Tuesday, 27 November 2018

தவளையும் கொதி நீரும்..


ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள் தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும் போது, தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்..

வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்.  குளிர்காலத்தில் அதற்கு சுகமாயிருக்கும்.

நேரம் ஆக ஆக
தண்ணீர் கொதிநிலையை அடையும். அப்போது  வெப்பத்தை தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும்.

ஆனால்,
எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது.

ஏன் என்றால்..... வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்து விடும்.

எது அந்த தவளையை கொன்றது...?

நீங்கள்  கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று சொல்வீர்கள். அப்படித்தானே..
இல்லையென்றே நான் சொல்கிறேன்.

உண்மை என்னவென்றால்,

"தப்பித்து வெளியேற வேண்டும் என்ற நேரத்தில் தண்ணீரின் வெதுவெதுப்பு அதற்கு சுகத்தைக் கொடுத்தது. . . அந்த சுகத்தை அனுபவித்துக் கொண்டே  அதிலிருந்து வெளியேற  மனமில்லை. 

அதினால் அதன் நரம்புகள் எல்லாம் செயலற்றுப் போயின..  தண்ணீர் கொதிநிலை அடையும் போது அதன் சூட்டை தாங்க முடியாமல் வெளியே  குதிக்க முயற்சித்தது..நரம்புகள் வலுவிழந்து போனதால் அதுவால்  இயலவில்லை.

அந்த தவளையின்  இயலாமையே  அதை கொன்றது"......

என் அன்பு வாசகரே,
அப்படித்தான்  பாவம் உங்களிடத்தில் வரும்போது பாவம் என்று அறியாமலேயே  அதை ஏற்றுக் கொள்கிறீர்கள். 

அது  பாவம் என்று தெரிய வரும் பொது  அதை விட்டு விட நினைக்கிறீர்கள்.  ஆனால் அதன் இன்பமாக  இருப்பதால்  உங்கள் மனது அதில் லயித்துப் போகிறது.  அது உங்களை ஆளுகை செய்கிறது. 

ஒருநாள் அது தண்ணீரைப் போல கொதிநிலை அடையும்போது உங்களால் வெளியே வர முடிவதில்லை.  அந்த சூழ்நிலைக்கு ஏற்ப நீங்கள்  அனுசரித்து போகிறீர்கள். 

ஆனால்..நீங்கள் அதை அனுசரித்து போகாமல் , அவைகளை  எதிர்கொள்ள வேண்டும் என்பதை அறிந்து முயற்சித்தாலும்  உங்களால் முடியாது.

இதனால்
மனரீதியாக, உடல்ரீதியாக,  பணரீதியாகக்கூட  நீங்கள்  நசுக்கப்படுவீர்கள். நீங்கள் ஆரம்பத்திலேயே தேவன் உங்களை உணர்த்தும் போது  சுதாரிக்காமல் போனதால் மீண்டும் மீண்டும்  அதையே தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறீர்கள். 

தவளை செத்து போனது ஆனால் நீங்கள் சாகவில்லை உங்கள் ஆத்துமா செத்து விட்டது.  உங்களுக்கு எவ்வளவு திறமை இருந்தும், எவ்வளவு படித்திருந்தும் .உங்களால் சாதிக்க முடியாமவிருக்கிறீர்கள்.     நீங்கள் முயன்றும் உங்களால் முடியவில்லை. 

பாலத்திலிருந்து விடுதலையில்லாத
மனுஷன் என்ன சொல்கிறான்  என்பதை வேதம் சொல்கிறது...

நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை, நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன். ஆதலால் நான் அல்ல எனக்குள் வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது.

நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?
(ரோமர் 7:15 -24)

வேதம் சொல்கிறது...

பாவஞ்செய்கிறன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.  ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.
யோவான் 8:34-36

இப்படிப்பட்ட மனு குலத்தை விடுதலையாக்க   இயேசு மனிதர்களுடைய பாவத்தை முழுவதுமாக   ஏற்றுக் கொண்டு  சிலுவையில்  இரத்தம் சிந்தி மரித்து  உயிர்தெழுந்தவராயிருக்கிறார்.

அவரிடத்தில் உங்களை  முழுவதுமாக ஒப்புக் கொடுங்கள் அப்போது 

இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினால்  சகல பாவங்களையும் நீக்கி, உங்களை ச் சுத்திகரிப்பாா்

எப்படியென்றால்
உங்களுடைய பாவங்களை நீங்கள்  அறிக்கையிடுங்கள் , அப்போது பாவங்களை  உங்களுக்கு  மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி உங்களைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
(1 யோவான் 1:7-9)

நீங்கள்
பாவத்தினின்று விடுதலையாக்கப்படுவீர்கள்  தேவன் உங்கள் மனதை ஆளுகை செய்து இனி உங்களிடத்தில் பாவம் வராமல் பாதுகாத்துக் கொள்வார்.  அவரே உங்களைப் பாதுகாத்துக் கொள்வார். 

பரிசுத்தமாகுதலினால் உங்களுக்கு வரும் பலனில் நீங்கள் உங்கள் நிலையில்  சாதித்துக் கொண்டேயிருப்பீா்கள்   உங்களை எவராலும் பிடிக்க முடியாத  உயரத்திற்கு உங்களை தேவன்  உயர்த்தி  விடுவார்..உங்கள் வாழ்க்கையின்  முடிவும்  நித்தியஜீவனாயிருக்கும்...
ரோமர் 6:22

"அப்புறம்  நீங்கள் உங்களை அனுமதிக்காமல் உங்களை அழிக்க எவராலும் முடியாது"...என்பதை நினைவில் கொண்டு ஜாக்கிரதையாய் வாழ வேண்டும். 

No comments:

Post a Comment

உழைப்பாளியான ரூபவதி

"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…" - பிரசங்கி 9:10   செல்வமும், களியாட்டுகளும், புகழும், பெருமைய...