"நீ தண்ணீர்களைக் கடக்கும்போது, நான் உன்னோடு இருப்பேன்" (ஏசா. 43:2).
கர்த்தருடைய எல்லா வாக்குத்தத்தங்களிலும், சிறந்த ஒரு உடன்படிக்கையின் வாக்குத்தத்தம் உண்டென்றால், அது "உன்னோடுகூட இருப்பேன்" என்பதுதான். ஆம், அவர் உங்களை விட்டு விலகுவதுமில்லை. உங்களைக் கைவிடுவதுமில்லை. ஒன்றிரண்டு நாட்கள், வருடங்கள் மட்டுமல்ல, உலகத்தின் முடிவு பரியந்தமும், சகல நாட்களிலும், அவர் உங்களோடுகூட இருப்பார். அவருடைய பிரசன்னம் உங்களோடுகூட இருக்கும். அவருடைய சமுகம், எப்பொழுதும் உங்களுக்கு முன்பாகச் செல்லும்.
"நான் உங்களோடு இருக்கிறேன்" என்பதை, இஸ்ரவேல் ஜனங்களுக்கு உணர்த்தும்படியாக, அவர்கள் கண்ணாரக் காணக்கூடிய விதத்தில், கர்த்தர் பகலில் மேக ஸ்தம்பங்களையும், இரவிலே அக்கினி ஸ்தம்பங்களையும், அவர்களுக்கு முன்பாக வைத்தார். தண்ணீர் கொடுக்கும் கன்மலையும், அவர்களுடனே சென்றது.
நான், உங்கள் மத்தியிலே வாசம்பண்ண விரும்புகிறேன் என்று சொன்ன கர்த்தர், ஆசரிப்புக் கூடாரத்திலே தன்னுடைய ஷெக்கினா மகிமையோடு இறங்கி வந்தார். இன்றைக்கும் அவர் உங்களோடுகூட இருக்கிறார். "அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை. உன்னைக் கைவிடுவதுமில்லை" (உபா. 31:8).
தன்னுடைய வாழ்க்கை சம்பவங்களையெல்லாம், தாவீது ராஜா நினைவுகூர்ந்து, "மனுஷரை எங்கள் தலையின்மேல் ஏறிப்போகப்பண்ணினீர்; தீயையும், தண்ணீரையும் கடந்துவந்தோம்; செழிப்பான இடத்தில், எங்களைக் கொண்டுவந்து விட்டீர்" (சங். 66:12) என்று எழுதுகிறார். தாவீது சொல்லுகிறார், "தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும், சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும். நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்" (சங். 90:15,14) என்று ஊக்கமாக ஜெபித்தார்.
கர்த்தர், இந்த நாளில் உங்களுக்குக் கொடுக்கிற வாக்குத்தத்தம் என்ன? "நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடுகூட இருப்பேன்" என்பதாகும். நீங்கள் கடந்துச் செல்லுகிற பாதை கரடு முரடாக இருந்தாலும், கர்த்தர் உங்களோடிருப்பதினாலே, அவர் ஜெயம் கொடுத்து, உங்களை நடத்துவார்.
இதிலே, "தண்ணீர்" என்று வருவது, ஏதோ மழை பெய்து வருகிற, கொஞ்சம் தண்ணீர் அல்ல. கர்த்தர் தண்ணீருக்கு விளக்கமளித்து, "தண்ணீர்களைக் கண்டாயே; அவைகள் ஜனங்களும், கூட்டங்களும், ஜாதிகளும், பாஷைக்காரருமாம்" (வெளி. 17:15) என்று சொன்னார். தற்போது, கேரளாவில் அடை மழை பெய்து, தண்ணீருக்குள் அந்த மாநிலமே மூழ்கினதுபோல இருந்தது. அணைகளின் மதகு களெல்லாம் திறந்துவிடப்பட்டன. அதுபோல, நான்கு வித கூட்டத்தார் உங்கள் மேல் அலைமோதி வரக்கூடும். முதலாவது, ஜனங்கள். இரண்டாவது, ஜனக் கூட்டத்தார். மூன்றாவது, ஜாதிகள். நான்காவது, பாஷைக்காரர்கள்.
நீங்கள், கிறிஸ்துவை சார்ந்து, அவரைப் பற்றிக்கொண்டிருக்கிறபடியால், வெகு ஜனங்களான, புற மதஸ்தர்கள் உங்களுக்கு விரோதமாய் எழும்பக்கூடும். பொல்லாதவைகளை சிந்திக்கக்கூடும். ஆனாலும் கர்த்தர் சொல்லுகிறார், "நான் உன்னோடுகூட இருப்பதினால், அது சிறிய வெள்ளமோ, பெரிய வெள்ளமோ, அவைகளை கடக்க நான் உதவிச் செய்வேன். சிவந்தl சமுத்திரத்தையே இரண்டாய் பிளந்து, உங்களுக்கு பாதை உண்டாக்குவேன்" என்கிறார்.
நினைவிற்கு :- "சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர்" (சங். 46:11).

No comments:
Post a Comment