செய்திகள் கொண்டுவரும் தூதன் :
காப்ரியேல்
- தேவ சந்நிதானத்திலே நிற்கிற தூதன் - செய்தி கொண்டு வரும் தூதன்
தேவதூதன் அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவசந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன், உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன்,
(லூக்கா 1: 19)
இவர்கள் மிகாவேலைப்போல வல்லமையில்லாதவர்கள் அல்லது வல்லமையில் குறைந்தவர்கள்.
(தானி 10: 13)
வல்லமையான தூதன் :
மிகாவேல்
வானத்திலே யுத்தமுண்டாயிற்று, மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே யுத்தம்பண்ணினார்கள், வலுசர்ப்பமும் அதைச்சேர்ந்த தூதரும் யுத்தம்பண்ணியும் ஜெயங்கொள்ளவில்லை.
(வெளி. விசேஷம் 12:7)
மிகாவேலும் அவனைச்சேர்ந்த தூதர்களும் என வேதம் சொல்லுகிறது. அப்படியென்றால் எங்கு யுத்தம் நடந்தாலும் மிகாவேலைச்சேர்ந்த தூதர்களே இருப்பார்கள் என அறிய முடிகிறது.
மேலும் கர்த்தரின் சேனை பரலோகத்திலே உண்டு. இவர்களும் மிகாவேலின் கூட்டமே. (தானி 10:13)
குணமாக்கும் தூதன் :
பெயர் குறிப்பிடபடவில்லை, ஆனாலும் பெதஸ்தா குளத்திலே தண்ணீரை கலக்கிய தூதனை குணமாக்கும் தூதன் எனலாம்.
சில சமயங்களிலே தேவதூதன் ஒருவன் அந்தக் குளத்திலே இறங்கி, தண்ணீரைக் கலக்குவான்: தண்ணீர் கலங்கின பின்பு யார் முந்தி அதில் இறங்குவானோ அவன் எப்பேர்ப்பட்ட வியாதிஸ்தனாயிருந்தாலும் சொஸ்தமாவான்.
(யோவான் 5 :4)
நகரத்தை நாட்டை சங்காரிக்கும் தூதன் :
சங்காரத்தூதன்
தேவதூதன் எருசலேமை அழிக்கத் தன்கையை நீட்டினபோது, கர்த்தர் அந்தத் தீங்குக்கு மனஸ்தாபப்பட்டு, ஜனங்களைச் சங்கரிக்கிற தூதனை நோக்கி: போதும், இப்போது உன் கையை நிறுத்து என்றார். அந்த வேளையில் கர்த்தருடைய தூதன் எபூசியனாகிய அர்வனாவின் போரடிக்கிற களத்திற்கு நேரே இருந்தான்.
(2 சாமுவேல் 24: 16)
வெளிப்படுத்தின விஷேசம் புத்தகத்திதிலுள்ள முக்கியமான தூதர்கள் : ( தனியாய் பதிவு உள்ளது)
எக்காளம் ஊதும் தூதர்கள்:
பின்பு, ஒரு தூதன் வானத்தின் மத்தியிலே பறந்துவரக்கண்டேன், அவன் மகா சத்தமிட்டு: இனி எக்காளம் ஊதப்போகிற மற்ற மூன்று தூதருடைய எக்காளசத்தங்களினால் பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ, (ஆபத்துவரும்) என்று சொல்லக்கேட்டேன்.
(வெளி. விசேஷம் 8:13)
சிறந்த ஸ்தானத்திலுள்ள தூதன் :
பின்பு, பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன், மேகம் அவனைச் சூழ்ந்திருந்தது, அவனுடைய சிரசின்மேல் வானவில்லிருந்தது, அவனுடைய முகம் சூரியனைப்போலவும், அவனுடைய கால்கள் அக்கினி ஸ்தம்பங்களைப்போலவும் இருந்தது.
(வெளி. விசேஷம் 10:1)
இப்படிப்பட்ட தூதன் வேதத்திலே ஒருமுறையே வருகிறார். மேகம் சூழ, தலையிலே வானவில்லோடு, முகம் சூரியனைப்போலவும், அவனுடைய கால்கள் அக்கினி ஸ்தம்பம்போல ஒரு
சிறந்த ஸ்தானத்தில் உள்ளவனாக காணப்படுகிறான்.
நம்மிடமிருந்து செய்தி / ஜெபங்களை எடுத்தும் செல்லும் தூதன் :
பெயர் சொல்லப்படவில்லை.
வேறொரு தூதனும் வந்து, தூபங்காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துப் பலிபீடத்தின் படியிலே நின்றான், சிங்காசனத்திற்குமுன்பாக இருந்த பொற்பீடத்தின்மேல் சகல பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தும்படி மிகுந்த தூபவர்க்கம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.
அப்படியே பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தப்பட்ட தூபவர்க்கத்தின் புகையானது தூதனுடைய கையிலிருந்து தேவனுக்குமுன்பாக எழும்பிற்று.
(வெளி. விசேஷம் 8 :3 -4)
இவரே ஜெபங்களை எடுத்துச்செல்லும் தூதன்.
சூரியனின் தூதன் :
பின்பு ஒரு தூதன் சூரியனில் நிற்கக்கண்டேன், அவன் வானத்தின் மத்தியில் பறக்கிற சகல பறவைகளையும் பார்த்து:
(வெளி. விசேஷம் 19 :17)
காற்றின் தூதன் :
இவைகளுக்குப்பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின்மேலாவது, சமுத்திரத்தின்மேலாவது, ஒரு மரத்தின்மேலாவது, காற்று அடியாதபடிக்கு, பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக்கண்டேன்.
(வெளி. விசேஷம் 7: 1)
ஆராதனையின் தூதன் :
[விடிவெள்ளியின் மகன்
(இவன் தள்ளப்பட்ட தூதன்)
நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன், வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும்,
(ஏசாயா 14 :13)]
பரலோகத்தில் ஆராதனை தூதர்கள் இருக்கிறார்கள். சேராபீன்களும் ஆராதனையிலிருக்கிறார்கள் என்பதை ஏசாயா 6:6 ல் காணலாம். இருந்தும் இந்த தூதன் ஏசாயா உதட்டை தணலால் தொட்டு பாவ நிவர்த்தி செய்தான். இரண்டு விதமான ஊழியத்தைச்செய்கிறதை பார்க்கலாம்.
அப்பொழுது சேராபீன்களில் ஒருவன் பலிபீடத்திலிருந்து, தன் கையிலே பிடித்த குறட்டால் ஒரு நெருப்புத்தழலை எடுத்து, என்னிடத்தில் பறந்து வந்து,
(ஏசாயா 6 :6)
அதினால் என் வாயைத் தொட்டு: இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவர்த்தியானது என்றான். (ஏசாயா 6 :7)
காக்கும் தூதன் :
இப்படி பல வகையான தூதர்களை வேதத்தில் காண முடிகிறது.
சங்கீதம் 91 ல்
உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.
(சங்கீதம் 91 :11)
இந்த தூதன் விசுவாசிகளை காக்கும் தூதன்
மற்றும் மத்தேயு 18: 10 ல், இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்பொழுதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
அவர்களுக்குரிய தேவ தூதன் அல்ல தூதர்கள் என சொல்லப்பட்டிருக்கிறது.
காக்கும் தூதர் ஒருவர் உண்டென்பதை சங் 91: 11 ல் கண்டோம். நமக்குரிய தேவ தூதர்கள் பரம பிதாவின் சமூகத்தை தரிசிக்கிறார்கள். நமக்கு தூதராகவும் பிதாவுக்கு நம்மைப்பற்றிய செய்தியை சொல்லுகிறவார்களாகவும் இருக்கிறார்கள்.
இப்படி எல்லா வகையிலும் எவ்வளவு தூதர்கள் இருப்பார்கள்?
சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர்களுடைய எண்ணிக்கை பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது.
(வெளி. விசேஷம் 5 :11)
நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமிடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களினிடத்திற்கும்………
எபிரெயர் 12:22 ல் தேவ தூதர்கள் (Myriads) மைரியாட்ஸ் (கிரேக்க வார்த்தையில்) குறிக்கப்பட்டுள்ளது. அது எண்ணற்ற தேவதூதர்களைக் குறிக்கிறது, அதாவது தேவதூதர்கள் கோடிக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள்!!
நன்றி அப்பா பிதாவே!
Subscribe to:
Post Comments (Atom)
உழைப்பாளியான ரூபவதி
"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…" - பிரசங்கி 9:10 செல்வமும், களியாட்டுகளும், புகழும், பெருமைய...
-
🗣️Song: Siluvaiyl yesuvai Kanden 🎙️Singer: Sis. Beryl Natasha ✍ Lyrics : 👇 எத்தனை பாவம் என் மேல் பாரம் அறியாமல் அலைந்தேனே தூரம் பாதையை...
-
ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை - 3 ஸ்தோதிரம் செய்வேனே பாத்திரமாக இம்மாத்திரம் கருணை வைத்த ...
No comments:
Post a Comment