🔥அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக்கொண்டிருப்பார்; அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து, அவர்கள் கர்த்தருடையவர்களாயிருக்கும்படிக்கும், நீதியாய் காணிக்கையைச் செலுத்தும்படிக்கும், அவர்களைப் பொன்னைப்போலவும் வெள்ளியைப்போலவும் புடமிடுவார். – (மல்கியா 3:3).🔥
எத்தனை உண்மை! நம் தேவன் எத்தனை அருமையானவர்! நீங்கள் ஒரு வேளை நெருப்பின் நடுவில் போடப்பட்ட வெள்ளியை போல இருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா? என்னால் தாங்க முடியாத வேதனைகளும் சோதனைகளும் என்னை சூழ இருக்கிறது என்று துவண்டு போயிருக்கிறீர்களா? தேவன், உங்களை உட்கார்ந்து, வெள்ளியை புடமிடுகிறது போல புடமிட்டு கொண்டிருக்கிறார். அவர் புடமிட்டு முடியுமட்டும் அவருடைய கண்கள் உங்கள் மேலேயே இருக்கிறது, மட்டுமல்ல, உங்கள் அசுத்தங்களும், குறைகளும் மாறி போய் அவருடைய சாயல் உங்களில் தெரியும்வரை நீங்கள் புடமிடப்படுகிறீர்கள். மனம் சோர்ந்து போக வேண்டாம், என்னால் தாங்க முடியாத அளவு பாடுகள் இருக்கிறதே என்று மனம் துவள வேண்டாம். நெருப்பின் நடு மையத்தில் காட்டப்பட்ட வெள்ளி எப்படி தூய்மையாய் மாறுகிறதோ அப்படி நீங்களும் தூய்மையாய் மாறுவீர்கள், ‘அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக்கொண்டிருப்பார்; அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து, அவர்கள் கர்த்தருடையவர்களாயிருக்கும்படிக்கும், நீதியாய் காணிக்கையைச் செலுத்தும்படிக்கும், அவர்களைப் பொன்னைப்போலவும் வெள்ளியைப்போலவும் புடமிடுவார்’.
சிந்திக்க:-
ஆம் கர்த்தர் நம்மை ஆசாரியர்களாகவும் இராஜாக்களாகவும் அழைத்திருக்கிறபடியால், நாம் கர்த்தருடையவர்களாயிருக்கும்படிக்கும், ஜீவனுள்ள தேவனாகிய கர்த்தருக்கு, சுத்தமான இருதயத்திலிருந்து, துதிபலிகளை காணிக்கையாய் அவருக்கு செலுத்தும்படியாகவும், அவர் நம்மை புடமிட்டு கொண்டிருக்கிறார். ஆகையால் சோர்ந்து போகாதிருங்கள். அவர் புடமிட்டு முடியும்போது, நாம் மிகவும் தூய்மையை அவருக்கே சொந்தமானவர்களாக இருப்போம். ஆமென் அல்லேலூயா.
No comments:
Post a Comment