✍ பவுலின் அப்போஸ்தல ஊழியத்தைக் குறித்து மக்கள் சந்தேகப்பட்ட, பவுல் தான் ஒரு அப்போஸ்தலனே என்று நிரூபித்த வரலாறு உண்டு.
இயேசுவை முகமுகமாய் கண்டதையும் அப்போஸ்தலருடன் இருந்ததையும், அப்போஸ்தலனாக ஆவதற்கான தகுதியாக ஆதி அப்போஸதலர்கள் எண்ணினார்கள்!
(அப்போ.1:23-26)
பவுலுக்கு இந்த அனுபவம் இல்லாததினால், அவர் அப்போஸ்தலராக இருக்க வாய்ப்பில்லை என்று கொரிந்து சபையார் எண்ணினர்!
🤔 இப்படி குழப்பிவிட அன்றைக்கும் யாரோ இருந்திருக்கிறார்களே!
கிறிஸ்துவோடு இருந்திராத பவுலுக்குள் இருந்து கிறிஸ்து எப்படிப் பேசுவார் என்று அவர்கள் சந்தேகப்பட்டனர்!
😊 கிறிஸ்து எனக்குள்ளே பேசுகிறாரென்பதற்கு அத்தாட்சி தேடுகிறீர்களே. அவர் உங்களிடமாய்ப் பலவீனரல்ல, உங்களிடத்தில் வல்லவராயிருக்கிறார்.
2 கொரிந்.:313
என்று கொரிந்து சபையாரிடம் உறுதியாகச் சால்லுகிறார் பவுல்.
"கிறிஸ்து எனக்குள்ளே பேசாவிட்டால், நீங்கள் எப்படி அவரை வல்லவராக உணர்ந்திருக்கமுடியும்?" என்று அவர்களைக் கேட்கிறார் பவுல்.
👨🏻⚖ கிறிஸ்துவை ஜனங்களுக்குள்ளே வல்லவராக நிரூபிப்பது அப்போஸ்தலருக்கான தகுதிகளில் ஒன்று!
😊 நான் அப்போஸ்தலனல்லவா? நான் சுயாதீனனல்லவா? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை நான் தரிசிக்கவில்லையா? கர்த்தருக்குள் நீங்கள் என் கிரியையாயிருக்கிறீர்களல்லவா?
1 கொரிந்.9:1
நான் மற்றவர்களுக்கு அப்போஸ்தலனாயிராவிட்டாலும், உங்களுக்கல்லவோ அப்போஸ்தலனாயிருக்கிறேன். கர்த்தருக்குள் நீங்கள் என் அப்போஸ்தல ஊழியத்திற்கு முத்திரையாயிருக்கிறீர்களே.
1 கொரிந்.9:2
என்று, பவுல் தன் அப்போஸ்தல அழைப்பைக் காண்பிக்கிறதை கவனிக்கவும்.
"நான் ஒரு அப்போஸ்தலன். கிறிஸ்துவை தரிசித்த அனுபவம் எனக்கும் உண்டு" என்கிறார் பவுல்.
😊 நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து,
1 கொரிந்.15:3
அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளிலே உயிர்த்தெழுந்து,
1 கொரிந்.15:4
கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்.
1 கொரிந்.15:5
அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார். அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள்.
1 கொரிந்.15:6
பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார்.
1 கொரிந்.15:7
எல்லாருக்கும் பின்பு, அகாலப்பிறவிபோன்ற எனக்கும் தரிசனமானார்.
1 கொரிந்.15:8
நான் அப்போஸ்தலரெல்லாரிலும் சிறியவனாயிருக்கிறேன். தேவனுடைய சபையைத் துன்பப்படுத்தினதினாலே, நான் அப்போஸ்தலனென்று பேர்பெறுவதற்கும் பாத்திரன் அல்ல.
1 கொரிந்.15:9
என்கிறார் பவுல்.
தான் அப்போஸ்தலன் என்று பேர்பெறுவதற்கு தகுதியற்றவனாயினும், உயிர்த்தெழுந்த இயேசு மற்ற அப்போஸ்தலருக்கு தரிசனமானதுபோல தனக்கும் தரிசனமாகி, தனக்கு அந்தத் தகுதியை தந்துள்ளதாக பவுல் அத்தாட்சித் தருகிறார்.
மேலும், தன்னுடைய அப்போஸ்தல ஊழியத்திற்கு கொரிந்து சபையாரே முத்திரையாய் (சாட்சியாய்) இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.
... நீங்கள் எங்கள் ஊழியத்தினால் உண்டாகிய கிறிஸ்துவின் நிருபமாயிருக்கிறீர்களென்று வெளியரங்கமாயிருக்கிறது. அது மையினாலல்ல, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலும், கற்பலகைகளிலல்ல, இருதயங்களாகிய சதையான பலகைகளிலேயும் எழுதப்பட்டிருக்கிறது.
2 கொரிந்.3:3
என்று பவுல் எழுதுகிறதை கவனிக்கவும்.
கொரிந்து சபையார் பவுலின் அப்போஸ்தல ஊழியத்தினால் உண்டான கிறிஸ்துவின் நிரூபம்!
அதாவது, இவர்களைப் படித்தால் இவர்களில் கிறிஸ்துவை அறியலாம்!
தேவஜனங்களை கிறிஸ்துவின் (உள்ளான) சாயலை உடையவர்களாக்க போராடிப் பிரயாசப்படுகிற ஒருவரே, தான் "அப்போஸ்தலன்" என்று சொல்லிக்கொள்ளத் தகுதியானவர்!
😊 மேன்மைபாராட்டி, புத்தியீனனாயினேன். நீங்களே இதற்கு என்னைப் பல வந்தப்படுத்தினீர்கள். நான் ஒன்றுமில்லையென்றாலும், மகா பிரதான அப்போஸ்தலருக்கும் நான் எவ்வளவும் குறைந்தவனாயிராதபடியால், உங்களாலே மெச்சிக்கொள்ளப்படவேண்டியதாயிருந்ததே.
2 கொரிந்.12:11
அப்போஸ்தலனுக்குரிய அடையாளங்கள் எல்லாவிதமான பொறுமையோடும், அதிசயங்களோடும், அற்புதங்களோடும், வல்லமைகளோடும், உங்களுக்குள்ளே நடப்பிக்கப்பட்டதே.
2 கொரிந்.12:12
எதிலே மற்றச் சபைகளுக்குக் குறைவாயிருந்தீர்கள்?....
2 கொரிந்.12:13
என்று பவுல் கேட்கிறதை கவனிக்கவும்.
மகா பிரதான அப்போஸ்தலருக்கு இணையான கிரியைகளை தான் செய்கிறபடியினாலே, அவர்களுக்கு தான் குறைந்தவரல்ல என்று உறுதிப்படக் கூறுகிறார் பவுல்.
🤔 கிரியை இல்லாத அப்போஸ்தலர்கள் இதை கவனிக்கவேண்டுமே!
மேலும், தான் அப்போஸ்தலன் என்பதற்குரிய அடையாளங்களை எல்லாவிதமான பொறுமையோடும், அதிசயங்களோடும், அற்புதங்களோடும், வல்லமைகளோடும், கொரிந்தியருக்குள்ளே நடப்பித்ததாகக் கூறுகிறார்.
🤔 அப்போஸ்தலருக்கான ஒரு அடையாளமும் இல்லாமல், தங்களை "அப்போஸ்தலர்" என்று அழைத்துக்கொள்ள ஆசைப்படுவோர், இதை யோசிக்கவேண்டுமே!
மேலும், "மற்ற சபைகளுக்கு நீங்கள் எதிலே குறைவாயிருந்தீர்கள்?" என்று கொரிந்தியரை பவுல் கேட்கிறார்.
மற்ற அப்போஸ்தலர்கள் தாங்கள் ஸ்தாபித்த சபைகளுக்கு செய்ததில் சற்றும் குறையாத ஊழியத்தை பவுல் கொரிந்து சபைக்குச் செய்திருந்தார்.
பவுலின் ஊழியத்தினால் அவர்கள் இயேசுகிறிஸ்துவுக்குள்ளாய் எல்லா உபதேசத்திலும் எல்லா அறிவிலும், மற்றெல்லாவற்றிலும் சம்பூரணமுள்ளவர்களாக்கப்பட்டிருந்தார்கள். (1 கொரிந்.1:5)
👨🏻⚖ உண்மையான அப்போஸ்தலன் யார் என்று அவனால் உருவாக்கப்பட்டிருக்கும் மக்களின் ஆவிக்குரிய நிலையைக்கொண்டே அளவிடலாம்!!
🧑🏻இயேசுகிறிஸ்துவுக்குள்ளாய் தாங்களே, இன்னும் எல்லா உபதேசத்திலும் எல்லா அறிவிலும்,மற்றெல்லாவற்றிலும் சம்பூரணமடையாத சிலர், தங்களை அப்போஸ்தலர் என்று அழைத்துக்கொள்வதைக்குறித்து நிதானிப்பது நல்லது!

No comments:
Post a Comment