✍ தேவனுடைய சபையில் இரண்டாவது முக்கிய இடத்தில் இருக்கிறவர்கள் தீர்க்கதரிசிகளே!
(1கொரி.2:28)
😁 இன்றைய சபைகளில் தீர்க்கதரிசிகளை அற்பமாய் நினைப்பதுபோல, ஆதிசபைகளில் நினைத்ததில்லை!
😁 இன்றைய தீர்க்கதரிசிகளைப்போல ஆதிசபை தீர்க்க்கதரிசிகள், அற்பத்தனமாய் நடந்ததும் இல்லை!
அப்போஸ்தலர்களுடன் இணைந்து சபைக்கான அஸ்திவாரமிடுகிறவர்கள் தீர்க்கதரிசிகளே!
(எபேசி.2:20)
🤔 மேய்ப்பர்கள் அல்லவா தங்களை "ஆல் இன் ஆல் ..." என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்!
எருசலேம் சபையில் அப்போஸ்தலருடன் தீர்க்கதரிசிகளும் இருந்தார்கள்.
எருசலேம் சபையை மட்டுமின்றி, புதிதாய் ஸ்தாபிக்கப்படும் சபைகளுக்கும் சென்று அவைகளை அவர்கள் திடப்படுத்தினார்கள்.
(அப்.11:27, 15:33)
எருசலேமிலிருந்து வந்த தீர்க்கதரிசிகளாகிய யூதாவும் சீலாவும் அநேக வார்த்தைகளினாலே அந்தியோகியா சபையாருக்குப் புத்தி சொல்லி, அவர்களைத் திடப்படுத்தினார்கள்.
என்று இருக்கிறதைக் காணலாம். (அப்.15:32)
விருத்தசேதனத்தைக்குறித்து குழப்பப்பட்ட அந்தியோகியா சபையாருக்கு, எருசலேமிலிருந்து அப்போஸ்தலரும் மூப்பரும் அனுப்பின நிருபத்துக்கு இசைவாகவே தீர்க்கதரிசிகள் சபையாருக்கு புத்திசொன்னார்கள்!
(அப்.15:23-33)
அப்போஸ்தலர்கள் தீர்க்கரிசிகளை தங்களுக்கு போட்டியாகக் கருதாமல், அவர்களுடைய அழைப்பின்படியே தங்களோடு இணைந்து தேவனுடைய சபையை கட்டுவதற்கு பயன்படுத்திக்கொண்டார்கள்.
😊 அப்பொழுது தங்களில் சிலரைத் தெரிந்துகொண்டு பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோகியாவுக்கு அனுப்புகிறது அப்போஸ்தலருக்கும் மூப்பருக்கும் சபையாரெல்லாருக்கும் நலமாகக்கண்டது. அவர்கள் யாரென்றால், சகோதரரில் விசேஷித்தவர்களாகிய பர்சபா என்று மறுபேர்கொண்ட யூதாவும் சீலாவுமே.
அப்.15:22
என்று இருக்கிறதை கவனியுங்கள்.
எங்களால் தெரிந்துகொள்ளப்பட்ட சில மனுஷரை உங்களிடத்திற்கு அனுப்புகிறது ஒருமனப்பட்டுக் கூடின எங்களுக்கு நலமாகக் கண்டது.
அப்.15:26
அந்தப்படியே யூதாவையும், சீலாவையும் அனுப்பியிருக்கிறோம். அவர்களும் இவைகளை வாய்மொழியாக உங்களுக்கு அறிவிப்பார்கள்.
அப்.15:27
என்று அப்போஸ்தலர் எழுதுகிறதைப் பாருங்கள்.
ஆதிசபயில் தீர்க்கதரிசிகளுக்கு விசுவாசிகளுக்கு மத்தியில் விசேஷ இடம் இருந்தது!
"சகோதரரில் விசேஷித்தவர்களாகிய யூதா சீலா" என்று இருக்கிறதை காணலாம்.
🤔 இன்று மற்ற அழைப்புள்ளவர்களை தங்களுக்குப் போட்டியாகப் பார்க்கும் பல மேய்ப்பர்கள் தங்கள் பார்வையை மாற்றிக்கொண்டால், அது சபைகளுக்கு எவ்வளவு ஆசீர்வாதமாக இருக்கும்!
😁 தங்களைவிட எவரும் சபையில் விசேஷித்தவர்களாக இருந்துவிடக்கூடாது என்பதற்காக, மற்ற அழைப்புள்ளவர்களை பக்கத்தில் வைத்துக்கொள்ளாத பக்திமான்கள் மனந்திரும்பினால் மட்டுமே, இன்றைய சபைகள் ஆதிசபையின் தரத்திற்குத் திரும்பும்!
இல்லையேல், இன்றைய சபைகள் தேறுவது கஷ்டம்தான்!
👨🏻⚖ அந்தியோகியா சபையை திர்க்கதரிசிகளும் போதகர்களும் நடத்தினதாக காணமுடிகிறது.
அந்தியோகியா பட்டணத்திலுள்ள சபையிலே பர்னபாவும், நீகர் என்னப்பட்ட சிமியோனும், சிரேனே ஊரானாகிய லுகியும், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோதுடனேகூட வளர்க்கப்பட்ட மனாயீனும், சவுலும், தீர்கதரிசிகளாயும் போதகர்களாயும் இருந்தார்கள்.
அப்.13:1
என்று பார்க்கிறோம்.
தீர்க்கதரிசிகளும் போதகர்களும் சபையை நடத்தும் உரிமையை எவரும் தடைச்செய்ய முடியாது!
இவர்கள் நடத்தின் சபை எருசலேம் சபையைவிட ஆவிக்குரிய தரத்தில் சிறந்ததாய் இருந்தது!
(அப்.11:25,26)
🤔 "நாங்கள்தான் சபையின் காவலர்கள். நாங்கள்தான் மந்தையை மேய்க்கிறவர்கள். எங்களால்தான் சபையை நடத்தமுடியும்" என்று அகந்தைக்கொள்ளுவோர் இதை அறியவேண்டும்!
👨🏻⚖ தீர்க்கதரிசிகள் சபைக்கு புத்திசொல்லி அதை திடப்படுத்துகிறவர்கள் மட்டும் அல்ல.
சபையை, ஊழித்தை, உலகத்தைக்குறித்த எதிர்காலத்தையும் அறிவிக்கிறவர்கள் ஆவர்!
😊 அந்நாட்களிலே எருசலேமிலிருந்து சில தீர்கதரிசிகள் அந்தியோகியாவுக்கு வந்தார்கள்.
அப்போ.11:27
அவர்களில் ஒருவனாகிய அகபு என்பவன் எழுந்து, உலகமெங்கும் கொடிய பஞ்சம் உண்டாகும் என்று ஆவியானவராலே அறிவித்தான். அது அப்படியே கிலவுதியு ராயனுடைய நாட்களிலே உண்டாயிற்று.
அப்.11:28
🤔 நம்ம தீர்க்கதரிசிகள், எல்லாம் நடந்தப்பின்புதானே தூக்கத்திலிருந்து எழுந்து, "ஆண்டவர் அப்பவே சொன்னார். நாங்கதான் சொல்ல மறந்துட்டோம்" என்கிறார்கள்.
😁 நடக்கிற காரியங்களைச் சொல்லுகிற நாலு தீர்க்கதரிசிகளைக் காண்பதே இன்று அரிதாயிருக்கிறதே!
😊 நாங்கள் அநேகநாள் அங்கே தங்கியிருக்கையில், அகபு என்னும் பேர்கொண்ட ஒரு தீர்க்கதரிசி யூதேயாவிலிருந்து வந்தான்.
அப்போ.21:10
அவன் எங்களிடத்தில் வந்து, பவுலினுடைய கச்சையை எடுத்துத் தன் கைகளையும் கால்களையும் கட்டிக்கொண்டு: இந்தக் கச்சையையுடையவனை எருசலேமிலுள்ள யூதர் இவ்விதமாய்க் கட்டிப் புறஜாதியார் கைகளில் ஒப்புக்கொடுப்பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறார் என்றான்.
அப்போ.21:11
என்று லூக்கா பதிவிடுகிறார்.
ஊழியக்காரன் பவுலுக்கு நேரிடப்போகிற காரியங்களை எவ்வளவு துள்ளியமாக முன்னறிவிக்கிறார் தீர்க்கதரிசி அகபு!
😁 ஏதோ கருப்பா தெரியுது!
😁 முள்ளுகளுக்கு நடுவில் ஒரு ரோஜாப்பூவைக் காண்கிறேன்!
😁 சாய்ந்த ஒரு தென்னைமரம் தெரிகிறது!
😁 ஒரு பெரிய நாட்டில் ஒரு பெரிய தலைவர் மரிக்கப்போகிறார்!
😁 ஏதோ ஒரு நாட்டில் பூகம்பம் வரப்போகிறது!
😁 ஒரு நாடு புயலால் பாதிக்கப்படப்போகிறது!
என்று குத்துமதிப்பாக அல்லவா இன்று அள்ளிவிடுகிறார்கள் நம்முடைய தீர்க்கதரிசிகள்!
ஆனாலும் தங்களை தீர்க்கதரிசிகள் என்றே சொல்லிக்கொள்ளாத சில உத்தம தீர்க்கதரிசிகள் இன்றும் இருக்கிறார்கள்!
😁 ஆனால், இன்றைய கிறிஸ்தவர்களுக்கு அவர்கள் தீர்க்கதரிசிகளாகவே தெரியமாட்டார்கள்!!
No comments:
Post a Comment