Sunday, 2 December 2018

ஒரு மேய்ப்பர்தானே சபையை மேய்க்கமுடியும்?

✍ ஆம். தேவனுடைய சபையை மேய்ப்பர் மேய்க்கவேண்டும்.

 மேய்த்தல் என்பது மந்தையையும், மற்றப் பணியாளர்களையும் தன் அதிகாரத்தின்கீழ் வைத்துக்கொள்வதுஅல்ல!

ஒரு மேய்ப்பர் மட்டுமே தனியாக ஒரு சபையை மேய்க்கவேண்டும் என்று வேதம் சொல்லவுமில்லை.

 "என் ஆட்டுகுட்டிகளை மேய்ப்பாயாக, என் ஆடுகளை மேய்ப்பாயாக" என்று அப்போஸ்தலனிடமும் இயேசு சொல்லியிருக்கிறார்.
(யோவான்21:15-17)

எனவே, மேய்த்தல் என்பது மேய்ப்பனுடைய வேலையை மட்டுமே குறிக்கும் சொல் அல்ல. அது
அப்போஸ்தலருடைய ஊழியத்தையும் குறிக்கும் சொல்லாகும்.

 மேய்ப்பன் என்பது தனிப்பட்ட அழைப்பைக் குறிக்கும் சொல். 

ஆனால், மேய்த்தல் என்பது பல அழைப்புள்ளவர்கள் செய்யும் வேலைகளைக் குறிக்கும் பொதுவாக சொல்லாகும்.

 உங்களிலுள்ள மூப்பருக்கு
                     1 பேதுரு 5:1

என்று பேதுருவால் குறிப்பிடப்படுகிறவர்கள், எபிரேய  சபைகளுக்குள் இருக்கும்  மேய்ப்பர்கள் மட்டும் அல்ல. பிற அழைப்புள்ள ஊழியர்களும் ஆவர்.

அப்போஸ்தலனாகிய தன்னை எபிரேய சபை மூப்பர்களுக்கு உடன் மூப்பன் (1பேதுரு5:1) என்று பேதுரு  குறிப்பிடுவதையும் கவனித்தால், மூப்பர் என்கிற சொல் இங்கே
பல அழைப்புள்ள ஊழியர்களுக்குப் பொதுவான சொல் என்கிறதை அறியலாம்.

உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, ...
                      1 பேதுரு 5:2
மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள்.
                      1 பேதுரு 5:3

என்று பல அழைப்புள்ள மூப்பர்களுக்கே பேதுரு ஆலோசனைத் தருகிறார்.

தேவன் தமது மந்தையை ஐந்துவிதமான ஊழியர்களிடம் கொடுத்திருக்கிறார். இவர்களே மந்தைக்கு மூப்பரும் கண்காணியுமானவர்கள்.

 மந்தையை மேய்த்துக் கண்காணிப்புச் செய்வது இவர்கள் அனைவருக்குமான பொதுவானப் பணியாகும்!

ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்கு பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்.
                    அப்போ.20:28

என்று பவுல் இங்கு எபேசு சபை மூப்பர்களைக் குறிப்பிடுகிறார்.

தேவன் தமது மந்தையை மேய்க்க ஐந்துவிதமான ஊழியர்களையும்  கண்காணிகளாக வைத்திருக்கிறார்.

எனவே, இங்கும் கண்காணிகள் என்று குறிப்பிடப்படுவது மேய்ப்பர் மட்டுமே கிடையாது.

இங்கு கண்காணிகள் என்று குறிப்பிடப்படுவது மேய்ப்பரைத்தவிர மற்ற அழைப்புள்ளவர்கள் கிடையாது என்றால், அவர்கள் மேய்ப்பராகவும் இருக்கமுடியாது!

ஏனெனில்,

👨🏻‍⚖ அப்போஸ்தலர் மற்றும் தீர்க்கதரிசிகளைக் கொண்டும் (அப்.2:42, 11:27)

👨🏻‍⚖ முதிர்ச்சியுள்ள விசுவாசிகளைக் கொண்டும் (அப்.11:22-26)

👨🏻‍⚖ தீர்க்கதரிசிகள் மற்றும் போதகரைக்கொண்டும் (அப்.13:1-3)

👨🏻‍⚖சுவிசேஷகரைக்கொண்டும் (அப்.21:8)

தேவன் தமது சபையை நடத்தியிருக்கிறார்.

👨🏻‍⚖ உங்களை நடத்துகிறவர்கள், (எபிரே.13:17)

👨🏻‍⚖ நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்கள்,
(1 தீமோத் 5:17)

என்று குறிப்பிடப்படுவது மேய்ப்பர் மட்டுமே என்று எண்ணுகிறது அறியாமையாகும்!

தேவனுடைய மந்தையை மேய்ப்பர்களும் நடத்துகிறவர்களே!
ஆனால், மேய்ப்பர் மட்டுமே நடத்துகிறவர் அல்ல!

ஒரு மந்தையை பராமரிக்கும் பணிக்கு பலவிதமான ஊழியர்கள் தேவைப்படுகிறார்கள்.

👨🏻‍⚖ வாசலைக் காக்கிறவர் (யோவான்10:3)

👨🏻‍⚖ மேய்க்கிறவர்
          (யோவான்10:2)
👨🏻‍⚖ மயிர்கத்தரிக்கிறவர் (2சாமு.13:24)

👨🏻‍⚖ குணப்படுத்துகிறவர் (சங்.23:5)

👨🏻‍⚖ காயங்கட்டுகிறவர்
(எசேக்.34:4)

என்று ஒரு மந்தையின் பராமரிப்பில் பலர் ஈடுபடவேண்டியுள்ளதுபோலவே, சபை பராமரிப்பில் ஐந்துவித ஊழியரின் பணியும் அவசியமானது.

இப்படியிருக்க, ஒரு மந்தை முழுவதுக்குமான வேலையை ஒரு மேய்ப்பன் மட்டுமே செய்துவிட முடியாது.

மேலும், மேய்ப்பர் மந்தையை மேய்க்கும் வேலைக்காரரே அல்லாமல், மந்தையின் முதலாளிகள் அல்ல!

😊 இன்றைய மேய்ப்பர்கள் தங்களை மந்தையின் முதலாளிகளாக நினைத்துக்கொள்வது தவிர்க்கப்படவேண்டும்.

No comments:

Post a Comment

உழைப்பாளியான ரூபவதி

"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…" - பிரசங்கி 9:10   செல்வமும், களியாட்டுகளும், புகழும், பெருமைய...