Monday, 26 November 2018

பைபிளில் பணக்காரனுக்கு சலுகையா???



சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பதிலடி...!!

வேதாகம சட்டத்தின் படி  குற்றவாளியின் சரீரம் கூட மரத்தில் இரவு முழுவதும் தொங்க கூடாது. அந்த நாளில் தானே புதைக்கபடவேண்டும். (உபாக 21:22-23). மறுநாள் ஓய்வுநாள் சடலத்தை கேட்க முடியாது என்பது குறிப்பிடதக்கது.

ரோம சட்டத்தின் படி குற்றவாளிகளின் உறவினர் யாராவது சரீரத்தை கேட்டு பெற்றுக்கொள்ளலாம். ஆனால் யாரும் கேட்கவில்லையென்றால் அதை அப்படியே ரோமர்கள் வேட்டை நாய்களுக்கு விட்டு விடுவார்கள்.

ஆனால் இயேசுவின் உறவினர்கள் யாரும் கேட்க முன் வரவில்லை அவர்கள் ஏழை என்பதினால் அல்ல ,அவர்கள் அனைவரும் கலிலேயாவை சேர்ந்தவர்கள் என்பதினால். ஆகவே அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு  மட்டுமே இயேசு அறையப்பட்ட மாகணத்தை சேர்ந்தவன். மாத்திரமல்ல அவனிடம் மட்டுமே யாரும் அடக்கம் செய்யாத புதிய கல்லறை இருந்தது. அதிலே இயேசுவை அடக்கம் செய்ய அனுமதிக்கேட்டான். ஆகவே பிலாத்து அனுமதித்தான். இவைகள் எல்லாம் தீர்க்கதரிசன நிறைவேறுதல்.

மேலும் இவன் யூத ஆலோசனை சங்கமாகிய சனகெரிப் சங்கத்தின் 70 உறுப்பினர்களில் ஒருவன். (Mar15:43) எல்லோரும் இயேசுவை அறைய அனுமதித்த போதும் இவன் அனுமதி கொடுக்கவில்லை.(Luk 23:51)ஆகவே அதை வெளிப்படுத்துவதற்காகவும் இதை செய்தான். ஆகவே தான் “துணிந்து போய்” என்ற வார்த்தை வசனத்தில் வருகின்றது.

இவன் பணக்காரன் என்பதினால் அல்ல தேவன் இவனிடம் இயேசுவின் சரீரத்தை ஒப்புகொடுக்கவில்லை.இவன் இயேசுவின் உண்மையான மறைமுக சீடன் என்பதினால் தேவன் இவனிடம் ஒப்படைத்தார்.(Mat 27:57)
(John19:38)

ஒருவேளை இயேசு அறைப்பட்ட மாகாணத்தை சேர்ந்த ஏழ்மையான உறவினார்கள் யார் போய் கேட்டிருந்தாலும் இயேசுவின் சரீரத்தை கொடுத்திருப்பான் பிலாத்து.

இயேசு உயிர்ந்தெழுந்த பிறகு அரிமத்தியா ஊரானாகிய பணக்கார யோசேப்பை தேடி போய் நன்றி சொல்லவில்லை. மாறாக மறுதலித்த தரித்திரனாகிய பேதுருவுக்கு கடற்கரையில் சுட சுட மீன்களை பொறித்து காத்திருந்தார் என்பது இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்பு.
வாசித்த அனைவருக்கும் நன்றி.

No comments:

Post a Comment

உழைப்பாளியான ரூபவதி

"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…" - பிரசங்கி 9:10   செல்வமும், களியாட்டுகளும், புகழும், பெருமைய...