இருக்கவேண்டும்.

*நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து,* சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், .. *.. அன்பு எனக்கிராவிட்டால்* நான் ஒன்றுமில்லை.
                  1 கொரிந்.13:2

என்கிறதை தீர்க்கதரிசி மறந்துவிடக்கூடாது.

ஒவ்வொரு விசுவாசிக்கும் இருக்கவேண்டிய: நீடிய சாந்தமுள்ள, தயவுள்ள,  பொறாமையில்லாத, தன்னைப் புகழாத, இறுமாப்பாயிராத,
அயோக்கியமானதைச் செய்யாத, தற்பொழிவை நாடாத, சினமடையாத, தீங்கு நினையாத,
அநியாயத்தில் சந்தோஷப்படாத, சத்தியத்தில் சந்தோஷப்படக்கூடிய,
சகலத்தையும் தாங்கக்கூடிய, சகலத்தையும் விசுவாசிக்கக்கூடிய,  சகலத்தையும் நம்பக்கூடிய,  சகலத்தையும் சகிக்கக்கூடிய,
ஒருக்காலும் ஒழியாத அன்பு, தீர்க்கதரிக்களுக்கும் இருப்பது அவசியம்!
(கொரி.13:4-8)
*தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம்.* அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம்.
                  1 கொரிந்.13:8

தீர்க்கதரிசனம் ஒழிந்து போவதற்காய் அல்ல. தான் அன்புள்ளவனாய் இராததற்காகவே ஒரு தீர்க்கதரிசி கவலைப்படவேண்டும்!

*ஒருவன் தீர்க்கதரிசியாய் இருப்பதைவிட அன்புள்ளவனாக இருப்பதையே தேவன் அதிகமாக விரும்புகிறார்!*

அன்பு இல்லாவிட்டால், தீர்க்கதரிசி ஒன்றுமில்லை!!

ஏன் நீங்கள் காலையில் ஜெபிக்க வேண்டும்*❓❓❓

⛳காலை ஜெபங்களினுடைய மிகுந்த முக்கியத்துவங்கள் என்ன?

🎈 காலையில் ஜெபிப்பது மிக முக்கியம் ஏனெனில் பிசாசை சந்திப்பதற்கு முன்னதாக,நீங்கள் தேவனை சந்திப்பவர்களாக இருப்பீர்கள்.

  🎈நீங்கள் ஜீவியத்தின் சூழ்நிலைகளைச் சந்திப்பதற்கு முன்னதாக, தேவனைச் சந்திப்பவர்களாக இருப்பீர்கள்.

🎈 நீங்கள் அநேக ஜனங்களோடு பேசுவதற்கு முன்னதாக, தேவனிடம் பேசுகிறவர்களாக இருப்பீர்கள்.

  🎈நீங்கள் மற்ற ஜனங்களுடன் ஐக்கியம் கொள்வதற்கு முன்னதாக, தேவனுடன் ஐக்கியம் கொள்பவர்களாக இருப்பீர்கள்.

  🎈நீங்கள் எந்தத் தலைப்புச் செய்திகளைக் கேட்பதற்கு முன்னதாக, பரலோகத்திலிருந்து வரும் செய்திகளைக் கேட்பவர்களாக இருப்பீர்கள்.

  🎈நீங்கள் ஜனங்களுக்கு முன்பாக அமருவதற்கு முன்னதாக,தேவன் முன் அமருகிறவர்களாக இருப்பீர்கள்.

  🎈நீங்கள் மனிதர்கள் முன் மண்டியிடுவதற்கு முன்னதாக,தேவன் முன் மண்டியிடுகிறவர்களாக இருப்பீர்கள்.

  🎈நீங்கள் ஜனங்களைக் கனப்படுத்துவதற்கு முன்னதாக, தேவனைக் கனப்படுத்துகிறவர்களாக இருப்பீர்கள்.

  🎈நீங்கள் ஜனங்கள் மத்தியில் செல்வதற்கு முன்னதாக,அவரது பிரசன்னத்திற்குள்ளாக செல்கிறவர்களாக இருப்பீர்கள்.

  🎈நீங்கள் உங்கள் சரீரத்திற்கு உணவளிப்பதற்கு முன்னதாக,உங்கள் ஆவிக்கு உணவளிப்பவர்களாக இருப்பீர்கள்.

  🎈நீங்கள் மற்ற சிறிய நாமங்களை அழைப்பதற்கு முன்னதாக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே என்று அழைப்பவர்களாக இருப்பீர்கள்.

  🎈நீங்கள் உங்களையே கண்ணாடியில் பார்ப்பதற்கு முன்னதாக, நம்மைப் படைத்தவரைப் பார்ப்பவர்களாக இருப்பீர்கள்.

🙏🙏🙏🙏🙏🙏

ஆண்டவர் உன்னோடு பேசட்டும் !

🌾 *வஸ்திரம்*
ஏசாயா : 64 : 1 - 12

🌾 *குடியன்*
1⃣ கொரி 5 : 1 - 13

*கடமை*
( இறைவனுக்கு )
உபா : 10 : 11 - 22

*கடமை*
( மனிதனுக்கு )
லேவி - 19 - 11- 18

*தெரிந்து கொள்ளுதல்*
யோவான் : 15 - 15 - 27

*வேலையாள்*
உபா - 15 : 15 - 27

*சத்துரு*
லூக் . 6 - 20 - 30

*நற்கருணை*
அப் . 2 - 41 - 47

*போக்குச் சொல்லுதல்*
அப். 24 - 22 - 27

*தகுதியாயிராதது*
ரோமர் . 14 : 11 - 23

*கழுகு*
சங் . 103 - 1 - 10

*வேலைக்கு*
*அமர்த்துபவர்*
லேவி. 25 - 38 - 46

*மாதிரி*
சங். 101 - 1 - 8

*கண்*
சங். 33 : 11 - 22

*கட்டுக்கதை*
1⃣ தீமோ . 1 - 1 - 12

*முகம்*
ஏசாயா . 3 - 1 - 10

*விசுவாசம்*
ஆபகூக் . 2 - 1 - 10

*விசுவாச சோதனை*
1⃣ பேதுரு 1 : 1 - 10

*உண்மை*
சங் .31 - 15 - 24

*கபடம்*
லேவி - 6 - 1 - 17

*குடும்பம்*
உபா . 4 : 1 - 20

*உபவாசம்*
  தானி. 9 : 1 - 10

*பயம்*
ஆதி. 35 : 1 - 10

*ஐக்கியம்*
யாத். 33 : 11 - 23

*சொப்பனம்*
தானி. 2 : 16 - 23

*அக்கினி*
சங்.104 : 1 - 10

*முகஸ்துதி*
கலா. 1 : 1 - 10

*மன்னிப்பு*
மத். 5 : 1 - 12

*சகோதரத்துவம்*
மத் 5 : 21 - 26

🕎🕎🕎🕎🕎🕎🕎🕎🕎🕎🕎🕎

ஒற்றுமை என்ன ❓

ஒற்றுமை என்ன விடைகள்_ 👇🏻

சிசெரா - ஆபிமெலேக்கு
*இருவரும் பெண்களால் கொல்லப்பட்டார்கள்*
  நியா , 4:21 , நியா 9:53

அன்னாள் - பேதுரு
*இருவரும் மனங் கசந்து அழுதார்கள்*
1⃣ சாமு .1 : 10 , மத்.26 : 75

பென்யமீன் - இக்க
போத்
*இரண்டு பேருடைய தாயார்களும் , இவர்கள் பிறந்ததும் இறந்து போனார்கள்*
அதி : 35 : 18 , 19
1⃣ சாமு , 4 : 20 , 21

யோவான் - இயேசு
*இருவருடைய பெயர்களும் அவர்கள் பிறக்கும் முன்னே அறிவிக்கப்பட்டது !*
லூக் : 1 : 13 , லூக் 1:31

நோவா - மோசே
*இருவருக்கும் காத்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது*
ஆதி : 6 : 8 , யாத் : 3:17

வஸ்தி - கந்தாகே
*இருவரும் இராஜஸ்திரீகள்
எஸ்தர் : 1 : 9 , அப் ; 8 : 27

கடுகுவிதை  - நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷம்
*இரண்டும் பரலோக ராஜ்யத்துக்கு ஒப்பாகக் கூறப்பட்டது*
மத் : 13 : 31 , மத் : 13 : 44

லேவி - பிலிப்பு
*இருவரையும் கண்டு இயேசு எனக்குப் பின் சென்று வா என்றார்*
லூக் : 5 : 27 ,
யோவன் : 1 : 43

எலிமெலேக்கு - மோசே
*இருவரும் மோவாப்*
*தேசத்தில்*
*மரித்தார்கள்*
ரூத் : 1 : 2 , 3  , உபா : 34 : 5

தாவீது - சிம்சோன்
*இருவரும் சிங்கத்தைக் கொன்றார்கள்*
1⃣ சாமு : 17 : 36
நியா : 14 : 6

மேன்மைப்படுத்துவேன்!

"நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருக்கிறேன் என்பதை இஸ்ரவேலரெல்லாரும் அறியும்படிக்கு, இன்று அவர்கள் கண்களுக்கு முன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன்"
(யோசு. 3:7).

எந்த மனுஷனையும் உயர்த்தவும், எந்த மனுஷரையும் மேன்மைப்படுத்தவும், கர்த்தரால் ஆகும். அவர் எளியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, உயர்த்தி, ராஜாக்களோடு அமரப்பண்ணுகிறவர். கீர்த்தியும், புகழும், மேன்மையும், அவரிடத்திலிருந்து வருகிறது.

அதே நேரத்தில், கர்த்தர் உங்களுக்கு ஒரு வாக்குத்தத்தத்தைக் கொடுத்து, நான் உங்களோடிருக்கிறேன் என்பதை, உலகத்தார் அறிந்துகொள்ளும்படி, அவர்கள் கண்களுக்கு முன்பாக உங்களை மேன்மைப்படுத்துவேன் என்று சொல்லுகிறார். அப்படித்தான் மோசேயை, யோசுவாவை, தாவீதை கர்த்தர் மேன்மைப்படுத்தினார். உங்களை மேன்மைப்படுத்துகிறது மட்டுமல்ல, என்றென்றும் மேன்மையாக வைப்பார். வேதம் சொல்லுகிறது, "கர்த்தர் யோசுவாவைச் சகல இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாகவும் மேன்மைப்படுத்தினார். அவர்கள் மோசேக்குப் பயந்திருந்ததுபோல, அவனுக்கும், அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் பயந்திருந்தார்கள்" (யோசு. 4:14).

ஒருமுறை யுத்தக்களத்தில் யோசுவா நின்றபோது, சூரியன் அஸ்தமிக்க ஆரம்பித்துவிட்டது. இருள் சூழ்ந்துவிட்டால், எமோரியர்கள் ஜெயித்துவிடுவார்கள். "யோசுவா இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாக, சூரியனே, நீ கிபியோன்மேலும், சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கின்மேலும், தரித்துநில்லுங்கள்" (யோசு. 10:12) என்று கட்டளையிட்டார். ஒரு மனுஷனுடைய வார்த்தையைக் கேட்டு, கோடான கோடி வருஷங்களாய் ஆகாயத்திலே சுழன்று வருகிற, அக்கினிப் பிளம்பான சூரியன், அப்படியே தரித்து நின்றதென்றால், அது ஆச்சரியத்திலும் ஆச்சரியம் அல்லவா? ஆம், கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்கள் எல்லோருக்கும் முன்பாக, யோசுவாவின் வார்த்தைகளை கனப்படுத்தினார்.

யோசுவாவை கனப்படுத்தினவர், உங்களையும் கனப்படுத்தி, மேன்மைப்படுத்துவார். கீர்த்தியும், புகழ்ச்சியுமாய் வைப்பார். இன்றைக்கு இருக்கிற பிரச்சனைகள், போராட்டங்கள் முற்றிலும் மாறிப்போகும். கர்த்தர் உங்களை மேன்மைப்படுத்த நினைக்கும்போது, எந்த மனுஷனாலும் அதைத் தடுக்கவே முடியாது. நிறுத்தவும் முடியாது. "ஐசுவரியமும், கனமும், உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே, சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும், பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்" (1 நாளா. 29:12).

அதே நேரம், நீங்கள் செய்ய வேண்டிய ஒரு கடமையுண்டு. எப்போதும் கர்த்தருடைய நாமத்தை உயர்த்தி, அவரை மேன்மைப்படுத்துங்கள். வேத வசனங்களைக் கனப்படுத்துங்கள். கர்த்தர் செய்த அற்புதங்களை விவரித்து, சாட்சியாக மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். அது உங்களை மேன்மைப்படுத்தும். நீங்கள் அதைத் தழுவிக்கொண்டால், அது உங்களை கனம் பண்ணும் (நீதி. 4:8).

வேதப் புத்தகத்திலிருந்து, கர்த்தர் யார் யாரை கனப்படுத்தினார். யார் யார் கர்த்தரால் மேன்மையடைந்தார்கள் என்பதையெல்லாம் விசுவாசித்து தியானித்துப்பாருங்கள். எசேக்கியா ராஜாவை கர்த்தர் கனப்படுத்தி, மேன்மைப்படுத்தினார். இன்றைக்கு கர்த்தர் உங்களை மேன்மைப்படுத்தி உயர்த்தி, மகிமைப்படுத்துவார்.

நினைவிற்கு :- "அநேகம்பேர் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்கு உச்சிதங்களையும், கொண்டு வந்தார்கள். அவன் இதற்குப்பிற்பாடு சகல ஜாதிகளின் பார்வைக்கும் மேன்மைப்பட்டவனாயிருந்தான்"
(2 நாளா. 32:23).

உங்கள் பொக்கிஷங்கள்!

"உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ, அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்" (மத். 6:21).

உலகத்தில் வாழ பணம் அவசியம். உலகப் பொருள்கள் அவசியம். பணம் சம்பாதிக்க, கஷ்டப்பட்டு உழைத்துத்தான் ஆகவேண்டும். அதில் சந்தேகமில்லை. ஏதேன் தோட்டத்திலும்கூட, கர்த்தர் ஆதாமுக்கு வேலையை வைத்திருந்தார். நிலத்தைப் பண்படுத்த வேண்டும். அதைக் காக்க வேண்டும். சோம்பேறிகளுக்கு ஆண்டவர் ஒன்றும் கொடுப்பதில்லை.

ஆனால், சிலர் "பணம் பணம்" என்று, பேயாக அலைகிறார்கள். "பணம் பாதாளம் வரைக்கும் பாயும். அதற்கு ஒரு எல்லையேயில்லை" என்கிறார்கள். சிலர் பணம் சம்பாதிக்க, என்ன என்ன குறுக்கு வழி உண்டோ, அவ்வளவற்றையும் கையாளுகிறார்கள். லஞ்சம் கொடுத்து, படிப்பிற்கு இடம் வாங்குகிறார்கள். பரிதானம் கொடுத்து, நியாயத்தைப் புரட்டுகிறார்கள். நீதிபதிகளை விலைக்கு வாங்கிவிட்டு, சட்டத்தைப் புரட்டிவிடுகிறார்கள். தேவனுக்கும், உலகப் பொருளுக்கும் ஊழியம் செய்ய உங்களால் கூடாது, என்று இயேசு சொன்னார். உலகப் பொருளுக்கு, ஆங்கிலத்தில் 'Mammon’ என்று போட்டிருக்கிறது. மூல பாஷையிலே, "செழுமைக்கான தெய்வம்" என்று அர்த்தம்.

இன்றைக்கு கிறிஸ்துவர்களும்கூட, கிறிஸ்துவைக் குறித்தோ, சிலுவையைக் குறித்தோ, நித்திய ஜீவனைக் குறித்தோ பேசுவதை விட்டு விட்டு, செழுமையின் ஊழியத்தில் இறங்கியிருக்கிறார்கள். அதே நேரம், கர்த்தருடைய வழிகளில் நீங்கள் செல்லுவீர்களென்றால், கர்த்தர் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்களை ஆசீர்வதிப்பார்.

இயேசு சொன்னார், "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்" (மத். 6:33). கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும்போது, அந்த செல்வம் ஆரோக்கியமுள்ளதாகவும், நன்மை பயக்குகிறதாகவும், ஆசீர்வாதமாகவுமிருக்கும். ஒருநாளும் அதிலே அவர் வேதனையைக் கூட்டார்.

ஆனால், தவறான குறுக்கு வழிகளில், பணம் சம்பாதிக்கிறவர்கள், நிம்மதியோடு இருப்பதில்லை. தீராத வியாதிகளும், கலக்கங்களும் அவர்களுக்கு வரும். இரவு பகலாய் கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும், அதை அனுபவிக்க சக்தியிருக்காது. சிலர் மற்றவர்களுக்குக் கொடுக்காத கஞ்சர்களாயிருப்பார்கள். பல தலைமுறைக்கு, பணத்தை சேர்த்து வைத்து பாதுகாத்துக்கொண்டிருப்பார்கள். "ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்" என்பது பழமொழி. ஆகவே கர்த்தருக்குக் கொடுங்கள். ஊழியங்களுக்குக் கொடுங்கள். தேவையுள்ள இனத்தார், ஜனத்தாருக்குக் கொடுங்கள்.

வேதம் சொல்லுகிறது, "நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதைச் செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே" (நீதி. 3:27). பணத்தைச் சம்பாதிக்க சரீரத்திலே பலமும், ஆரோக்கியமும், உள்ளத்திலே உற்சாகமும் தருகிறவர் கர்த்தர். ஆகவே, நீங்கள் சம்பளம் வாங்கியதும் நன்றியுள்ள இருதயத்தோடு ஆண்டவருக்கு அள்ளிக்கொடுக்கும்போது, அவர் மனமகிழுவார். இன்னும் அதிகமான செல்வத்தை உங்களுக்குத் தந்தருளுவார். "என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்" (பிலி. 4:19).

நினைவிற்கு :- "பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி; அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்" (1 தீமோத். 6:10).

ஐசுவரியமும், கனமும்!

"முத்துக்களைப்பார்க்கிலும் ஞானமே நல்லது; இச்சிக்கப்படத்தக்கவைகளெல்லாம் அதற்கு நிகரல்ல" (நீதி. 8:11).

அநேகர் என்ன எண்ணுகிறார்கள்? சாத்தான்தான், உலகப் பொருட்களுக்கு பின்னால் நின்று, அவனுக்கு இஷ்டமானவர்களுக்கு, அல்லது அவனைக் கும்பிடுகிறவர்களுக்கு, உலகப் பொருட்களையும், ஆசீர்வாதங்களையும் கொடுக்கிறான் என்று. புறமதஸ்தரில், பலரும் உலக செல்வத்துக்கென்று ஒரு கடவுளை வைத்திருக்கிறார்கள். தொழிலை ஆரம்பிக்கும்போது, அல்லது வீட்டைக் கட்டும்போது, அந்த தெய்வத்துக்கு ஒரு பலி செலுத்திவிட்டால், அந்த தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்று எண்ணுகிறார்கள். இந்திய கலாச்சாரத்திலே ஒரு குறிப்பிட்ட நாள் ஐசுவரியம் பெருகும்நாள் என்று சொல்லி, "அக்ஷயத்" நாளிலே பொன் நகைகளை வாங்கினால், செல்வம் குவியும் என்று எண்ணுகிறார்கள்.

பழைய கவிஞன் ஒருவன் பாடினான். "காசேதான் கடவுளடா. கடவுளுக்கும் அது தெரியுமடா." காசு கடவுளல்ல. வானத்தையும், பூமியையும் உண்டாக்கினவரே கர்த்தர். பூமி, அவருடைய நன்மையால் நிரம்பியிருக்கிறது. "வெள்ளியும், என்னுடையது. பொன்னும் என்னுடையது," என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் (ஆகாய் 2:8). கடலிலே, கோடிக்கணக்கான முத்துக்களை வைத்து வைத்திருக்கிறார். பூமிக்கு அடியில், வைரச் சுரங்கங்களையும், ஏராளமான விலை மதிக்க முடியாத கற்களையும் வைத்திருக்கிறார். அவரே ஐசுவரியசம்பன்னர். தம்முடைய பிள்ளைகளுக்கு, மகிழ்ச்சியோடு கொடுக்கிறார்.

ஆகவே, பொருளாதார ஆசீர்வாதத்தை நீங்கள் பெற வேண்டுமென்றால், கர்த்தரிடத்தில் கேளுங்கள். அவர் தம்முடைய பிள்ளைகளுக்கு கொடுப்பதில் மனமகிழ்ச்சியாயிருக்கிறார். சொல்லப்போனால், உங்களுக்கு இன்ன தேவை என்பதை பரம பிதா அறிந்திருக்கிறார். ஒவ்வொன்றையும் ஏற்ற வேளையிலே, அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.

பொருளாதாரத்தில், நீங்கள் முன்னேறுவதற்கு என்ன வழி என்பதைப் பற்றி, அவர் சொன்ன 36 உவமைகளுள், பதினாறு உவமைகளில் நீங்கள் அறிந்து கொள்ளலாம். மலைப்பிரசங்கத்தில் பணத்தைக் குறித்தும், செல்வத்தைக் குறித்தும் பதினாறு வசனங்களில் அவர் பேசுகிறார். நான் ஒரு போதகருடைய வீட்டுக்குப் போயிருந்தேன். அவர், வீட்டின் முன் அறையில் ஒரு வாக்கியத்தை மாட்டியிருந்தார். "சாத்தானே, என்னிடமிருந்து திருடிய பொருட்களையெல்லாம், மரியாதையாக எனக்கு கொடுத்து விடு" என்று போட்டிருந்தது. நான் சிரித்துக்கொண்டு அவரிடம், "எவ்வளவு நாள் சாத்தானை நோக்கி, ஜெபிக்க ஆரம்பித்திருக்கிறீர்கள்?" என்று கேட்டேன்.

"சாத்தான், உங்களுடையதைத் திருட, அவனுக்கு ஏன் இடங்கொடுத்தீர்கள்? அதை, மீண்டும் பெற்றுக்கொள்ள, நீங்கள் அவனிடம் கெஞ்சி, "மயிலே மயிலே இறகு போடு" என்று சொன்னால், அது போடாது" என்றேன். தேவ பிள்ளைகளே, சாத்தானிடம் கையேந்துவதைப் பார்க்கிலும், அருமையான, அன்புள்ள பிதாவிடத்திலே கேளுங்கள். "நீங்கள் எல்லாவற்றிலும், எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச் செய்ய வல்ல வராயிருக்கிறார்" (2 கொரி. 9:8).

நினைவிற்கு :- "ஐசுவரியமும், கனமும், நிலையான பொருளும், நீதியும் என்னிடத்தில் உண்டு. என்னைச் சிநேகிக்கிறவர்கள் மெய்ப்பொருளைச் சுதந்தரிக்கும்படிக்கும், அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும்படிக்கும், அவர்களை நீதியின் வழியிலும், நியாயப் பாதைகளுக்குள்ளும் நடத்துகிறேன்" (நீதி. 8:18-21). 

என்னுடையவைகள்!

"சகல காட்டுஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள்" (சங். 50:10).

கர்த்தர் சொன்னார், "மலைகளிலுள்ள பறவைகளையெல்லாம் அறிவேன்; வெளியில் நடமாடுகிறவைகளெல்லாம் என்னுடையவைகள். நான் பசியாயிருந்தால், உனக்குச் சொல்லேன்; பூமியும், அதின் நிறைவும் என்னுடையவைகளே"
(சங். 50:11,12).

சகலவற்றையும் கர்த்தர் சிருஷ்டித்தபடியால், எல்லாம் அவருடையது. நாம் அவருடைய பிள்ளைகள். மட்டுமல்ல, சுதந்தரவாளிகளாகவுமிருக்கிறோம். தகப்பன் மனமிரங்கி, தன் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுப்பதுபோல, கர்த்தர் நமக்கு இரங்கி, சகலவற்றையும் தந்தருளுவார். நீங்கள் அவருடைய பிள்ளைகளானால், உரிமையோடு கர்த்தரிடத்திலே கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம். அவர் உங்களை ஆசீர்வதித்து, சகலவற்றின்மேலும் அதிகாரத்தைத் தந்தருளுவார்.

தேவபிள்ளைகளைக் குறித்து தாவீது சொல்லும்போது, "உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர். ஆடுமாடுகளெல்லாவற்றையும், காட்டுமிருகங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மச்சங்களையும், கடல்களில் சஞ்சரிக்கிறவைகளையும், அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர் என்றார்" (சங். 8:6-8).

கர்த்தர், தம்முடைய பிள்ளைகளுக்கு வேண்டிய பொருளாதாரம், செல்வம், செல்வாக்கு சகலவற்றையும் தந்தருளுகிறார். வேலை செய்ய திறன், வேலை செய்ய ஞானம், வேலை செய்யக்கூடிய உற்சாக மனது, உழைப்பதற்கான கிருபைகளைத் தருகிறவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.

ஒருவர், நாம் உழைக்காமலே, கர்த்தர் எல்லாவற்றையும் தந்துவிடுகிறார் என்பதற்கு, இயேசு கிறிஸ்து சொன்ன ஒரு வார்த்தையைப் பிடித்துக்கொண்டார். "ஆகாயத்துப் பறவைகளைப் பாருங்கள்! அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை. ஆனாலும் அவைகளையும் உங்கள் பரம பிதா பிழைப்பூட்டுகிறார்" என்று சொன்னார்.

உண்மைதான். ஆனால் அந்தப் பறவைகளைப் பாருங்கள்! அவை, கூட்டிலே உட்கார்ந்துகொண்டிருப்பதில்லை. காலையில் எழுந்ததும், சுறுசுறுப்பாய் இரையைத் தேடிப் போகிறது. இடைவிடாமல் வருகிறதும், தன் குஞ்சுகளை போஷிக்கிறதும், அவைகளை கவனித்துக்கொள்ளுகிறவைகளுமாயிருக்கின்றன.

தேவபிள்ளைகளே, உங்களால் முடிந்தவரை நன்றாக உழைத்து, குடும்பத்தைப் போஷித்து, பராமரிக்க வேண்டியது உங்கள் கடமை. "திரை கடலோடியும் திரவியம் தேடு" என்றார்கள், நம்முடைய முன்னோர்கள். வேதம் வாக்களித்து, "உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்" (சங். 128:2) என்று சொல்லுகிறது.

இங்கே பாருங்கள்! கையின் பிரயாசத்தைக் குறித்து, ஆண்டவர் சொல்லுகிறார். பிரயாசிக்க வேண்டியது உங்களுடைய கடமை. யாக்கோபு, தன் மனைவிகளுக்காகவும், பிள்ளைகளுக்காகவும் எவ்வளவு பிரயாசித்து உழைத்தார் என்பதை ஆதி. 31:42-ல் வாசிக்கலாம். ஜெபித்து, உழைத்து, ஆசீர்வாதத்தையும், செல்வத்தையும் பெற்றுக்கொள்ளுங்கள்.

நினைவிற்கு :- "மனுஷர் யாவரும் புசித்துக் குடித்துத் தங்கள் சகலப் பிரயாசத்தின் பலனையும் அநுபவிப்பது, தேவனுடைய அநுக்கிரகம்" (பிர. 3:13). 

உக்கிராணக்காரன்!

"மேலும், உக்கிராணக்காரன், உண்மையுள்ளவனென்று காணப்படுவது அவனுக்கு அவசியமாம்"
(1 கொரி்ந். 4:2).

"உக்கிராணக்காரன்" என்பதற்கு, தமிழிலே "கணக்குப் பிள்ளை, மேனேஜர், கண்காணிப்பாளர்" என்றெல்லாம் பல அர்த்தங்களுண்டு. ஊழியத்திற்கு உக்கிராணக்காரருண்டு. ஆவியின் வரங்களுக்கு உக்கிராணக்காரருண்டு. அதே நேரத்தில், பொருளாதாரத்துக்கும் உக்கிராணக்காரருண்டு. உக்கிராணக்காரன், எல்லாவற்றிலும் எஜமானுக்கு கணக்கொப்புவிக்க வேண்டும். அவன் உண்மையுள்ளவனாயிருக்க வேண்டும்.

கர்த்தர், இந்த உலகத்தை சிருஷ்டித்திருக்கிறார். இந்த உலகமும், அதிலுள்ளவைகளும், உங்களுடையவைகளல்ல. கொஞ்சக் காலம் உலகத்தில் வாழும்போது, அவைகளை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். உலகத்தில் வாழும்போது, கர்த்தர் உங்களுக்கு வீட்டைத் தருகிறார். மனைவி, பிள்ளைகளைத் தருகிறார். அவர்களும் நீங்கள் கர்த்தரிடத்திலிருந்து பெற்றவைகளாகும். நீங்கள் சம்பாதிக்கிற பணம், அல்லது செல்வம் உங்களுடையவை போலத் தோன்றினாலும், உண்மையில் இது கர்த்தர் உங்களுக்குத் தந்து, உங்களை உக்கிராணக்காரராய் நியமித்திருக்கிறார். உங்கள் கையில் வருகிற பணத்தைக் குறித்து, நீங்கள் உக்கிராணக்காரனாய் கர்த்தருக்கு கணக்கொப்புவிக்க வேண்டும்.

இந்த நாட்களில், இரண்டுவிதமான பணமிருக்கிறது. கணக்கில் வராத பணத்தை "கறுப்புப் பணம்" என்று சொல்லுவார்கள். அவர்கள், அதை அரசாங்கத்துக்கு தெரியப்படுத்துவதில்லை. அதற்கு வரி கட்டுவதுமில்லை. கணக்கில் வருகிற உண்மையாய் சம்பாதித்த பணம், "வெள்ளைப் பணம்" என்று அழைக்கப்படுகிறது. இன்றைக்கு வெள்ளைப் பணத்தைப் பார்க்கிலும், "கறுப்புப் பணமே" மிக மிக அதிகம்.

அரசாங்க அதிகாரிகள், மந்திரிகள், கறுப்புப் பணத்தை கோடிக்கணக்காய் சேகரித்து வைக்கிறார்கள். பிடிபடும்போது தலைக்குனிவும், அவமானமும் அடைவார்கள். வெளிப்பார்வைக்கு பெரிய வீடு. வசதியான கார், ஆடம்பரமான வாழ்க்கையிருந்தாலும், உலகத்தை விட்டு அவர்கள் போகும்போது, ஒன்றும்கூடச் செல்வதில்லை. அவர்களுக்கு சமாதானமும், சந்தோஷமும் கிடைப்பதில்லை.

ஒரு ஊழியர் சொன்னார், "எனக்கு ஒருவர் இரண்டு கம்மல்களை காணிக்கையாகக் கொடுத்தார். விற்றுவிடலாம் என்று, மார்வாடி கடைக்குப் போனேன். அதை உரசிப் பார்த்துவிட்டு, இது உண்மையான தங்கமல்ல. கோல்டு கவரிங் என்று சொல்லி திரும்பத் தந்துவிட்டார்." உங்களுக்கு வருகிற பணம், காணிக்கையை கர்த்தர் உரசிப் பார்க்கிறார். தேவனிடத்திலிருந்து வராத எல்லாமே தீமையானது. குறுக்கு வழியில் வருவதோ, லஞ்சம் வாங்குவதோ கர்த்தருக்குப் பிரியமில்லை.

கர்த்தர், ஒருநாளும் கறுப்புப் பணத்தை கொடுப்பதில்லை. நேர்வழியாகத்தான் கொடுப்பார். முதலாவது, உங்களுக்கு அத்தியாவசியத் தேவைகளுண்டு. இரண்டாவது, நீங்கள் ஆசைப்பட்டு வாங்குகிறவைகளுண்டு. மூன்றாவது, உங்களுக்கு வேண்டு மென்ற எல்லாவற்றையும் தருவதற்கு ஆண்டவர் கிருபையுள்ளவராயிருக்கிறார். உங்களுடைய வருமானம் சிறியதாயிருந்தாலும், அதை பெருகச் செய்வார். கர்த்தரிடம் வந்த சிறுவன், அவருக்கு ஐந்து அப்பத்தையும், இரண்டு மீனையும் கொடுத்தான். கர்த்தர் அதை ஆசீர்வதித்து, ஐயாயிரம் பேருக்குப் பகிர்ந்து கொடுத்தார்.

நினைவிற்கு :- "எந்த மனுஷனும் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியக்காரரென்றும், தேவனுடைய இரகசியங்களின் உக்கிராணக்காரரென்றும் எண்ணிக்கொள்ளக்கடவன்"
(1 கொரிந். 4:1).

கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.

 I will raise him up at the last day.

2 கொரிந்தியர்  4

14: கர்த்தராகிய இயேசுவை எழுப்பினவர் எங்களையும் இயேசுவைக்கொண்டு எழுப்பி, உங்களுடனேகூடத் தமக்குமுன்பாக நிறுத்துவாரென்று அறிந்திருக்கிறோம்.
Knowing that he which raised up the Lord Jesus shall raise up us also by Jesus, and shall present us with you.

யோவான்  6

37: பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை.

All that the Father giveth me shall come to me; and him that cometh to me I will in no wise cast out.

39: அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசி நாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது.

And this is the Father's will which hath sent me, that of all which he hath given me I should lose nothing, but should raise it up again at the last day.

40: குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்.

And this is the will of him that sent me, that every one which seeth the Son, and believeth on him, may have everlasting life: and I will raise him up at the last day.

44: என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.

No man can come to me, except the Father which hath sent me draw him: and I will raise him up at the last day.

54: என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.

Whoso eateth my flesh, and drinketh my blood, hath eternal life; and I will raise him up at the last day. 

Wednesday, 28 November 2018

வேதப் பகுதி!

"கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள்" (சங். 119:1).

நீங்கள் ஊக்கமாய் ஜெபிக்க ஆரம்பிப்பதற்கு முன்பாக, முதலாவது, வேதத்தின் ஒரு பகுதியை வாசித்து தியானியுங்கள். வேத வசனங்கள் ஆவியாயும், ஜீவனாயுமிருக்கின்றன. அவைகளைத் தியானிக்கும்போது, உங்கள் உள்ளத்தில் பரலோக அக்கினியைக் கொண்டு வருகிறது. உங்களுடைய உள்ளத்திலே தேவ அன்பு, நேச அக்கினியாய்ப் பற்றியெரிய ஆரம்பிக்கும். பின்பு ஜெபிக்க ஆரம்பியுங்கள்.

பிரசித்திப் பெற்ற ஜார்ஜ் முல்லரோ, தேவனோடு ஆழமான உறவுகொண்டு, ஊக்கமாக ஜெபித்து, பதிலைப் பெற்றுக்கொண்டதின் இரகசியம், தனது "வேத தியானத்தின்" மூலமே அமைந்தது என்கிறார். "அன்றன்றுள்ள அப்பம்," "கன்மலை நீரோடைகள்," "தினம் தினம் தேவ வல்லமை," "ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவுடனேகூட," என்ற தியானப் புத்தகங்களையும் வாங்கி வாசியுங்கள். இவைகள், விமான இயந்திரத்தை உயர, உயரக் கிளம்பப் பண்ணுவதைப் போன்றதாகும். அதன் பின்பு, நீங்கள் கிறிஸ்துவோடு உன்னதங்களிலே உலாவுவதற்கும், கழுகைப்போல எழும்பிப் பறப்பதற்கும், உதவியாயிருக்கும்.

வேதத்தை திறக்கும்போதே, மிகவும் எதிர்பார்ப்போடு திறவுங்கள். "ஆண்டவரே, உம்முடைய வேதத்தின் இரகசியங்களை அறிந்துகொள்ளும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும். வேத வசனங்களின் மூலமாய் என்னோடு பேசும்" என்று ஜெபியுங்கள். வேத வசனங்கள், உங்களை கர்த்தரோடு நெருங்கிக் கிட்டிச் சேர்க்கும். வேத வாக்கியம் உங்களுக்கு மனமகிழ்ச்சியாக, கர்த்தருடைய குரலை நீங்கள் கேட்கிறதாக இருக்கட்டும். அதிலே வாக்குத்தத்தமிருந்தால், உறுதியாய்ப் பெற்று கர்த்தரிடத்திலே உரிமை பாராட்டிக் கேளுங்கள். எச்சரிப்பின் சத்தமாயிருந்தால், அதற்கு செவிசாயுங்கள். அது கட்டளையாக இருந்தால், கீழ்ப்படியுங்கள்.

வேதமானது, ஒரு "பூங்கா" போன்றதாகும். அதன் வழியாக வேகமாக கடந்து சென்றுவிடாதிருங்கள். அந்தப் பூங்காவில் கர்த்தரோடும், ஆவியானவரோடும் அமர்ந்து, சுற்றி என்ன இருக்கின்றன என்பதையும், சில குறும்பு அணில்கள், ஆங்காங்கே மென்மையாய் ஓடுவதையும் கவனியுங்கள். பறவைகள், ஆனந்தமாய்ப் பாடுவதையும், இனிமையாய் செட்டைகளை அடித்துப் பறப்பதையும் ரசியுங்கள். வேதத்தை வாசித்து தியானித்துவிட்டு, அதற்குப் பிறகு, ஜெபிக்க ஆரம்பிப்பீர்களென்றால், அது தேவ ஐக்கியத்திற்குள்ளே உங்களை இனிமையாய் வழி நடத்தும்.

அநேகருடைய உள்ளம், லௌகீகக் கவலைகளினாலும், பிரச்சனைகளினாலும் நிரம்பியிருப்பதினால், நீண்ட நேரம் அவர்களால் ஜெபிக்க முடிவதில்லை. பல பரிசுத்தவான்கள், கர்த்தருடைய சமுகத்துக்குச் செல்லுவதற்கு முன்பாக, சில எளிதான உடற்பயிற்சிகளைச் செய்து, சரீரத்தையும்கூட தேவ சமுகத்துக்கு ஆயத்தப்படுத்துகிறார்கள். கர்த்தருடைய சமுகத்துக்குச் செல்லும்போதெல்லாம் நீங்கள் கர்த்தரோடு பேசவும், கர்த்தர் பேசுகிறதைக் கவனிக்கவும், உள்ளம் திறந்திருக்கட்டும்.

மான்கள் நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, உங்கள் மனமானது கல்வாரி நாதரை வாஞ்சித்துக் கதறட்டும். தகப்பனுடைய மார்பில் குழந்தை முகம் புதைத்துக்கொண்டு, மனம் விட்டுப் பேசுவதைப்போல, அவரிடம் பேசுங்கள். அதற்காக மனதை ஆயத்தப்படுத்தி, பக்குவப்படுத்துங்கள். ஜெப நேரத்தில், மனம் மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது. தேவ சமுகத்தை தாகத்தோடு தேடுங்கள்.

நினைவிற்கு :- "நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்னமையும், பிரியமும் பரிபூரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்" (ரோமர் 12:2).

தாலந்துகள்!

"அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து தாலந்தும், ஒருவனிடத்தில் இரண்டு தாலந்தும், ஒருவனிடத்தில் ஒரு தாலந்துமாகக் கொடுத்து உடனே பிரயாணப்பட்டுப் போனான்" (மத். 25:15).

இயேசு சொன்ன தாலந்துகளின் உவமையை, மத். 25-ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். "தாலந்து" என்பது, பலவகையான "திறமையைக்" குறிக்கிறது. அதே நேரத்தில், "தாலந்து" என்பது, "திரளான பணத்தைக்" குறிக்கிறது. "ஐந்து தாலந்து" என்றால், நமது பணத்தில் ஏறக்குறைய "ஒரு கோடி ரூபாய்" என்று அர்த்தமாகும். பணத்தை நாம் எவ்வாறு செலவழிக்கிறோம்? பணத்தைக்கொண்டு எப்படி ஆத்தும ஆதாயம் செய்கிறோம்? என்பதை, கர்த்தர் கண்நோக்கிப் பார்க்கிறார். முடிவில், அதைக் குறித்து கணக்குக் கேட்பார்.

கெட்டக் குமாரன், தனக்குக் கிடைத்த தகப்பனுடைய சொத்தைக் கொண்டு, இன்னும் அதிகமான சொத்தை சம்பாதிக்கவில்லை. தொழிலிலே, வியாபாரத்திலே முதலீடு செய்யவில்லை. வேசிகளிடத்தில் அழித்துப்போட்டான். முடிவில் பன்றிகளுக்குக் கிடைக்கக்கூடிய தவிடுகூட அவனுக்குக் கிடைக்காமல், படாத பாடு பட்டான். கர்த்தர் உங்களுக்குக் கொடுத்திருக்கிற தாலந்துகளானாலும், திறமையானாலும், பணமானாலும் அதைக் கொண்டு ஆத்தும ஆதாயம் செய்ய வேண்டும். எழுப்புதலை ஏற்படுத்த வேண்டும்.

ஐந்து தாலந்துகளைப் பெற்றவன், அதைக் கொண்டு இன்னும் ஐந்து தாலந்துகளை சம்பாதித்தான். எஜமானின் உள்ளம் மனமகிழ்ந்தது. முதலாவது, அவனைப் பாராட்டினார். "நல்லது உண்மையும் உத்தமமுமான ஊழியக்காரனே" என்று சொன்னார். இரண்டாவது, "கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாயிருந்தாய். அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாய் வைப்பேன்," என்று வாக்களித்தார். மூன்றாவது, "உன் எஜமானுடைய சந்தோஷத்துக்குள் பிரவேசி" என்றார். நான்காவது, ஒன்றும் சம்பாதிக்காமல், புதைத்து வைத்தவனுடைய, ஒரு தாலந்தை எடுத்து, ஐந்து தாலந்துகளை சம்பாதித்தவனுக்குக் கொடுத்தார்.

எப்படி மண்ணுக்குள் பொக்கிஷங்கள் மறைந்திருக்கிறதோ, நிலத்துக்குள் விலையேறப்பெற்ற மாணிக்கக் கற்கள் புதைந்திருக்கிறதோ, அதுபோல உங்களுக்குள்ளும் தாலந்துகள், திறமைகள் புதைந்து கிடக்கின்றன. அதை வெளிக்கொண்டு வருவது மட்டுமல்ல, அதை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

சில தாலந்துகள், பெற்றோர் மூலமாய் உங்களுக்கு வருகின்றன. வேறு சில படிப்பினாலும், அறிவினாலும், கடின உழைப்பினாலும் உங்களுக்கு வருகின்றன. இன்னும் சில தாலந்துகள், கர்த்தர் உங்களுக்குக் கொடுப்பதாகும். சில தாலந்துகளை ஜெபத்தினால் பெற்றுக்கொள்வீர்கள். சில தாலந்துகளை, பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குத் தந்தருளுகிறார்.

ஆகவே, கவனத்தோடு, அவைகளை கர்த்தருடைய ஊழியத்திலே பயன்படுத்துங்கள். கர்த்தர் தருகிற பொருளாதாரத்தின் மூலமாக, நரகத்துக்குச் செல்ல வேண்டியவர்களை திருப்பி, பரலோகப் பாதையில் வழிநடத்துங்கள். நித்தியத்துக்காக உழைத்து, பொருளாதாரத்தை நித்தியத்துக்காக செலவிட்டு, பரலோகத்தை நிரப்புங்கள். அதைக் கண்டு, பரலோகம் மகிழ்ச்சியடைய வேண்டும். கிறிஸ்து உங்களை தட்டிக் கொடுத்து, மேன்மைப்படுத்தட்டும். "நல்லது உண்மையும் உத்தமமுமான ஊழியக்காரனே," என்று பரலோகம் உங்களை அழைக்கும்போது, அது எத்தனை சந்தோஷமாயிருக்கும்!

நினைவிற்கு :- "நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப் பொருளால், உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்" (லூக். 16:9). 

சேர்த்து வையுங்கள்!

"கோடைக்காலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும்" (நீதி. 6:8).

எறும்பு ஞானமுள்ளதாயிருந்து, வருங்காலத்துக்காக சேமிக்கிறது. சிறிய ஜந்துதான். ஆனால், நம்முடைய கண்களுக்கு அது ஆச்சரியமாயிருக்கிறது. அதற்கு சாப்பிட வேண்டும். எறும்புக் கூட்டத்தில் வாழுகிற, அத்தனை குட்டி எறும்புகளுக்கும் சாப்பாடு கொடுக்க வேண்டும். அவற்றைப் பாதுகாக்க வேண்டும். எவ்வளவு கடமைகளிருந்தாலும், அவை வருங்காலத்துக்காக சேமிக்கின்றன.

எறும்பை, "மகா ஞானமுள்ளது" என்று சாலொமோன் ஞானி சொல்லுகிறார். "அற்பமான ஜெந்துவாயிருந்தும், கோடைக்காலத்திலே தங்கள் ஆகாரத்தைச் சம்பாதிக்கிற எறும்பும்" (நீதி. 30:25). கோடைக்காலம் வருகிறது. அதற்குப் பிறகு மழைக்காலம், குளிர்காலம் வருகிறது. அடைமழை பெய்துகொண்டிருக்கும்போது, எறும்புகளால் உணவு தேட முடிவதில்லை. சம்பாதித்து வைக்கவும் முடியாது. எறும்புகளானாலும் சரி, தேனீக்களானாலும் சரி, அவைகளுக்கு சம்பாதித்து, சேர்த்து வைக்கிற நல்ல வழக்கம் இருக்கிறது. இயேசு சொன்னார்: "பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது" (யோவா. 9:4).

கிருபையின் காலத்தில், அபிஷேக எண்ணெயை சேமித்து வைக்காமலிருந்தால், மணவாளன் வரும்போது, தீவட்டி மங்கி அல்லவா எரியும்? மணவாளனைச் சந்திக்க முடியாமற்போய்விடுமே. கர்த்தர் நோவாவிடம் பேழையைச் செய்து, அதிலே சகலவித மிருகங்களையும், பறவைகளையும் சேர்த்து வைக்கும்படி சொன்னார். "உனக்கும் அவைகளுக்கும், ஆகாரமாகச் சகலவித போஜன பதார்த்தங்களையும் சேர்த்து, உன்னிடத்தில் வைத்துக்கொள்" என்றார் (ஆதி. 6:21).

தேவபிள்ளைகளே, காலங்கள் மாறி மாறி வருகிறது. தேவையுள்ள நேரத்தில் அவைகளை பயன்படுத்தும்படி, சேர்த்து வைக்கிற பழக்கத்தைக் கையாளுங்கள். திடீரென்று விபத்துக்கள் வருகின்றன. வியாதிகள் வருகின்றன. வைத்தியச் செலவு ஏற்படுகிறது. சேமித்து வைத்திருந்தால், தாராளமாக அவைகளை எதிர்கொள்ளலாம். பிள்ளைகள், வாலிப வயதிலே கல்லூரிக்குச் சென்று படிக்கிறார்கள். பெண் பிள்ளைகளுக்கு, ஏற்ற நேரத்தில் திருமணம் ஒழுங்கு செய்யப்படுகிறது. அதற்கெல்லாம் பெரிய தொகை தேவைப்படும். அப்படிப்பட்ட நேரங்களில், உறவினர்களின் கைகளை எதிர்பார்த்திராமல், கடன் வாங்காமல், அவைகளைச் சந்திக்க திட்டமிட்டு சேர்த்து, சேமிக்க வேண்டியது, மிகவும் அவசியம்.

ஒருமுறை என் தகப்பனாரிடம் ஒருவர் வந்து, "ஐயா, என் மனைவிக்குப் பிரசவ வலி வந்து விட்டது. கையிலே பணமில்லை. கடனாக உதவி செய்யுங்கள்" என்று கேட்டார். என் தகப்பனாருக்குத் தெரியும் அவன் வீண் செலவு செய்கிற ஊதாரி என்று. அவனைப் பார்த்துச் சொன்னார், "உன் மனைவி பேறுகாலமாயிருக்கிறாள் என்று, பத்து மாதமாக உனக்குத் தெரியவில்லையா? ஏன் சேர்த்து வைக்கவில்லை" என்று கடிந்து கொண்டாலும், மனமிரங்கி அவருக்கு உதவி செய்தார்.

உங்களுடைய தேவைகளைச் சுருக்கிக் கொண்டு, எதிர்காலத்துக்காக சேர்த்து வையுங்கள். கர்த்தருடைய வருகையிலே, அவரைச் சந்திப்பதற்காக, அபிஷேகத்தைச் சேர்த்து வையுங்கள். பரலோகத்தில், உங்களுடைய கணக்கில் பொக்கிஷங்களைச் சேகரித்து வைப்பதற்காக, ஊழியங்களுக்குக் கொடுங்கள்.

நினைவிற்கு :- "அவ்வேழு வருஷங்களில் எகிப்து தேசத்தில் விளைந்த தானியங்களையெல்லாம் அவன் (யோசேப்பு) சேர்த்து, அந்தத் தானியங்களைப் பட்டணங்களில் கட்டி வைத்தான்" (ஆதி. 41:48).

கடனின்றி வாழுங்கள்!

"ஐசுவரியவான் தரித்திரனை ஆளுகிறான்; கடன்வாங்கினவன், கடன்கொடுத்தவனுக்கு அடிமை" (நீதி. 22:7).

நீங்கள் ஒருநாளும், கடனுக்கு அடிமைப்படவே கூடாது. அநேக ஜனங்கள் தங்களை அறியாமலேயே, கடனுக்குள் போய் விடுகிறார்கள். "தவணை முறையில் வாங்குகிறேன். இன்ஸ்டால்மென்டில் கிடைக்கிறது," என்று அதில் சிக்கிவிடுகிறார்கள். சிலர், "வீடு கட்ட பேங்கில் கடன் வாங்குகிறேன். கொஞ்சம் கொஞ்சமாய் நீண்ட வருடங்கள் கொடுத்துவிட்டால், வீடு சொந்தமாகிவிடும். வாடகை கொடுக்க வேண்டியதில்லை" என்று சொல்லுகிறார்கள். இன்றைக்கு, கடன் கொடுக்க, "கிரெடிட் கார்டு" வந்துவிட்டது.

ஆடம்பர வாழ்க்கை வாழுவதற்கு, அநேகர் கடன் வாங்கிவிடுகிறார்கள். என் அந்தஸ்தை காத்துக்கொள்வதற்கு கடன் வாங்கித்தான் ஆகவேண்டியிருக்கிறது, என்று சமாதானம் சொல்லுகிறார்கள். ஆனால் கடன் வாங்கும்போது, "எவ்வளவு வட்டியைக் கட்டுகிறோம். அதற்காக எவ்வளவு உழைக்க வேண்டியதிருக்கிறது. அடிமைப்பட்டுப் போகிறோமே" என்று யாரும் எண்ணுவதேயில்லை. ஏன் மனிதன் கடனுக்குள் போகிறான்? "பணத்தை எப்படி செலவழிக்க வேண்டுமென்று, அவன் திட்டமிட்டு தீர்மானிக்கவே முடிவதில்லை. எது அவசியம்? எது அனாவசியம்? எது ஆடம்பரம்? என்று அவனால் வேரறுக்க முடியவில்லை."

ஆபிரகாமுக்கு கர்த்தர் ஈசாக்கை வாக்குப்பண்ணியிருந்தாலும், ஆபிரகாம் பொறுமையில்லாமல் ஆகாரை சேர்த்துக்கொண்டு, இஸ்மவேலை பெற்றெடுத்தார். நாம் ஏன் கடன் வாங்குகிறோம்? கர்த்தருடைய வாக்குத்தத்தத்தில் விசுவாசம் இல்லாததினால், "இஸ்மவேல்" என்ற துன்பத்தைப் பெற்றெடுக்கிறோம். கலாத்தியர் 4-ம் அதிகாரத்திலே, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஈசாக்கை, இஸ்மவேல் துன்பப்படுத்தினான். கர்த்தருடைய வாக்குத்தத்தங்களுக்குக் காத்திருந்தால், ஈசாக்காகிய நகைப்பு வரும். அதோடு சந்தோஷம் வரும்.

கர்த்தருடைய வாக்குத்தத்தம் என்ன? "கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷ சாலையாகிய வானத்தைத் திறப்பார்; நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய். நீயோ, கடன் வாங்காதிருப்பாய்" (உபா. 28:12). ஆகவே தேவபிள்ளைகளே, கர்த்தரை விசுவாசியுங்கள். கர்த்தர் கடன் வாங்காதிருக்கிற, நல்ல செழிப்பை உங்களுக்குத் தந்தருளுவார்.

"கடன் வாங்கித்தான் தீருவேன்," என்று மார்வாடிகளையும், கடன் கொடுக்கிறவர்களையும், பேங்குகளையும் நோக்கியிருந்தால், கர்த்தர் உங்களைக் கைவிட்டு விடுவார். உங்கள் கடன் சுமை, ஏறுமே தவிர குறையாது. எல்லாச் சூழ்நிலைகளிலும், கர்த்தருக்கு சேர வேண்டிய தசம பாகத்தை கொடுத்துவிட்டு, கர்த்தர் வானத்தின் பலகணிகளைத் திறப்பதை, ஆவலோடு எதிர்பாருங்கள். கர்த்தர் ஒருபோதும் பொய்யுரைக்கவேமாட்டார். வாக்குமாறாதவர், அற்புதவிதமாய் உங்களுடைய தேவைகள் அனைத்தையும் சந்திப்பார்.

ஆபிரகாமோ, ஈசாக்கோ, யாக்கோபோ ஒருநாளும் கடன் வாங்கினது இல்லை. அவர்களுடைய ஐசுவரியத்தை பூமி தாங்கக் கூடாததாயிருந்தது. அப்படி அவர்களை மேன்மையாய் நடத்தின ஆண்டவர், உங்களை நடத்தமாட்டாரா? ஆகாயத்துப் பறவைகள் கடன் வாங்குகின்றனவா? இல்லையே! கர்த்தர் அவைகளை அருமையாய்ப் போஷிக்கிறாரே. காட்டுப் புஷ்பங்களை மேன்மையாய் உடுத்துவிக்கிறாரே. அப்படியே உங்களையும் உடுத்துவிப்பார். கர்த்தரை கனம் பண்ணி, அவரையே சார்ந்துகொள்ளுங்கள்.

நினைவிற்கு:- "ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும், ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்" (ரோம. 13:8). 

விறகு வெட்டி.. ...

ஒரு ஊர்ல ஒரு அறிவாளி ஆள் இருந்தார் . அவருக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம் .
அடிக்கடி  ஆலயத்துக்கு  போவார்.கடவுளை வேண்டிக்குவார் .அதுக்கப்புறம் காட்டுக்கு போவார்
.
விறகு வெட்டுவார் .அதை கொண்டு போய் விற்பனை செய்வார் .ஓரளவுக்கு வருமானம் வந்தது .அதை வச்சிக்கிட்டு நிம்மதியா வாழ்க்கை நடத்திகிட்டு இருந்தார் .

ஒரு நாள் அது மாதிரி அவர் காட்டுக்கு போகும் போது அங்கே ஒரு நரியை பார்த்தார் .

அந்த நரிக்கு முன்னங்கால் ரெண்டுமே இல்லை .எதோ விபத்துல இழந்துட்டது போல இருக்கு.. !

அது பாட்டுக்கு ஒரு மரத்தடியில உட்கார்ந்திருக்கு..அதை இவர் பார்த்தார் ..
அப்போ இவர் மனசுல ஒரு சந்தேகம்

"இந்த நரிக்கு ரெண்டு காலும் இல்லை ...

அப்படி இருக்கறப்போ இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியை போக்கி கொள்ள முடியும் ..?" அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சார்

இப்படி யோசிச்சுகிட்டு இருக்கும் போதே அந்த பக்கமா ஒரு புலி வந்தது..
அதை பார்த்த உடனே ஓடி போய் ஒரு மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிகிட்டார் , ஒளிஞ்சிகிட்டு என்ன நடக்குதுன்னு கவனிக்க ஆரம்பிச்சார்

அந்த புலி என்ன பண்ணிச்சுன்னா ... ஒரு பெரிய மானை அடிச்சி இழுத்துகிட்டு வந்தது ...அதை சாப்பிட்டது ...சாப்பிட்டது போக மீதியை அப்படியே அங்கேயே போட்டுட்டு போய்ட்டது...

புலி போனப்பின் கால் இல்லாத அந்த நரி மெதுவா நகர்ந்து கிட்ட வந்தது ...
மிச்சமிருந்ததை சாப்பிட்டது ..திருப்தியா போனது.  !

இவ்வளவையும் மரத்துக்கு பின்னாடி நின்னு நம்ம ஆள் கவனிச்சி பார்த்து கிட்டு இருக்கார்

இப்ப அவர் யோசிக்க ஆரம்பிச்சார்

" ரெண்டு காலும் இல்லாத ஒரு வயசான நரிக்கே ஆண்டவன் சாப்பாடு போடறான் . அப்படி இருக்கறப்போ...

தினமும் ஆலயத்துக்குப்  போய்  கும்பிடற நமக்கு சாப்பாடு போடாம விட்ருவானா ? நமக்கு கடவுள் பக்தி வேற அதிகம்..

நாம எதுக்கு அனாவசியமா வெயில்லயும் மழைலயும் கஷ்டபடனும் ..?எதுக்காக வேர்வை சிந்தி விறகு வெட்டனும் ...?

இப்படி யோசிச்சார் .அதுக்கப்பறம் அவர் காட்டுக்கே போறதில்லை .கோடலியை தூக்கி எறிஞ்சிட்டாரு........பேசாம ஒரு மூலையிலே உக்கர்ந்துட்டார் .

அப்பபோ ஆலயத்துக்கு  மட்டும் போயிட்டு வருவார்" கடவுள் நம்மை காப்பாத்துவார் ...அவர் நமக்கு வேண்டிய சாப்பாட்டை கொடுப்பார் "- அப்படின்னு நம்பினார்..,

கண்ணை முடிகிட்டு . ஆலய  மண்டபத்துலேயே ஒரு தூண்ல சாஞ்சி உக்காந்துகிட்டார் .
ஒவ்வொரு நாளும் போய்கிட்டே இருக்கு ...
சாப்பாடு வந்த பாடில்லே.. !

இவர் பசியால வாடி போனார் . உடம்பு துரும்பா இளைச்சு போய்டுச்சு . எலும்பும் தோலுமா ஆயிட்டார் .

ஒரு நாள் ராத்திரி நேரம் . ஆலயத்தை  யாருமே இல்லை. இவர் மெதுவா கண்ணை மூடி  ஜெபம் பண்ணினாா்  ...

" ஆண்டவா ...
என்னுடைய பக்தியிலே உனக்கு நம்பிக்கை இல்லையா .....?" நான் இப்படியே பட்டினி கிடந்தது சாக வேண்டியது தானா ? காட்டுல அந்த நரிக்கு புலி மூலமா சாப்பாடு போட்டியே..! அதை பார்த்துட்டு தானே இங்கே வந்தேன் ... என்னை இப்படி தவிக்க விட்டுட்டியே ... இது நியாயமா ?"..- ன்னாரு

அப்போது  ஒரு தேவதூதன்  வந்து ....

" முட்டாளே ! நீ பாடம் கற்று கொள்ள வேண்டியது நரி கிட்ட இருந்து இல்லே.. ! புலி கிட்ட இருந்து... . புலி போல் உழைத்து சாப்பிட்டு மீதியை இயலாதவர்களுக்கு தானமா கொடுக்கவே நீ கர்த்தரால் அழைக்கப்பட்டு  இருக்கிறாய் ..
வேலை செய்ய தேவன் உனக்கு பெலன்  தருகிறார்.  இனி இப்படி யோசிக்காதே.  வேதத்தை வாசி ....அதை விளக்கி சொல்கிறவர்களிடத்தில்  உன் காதை திறந்து கேள்.  உடனே போ.. என்று சொல்லி மறைந்தான். .

என் அன்பு வாசகரே,
உழைத்து வரும்  பணத்தில் நீங்கள் மட்டுமல்ல ஏழை எளியவர்களுக்கும்,  திக்கற்ற பிள்ளைகளுக்கும் கொடுக்க வேண்டும் பைபிள் போதிக்கிறது. 

அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக.
பிலிப்பியர் 2:4

பவுல் சொல்கிறாா்..
.
நீங்கள்
அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனேகூட இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக் கைகளே வேலைசெய்தது. இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லா விதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான்.
அப்போஸ்தலர் 20:34,35

மற்றபடி அடுத்தவர்களின் உழைப்பில் வரும் சாப்பாடு  கூட சாப்பிடாதிருக்கக்கடவன்  என்றே வாசிக்கிறோம்.

ஒருவனிடத்திலும் இலவசமாய்ச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம்.

ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே.

உங்களில் சிலர் யாதொரு வேலையும் செய்யாமல், வீண் அலுவற்காரராய், ஒழுங்கற்று திரிகிறார்களென்று கேள்விப்படுகிறோம்.
இப்படிப்பட்டவர்கள் அமைதலோடே வேலைசெய்து, தங்கள் சொந்தச் சாப்பாட்டைச் சாப்பிடவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே அவர்களுக்குக் கட்டளையிட்டுப் புத்திசொல்லுகிறோம்.
2 தெசலோனிக்கேயர் 3:8-12

அனைவருக்கும்
அன்புடன் இனிய காலை வணக்கம் !!
இந்த நாள் உங்களுக்கு நல்ல நாளாய்
அமைவதாக!!!

உழைப்பாளியான ரூபவதி

"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…" - பிரசங்கி 9:10   செல்வமும், களியாட்டுகளும், புகழும், பெருமைய...