Monday, 26 November 2018

கிருபை உங்களோடு



👉நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென். (வெளி 22:21)👈

சிருஷ்டிப்பில் தொடங்கி கிருபையோடு முடிக்கிறது பரிசுத்த வேதாகமம்! முடிவில்லாத வாழ்வுக்கு நேராய்ச் செல்ல, முடிவில்லாத கிருபை நமக்குக் கொடுக்கப்பட்டு இருக்கிறது! முடியாதபோது, சகலத்தையும் முடியச்செய்ய தேவகிருபை நமக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது!

அப்.பவுலுடைய பெலவீனங்கள் கிருபையினாலே பெலப்படுத்தப்பட்டது! கிருபையினாலே பெலப்படுத்தப்பட்ட அவ்வூழியம் எத்தனை மேன்மையாய், மகிமையாய் இருந்தது பாருங்கள். அவ்வித கிருபையை ருசித்தபின் தான், வாலிபன் திமொத்தேயுக்கு எழுதுகிறார், "ஆதலால், என் குமாரனே, நீ கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையில் பலப்படு." (2 தீமோ 2:1) - என்று!

கிருபை என்றால் கிறிஸ்து! "அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; (யோவான் 1:14) - என்று வேதம் சொல்கிறது! மேலும் கிறிஸ்து இயேசுவைக் குறித்து, வேதம் "இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்." (லுூக்கா 2:52) என்கிறதே! நமக்கும் தேவகிருபை எவ்வளவு அவசியம்!

சிந்திக்க:-

நாம் நிர்மூலமாகாதபடி காத்ததும், காப்பதும்  தேவனது பரிபூரண கிருபை அல்லவா? எச்சூழ்நிலையிலும் கிருபைகூரும் அவரை விட்டுவிடாதிருப்போம்! முடிவிலா வாழ்வை அடைவோம்! ஆமென்!

No comments:

Post a Comment

உழைப்பாளியான ரூபவதி

"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…" - பிரசங்கி 9:10   செல்வமும், களியாட்டுகளும், புகழும், பெருமைய...