Tuesday, 27 November 2018

கள்ள அப்போஸ்தலரைக் கண்டுபிடிப்பது எப்படி?


✍  அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை எபேசு சபை சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததை ஆண்டவர் பாராட்டுகிறார்!
(வெளிப்.2:2)

தங்களை அப்போஸ்தலர் என்று அழைத்துக்கொள்ளுகிறவர்களை, சபைகள் கவனமாய் சோதித்தறிவது  நல்லது.

அஸ்திபாரம் போடுவோர் (அப்போஸ்தலர்)(எபேசி.2:20) சரியாய் இல்லாவிட்டால், அவர் போட்ட அஸ்திபாரத்தின்மேல் கட்டப்படும் கட்டிடம் (சபை) ஆட்டம் கண்டுவிடும்!

கள்ள அப்போஸ்தலர்களை எளிதில் கண்டுபிடித்துவிட முடியாது.

ஏனெனில், அவர்கள் தங்களை  கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்திற்குள் மறைத்துக்கொள்ளுகிறார்கள்.

 அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள்.
                2 கொரிந்.11:13

என்று இவர்களைப்பற்றி பவுல்  சொல்லுகிறதை கவனிக்கவும்.

அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று பவுல்சொல்லுகிறதை கேட்போம்:

மேலும், எங்களை விரோதிக்கச் சமயந்தேடுகிறவர்களுக்குச ் சமயம் கிடையாதபடிக்கு, தங்களைக்குறித்து மேன்மைபாராட்டுகிற காரியத்தில் அவர்கள் எங்களைப்போலக் காணப்படும்படி, நான் செய்வதையே இன்னும் செய்வேன்.
                2 கொரிந்.11:12

பவுல் சொல்லுகிற மேற்கண்ட வசனத்தின்மூலம் கள்ள அப்போஸ்தலர்களிடம் இரண்டு காரியங்களை காணலாம்:

1. இவர்கள் உண்மையான அப்போஸ்தலர்களிடம் ஐக்கியம் பாராட்டாமல், அவர்களை பகைக்க வாய்ப்புகளைத் தேடுவார்கள்!

2. தங்கள் ஊழியத்தை, ஜீவியத்தை தாங்களே மேன்மைப்பாராட்டிக்கொள்ளுவார்கள்!

😊 அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள்.
                2 கொரிந்.11:13
அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே.
                2 கொரிந்.11:14
ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும்.
                2 கொரிந்.11:15

கள்ள அப்போஸ்தலர்கள், தங்களை "உண்மையான ஊழியர்கள்" என்று காட்டிக்கொள்ள திறமையாய் நடிக்கும் சாத்தானின் ஊழியர்கள்!

தங்கள் எஜமான் சாத்தான் தேவதூதனின் வேஷத்திற்குள் ஔிந்துகொள்ளுகிறதுபோல, இவர்கள் தேவ ஊழியரின் வேஷத்திற்குள் ஔிந்திருப்பார்கள்!

👨🏻‍⚖ இவர்களை சரியாய் கண்டுபிடிப்பது எப்படி?

உண்மையான அப்போஸ்தலர் எதை செய்கிறார்களோ, அதற்கு எதிராகவே இவர்கள் செய்வார்கள்!

 எப்படியெனில்...

😊 நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாக கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காகத் தேவவைராக்கியங்கொண்டிருக்கிறேன்.
                  2 கொரிந்.11:2

என்கிறார் உண்மையான அப்போஸ்தலன் பவுல்.

 கள்ள அப்போஸ்தலர்களோ,

விசுவாசிகளை கிறிஸ்துவுக்கும் பிசாசுக்கும் நியமித்திருப்பார்கள்!

 அதாவது,

தேவனுக்கும் உலக பொருளுக்கும் ஊழியம் செய்ய, (மத்.6:24)

உலகத்தையும் தேலனையும் நிநேகிக்க , (யாக்.4:4)

 இவர்கள் உபதேசிப்பார்கள்!

அதாவது, இவர்கள்: உலக ஐசுவரியம், பணம், உலக ஆசீர்வாதம் இவைகளைக்குறித்து தேவனுக்கு இணையாகவோ, அல்லது தேவனைவிட அதிகமாகவோ பேசுவார்கள்!

😁 பரலோக ஆசீர்வாதம் எவ்வளவு முக்கியமோ, அப்படியே பூமிக்குரிய ஆசீர்வாதமும் முக்கியம்...

😁 உலக ஆசீர்வாதங்களையும் கிறிஸ்து சிலுவையில் சம்பாதித்து வைத்துவிட்டார்...

😁 நாம் உலக ஐசுவரியவான்களாக இருக்கவே இயேசு தரித்திரரானார்...

😁 பரலோகத்துக்காக பூமியில் எதையும் நாம்  இழக்கத் தேவையில்லை..

😁 பாடுகள், கஷ்டங்கள், தரித்திரம், நெருக்கம் இவைகள் உண்மை கிறிஸ்தவனுக்கு இல்லை...

என்று இவர்கள் போதிப்பார்கள்!

😊 ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப் பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்.
                  2 கொரிந்.11:3

என்று கள்ள அப்போஸ்தர்களைக் குறித்தே பவுல் அஞ்சுகிறார்.

தேவன் விளக்கின கனியை சர்ப்பமானது தன் தந்திரத்தினால் ஏவாளை சாப்பிடவைத்ததுபோல, கள்ள அப்போஸ்தலர்களும் கிறிஸ்தவர் அநுபவிக்கத் தகுதியாய் இராத அநேக உலகக் காரியங்களை அநுபவிக்கும்படி, கிறிஸ்தவர்களின் மனதை தங்கள் தந்திரமான பிரசங்கத்தினால் மயக்கிவிடுவார்கள்!

இவர்கள் பேசுகிறது தவறு என்று அறிய முடியாதபடிக்கு பல ஊழியர்களும் விசுவாசிகளும் இவர்களால் வஞ்சிக்கப்பட்டுவிடுவார்கள்!!

😊 எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன ் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே.
                  2 கொரிந்.11:4

என்று பவுல் கொரிந்தியரைக் கண்டிக்கிறதை கவனியுங்கள்.

 கள்ள அப்போஸ்தலர்கள்:

இயேசுவைப்பற்றித்தான் பேசுவார்கள். ஆனால், உண்மை அப்போஸ்தலர் பேசுவதைப்போல பேசமாட்டார்கள்!

பரிசுத்த ஆவியைப்பற்றிப் பேசுவார்கள். ஆனால், உண்மை அப்போஸ்தலர் பேசுகிற விதமாக பேசமாட்டார்கள்!

சுவிசேஷத்தை அறிவிப்பார்கள். ஆனால், உண்மை அப்போஸ்தலர் அறிவிக்கும் விதமாக அறிவிக்கமாட்டார்கள்!

இயேசுவைப்பற்றியும் ஆவியானவரைப்பற்றியும் ஆதி அப்போஸ்தலர் பேசாதவைகளை பேசுகிறவர்கள், ஆதி அப்போஸ்தலர் சுவிசேஷமாக எதைப் பேசினார்களோ அதைப் பேசாதவர்கள் எவர்களோ, அவர்களே கள்ள அப்போஸ்தலர் என்று அறியலாம்!

ஆனால், நல்ல அப்போஸ்தலர்களை சந்தேகப்படுகிற பலர், கள்ள அப்போஸ்தலர்களை சகித்துக்கொள்ளுவார்கள் என்கிறதுதான் ஆச்சரியம்!!

No comments:

Post a Comment

உழைப்பாளியான ரூபவதி

"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…" - பிரசங்கி 9:10   செல்வமும், களியாட்டுகளும், புகழும், பெருமைய...