Wednesday, 28 November 2018

தீர்க்கதரிசிகளும் தீர்க்கதரிசனம் சொல்லுகிற வரத்தை உடையவர்களும் ஒன்றா?

✍ தீர்க்கதரிசிகள் அழைக்கப்பட்ட தேவனுடைய ஊழியர்கள்.

தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவர்கள் அந்த வரத்தை உடைய விசுவாசிகள்.

ஆவியானவர் சபையில் உள்ள விசுவாசிகளுக்கு, ஒருவருக்கொருவர் பிரயோஜனமாயிருக்கும்படிக்கு வரங்களை பகிர்ந்து கொடுக்கிறார். 
(1கொரிந்.12:7-11)

ஆவியானவர் விசுவாசிகளுக்குத் தருகிற ஒரு வரம்தான் தீர்க்கதரிசனம் உரைத்தல். (1கொரிந்.12:10)

*தீர்க்கதரிசியாக ஊழிய அழைப்பைப் பெற்றவரும், தீர்க்கதரிசனம் உரைக்கும் வரத்தைப்பெற்ற விசுவாசியும் சொல்லுகிற தீர்க்கதரிசனத்தில் பெரிய வித்தியாசம் இல்லை.*

இவர்கள் சொல்லும் தீர்க்கதரிசனம்:  மனுஷருக்கு (சபைக்கு) பக்திவிருத்தியையும், புத்தியையும், ஆறுதலையும் உண்டாக்குகிறது.
(1 கொரிந்.14:3,4)

இருவரும் தீர்க்கதரிசனம் சொல்லுகையில்; ஜனங்கள் உணர்த்துவிக்கப்படுகிறார்கள்.   நிதானிக்கப்பட்டுகிறார்கள். அவர்களுடைய
இருதயத்தின் அந்தரங்கங்கள் வெளியரங்கமாகிறது.
அவர்கள் தேவனை விசுவாசிக்கிறார்கள்.
(1 கொரிந்.14:25)

ஆனாலும் *தீர்க்கதரிசியும் தீர்க்கதரிசனம் உரைக்கிற விசுவாசியும் ஒன்றல்ல.*

தீர்க்கதரிசனம் உரைக்கிற விசுவசிகள், தேவன் அவர்களுக்கு வெளிப்பாடு கொடுக்கும்போது மட்டுமே பேசுவார்கள்.

*தீர்க்கதரிசிகள் தங்களுக்கு வெளிப்பாடு இல்லாதபோதிலும் ஊழியஞ்செய்வார்கள்.*

அதாவது, கண்களை மூடிக்கொண்டு, ஒரு மனிதனைக்குறித்தோ, சபையைக்குறித்தோ, ஊழியரைக்குறித்தோ,  தேசத்தைக்குறித்தோ, எதிர்காலத்தைக்குறித்தோ வெளிப்பாடு சொல்லுகிறது மட்டுமே ஒரு தீர்க்கதரிசியின் ஊழியம் இல்லை.

*குறிப்பான வெளிப்பாடு இல்லாவிட்டாலும்,* *அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமாகிய சத்தியத்தைக்கொண்டு (2பேதுரு 1:19),* *சபைக்கு புத்தியும் ஆறுதலும் சொல்லி,* *திடப்படுத்தி பக்திவிருத்தி,*
*உண்டாக்கும் ஊழியத்தை அவன் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கவேண்டியவன்!*

இதனால், தீர்க்கதரிசியும் தீர்க்கதரிசனம் உரைக்கிற விசுவாசியும் ஒன்றல்ல என்கிறதை அறியலாம்!!

No comments:

Post a Comment

உழைப்பாளியான ரூபவதி

"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…" - பிரசங்கி 9:10   செல்வமும், களியாட்டுகளும், புகழும், பெருமைய...