Monday, 26 November 2018

கோபத்தைக் காட்ட ஒரு வழி...



எட்வின் ஸ்டான்டன் என்பவர் ஆபிராகம் லிங்கனுக்குக் கீழ் யுத்தச் செயலாளராகப் பணி புரிந்தவர். இவர் அடிக்கடி மிகவும் கோபப்படுபவருமாக இருந்தார். யுத்தம் கடுமையாக நடந்து கொண்டிருந்தபோது கோபமிகுதியால் கடினமான வார்த்தைகள் பேசிவிடுவார். ஒருமுறை யுத்தத் தளபதிஒருவரைக் குறித்து லிங்கனிடம் குறை கூறினார். லிங்கன் அவரிடம் "அந்த மனிதனுக்கு ஒரு கடிதம் எழுதி உன் கோபத்தைக் கொட்டிவிடு ; சரியாகக் கொடு'' என்று கூறினார். ஜனாதிபதி கொடுத்த இந்த ஆதரவு வார்த்தைகளால், ஸ்டான்டன் அன்று இரவு மிகவும் கடினமான வார்த்தைகளைக் கொண்ட ஒரு கடிதத்தை எழுதி மறுநாள் ஜனாதிபதியிடம் கொண்டு காண்பித்தார். ஆபிரகாம் லிங்கன் அதை மிகவும் கவனமாக வாசித்துவிட்டு, "நல்லது, அவனுக்குச் சரியாகக் கொடுத்துவிட்டாய்'' என்று கூறி கடிதத்தை ஸ்டார்ன்டனிடம் கொடுத்தார். ஸ்டான்டன் எழுந்துச் செல்ல முயன்றபோது லிங்கன் அவரிடம், "இப்போது எங்கே போகிறாய்'' என்று கேட்டார். "இந்த கடிதத்தை அவனுக்கு அனுப்பப்போகிறேன்'' என்றார் ஸ்டான்டன். ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் அவரைப்பார்த்து, உன் கோபத்தை எல்லாம் கொட்டித் தீர்த்து விட்டாயே, இனிமேல் ஏன் அவனுக்கு இந்த கடிதத்தை அனுப்பப் போகிறாய், அதை எரித்துவிட்டு, உன் கோபம் தீர்ந்துவிட்டபடியால், அவனுக்கு உன் ஆலோசனைகளைச் சொல்லி வேறொரு கடிதம் எழுது என்று கூறினாராம்.

நீங்கள் வேறொருவரிடம் கோபமாக இருக்கிறீர்களா? உங்கள் கோபத்தை எல்லாம் பேப்பரில் கொட்டிவிடுங்கள் கோபம் தீர்ந்த பிறகு அந்த நபருக்கு அன்பான ஒரு கடிதம் எழுதுங்கள். உங்களுக்குள் நல்ல, அன்பான உறவு ஏற்படும். கிறிஸ்தவ பிள்ளைகள் ஒருவருக்கொருவர் அன்புடனே வாழ தேவன் விரும்புகிறார். அன்புடன் வாழ்வதால் திருச்சபைகள் பலப்படும். பிறர் நம்மை தேவனுடைய உண்மையான பிள்ளைகள் என்று கண்டு கொள்வார்கள்.

No comments:

Post a Comment

உழைப்பாளியான ரூபவதி

"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…" - பிரசங்கி 9:10   செல்வமும், களியாட்டுகளும், புகழும், பெருமைய...