தாவீது மீது சவுல் மன்னனுக்குக் கோபம். அவனைக் கொலை செய்ய வேண்டுமென திரிந்தார். தப்பி ஓடிய தாவீது குகைகளில் வசித்து வந்தார். அவருடன் சுமார் அறுநூறு பேர் இருந்தார்கள். அந்தக் காலகட்டத்தில் பலருக்கு உதவிகளையும் செய்து வந்தார் தாவீது. நாபால் என்பர் அப்படி உதவி பெற்றவர்களில் ஒருவர். நாபாலின் கால்நடைகளை தாவீது, பாதுகாத்துக் காப்பாற்றியிருக்கிறார்.
நாபாலோ முரடன், கெட்ட சுபாவம் உடையவன். ஆனால் பெரிய செல்வந்தன். அவனுக்கு மூவாயிரம் ஆடுகளும், ஆயிரம் வெள்ளாடுகள் இருந்தன. அவன் தனது ஆடுகளுக்கு முடி கத்தரித்துக் கொண்டிருப்பதைக் கேள்விப்பட்ட தாவீது பத்து இளைஞர்களை சமாதான வாழ்த்துக் கூற அனுப்பினார். கூடவே “தனக்கும் கூட்டாளிகளுக்கும் கொடுக்க முடிந்ததைக் கொடுங்கள்” என விண்ணப்பமும் வைத்தார்.
வந்தவர்களை நாபால் அவமானப் படுத்தினார். தாவீது எவன் ? எதுக்கு என்னோட உணவையும், அப்பத்தையும் கொடுக்க வேண்டும். என திருப்பி அனுப்பினான்.
நாபாலின் மனைவி பெயர் அபிகாயில். அவள் மிக அழகானவள். நல்ல திறமையானவள். ஞானம் நிறைந்தவள். பணியாளன் ஒருவன் சென்று நடந்த விஷயங்களையெல்லாம் அவளிடம் சொன்னார். தாவீது நல்லவர் என்றும், தங்களுடைய மந்தைகளையும், பணியாளர்களையும் பாதுகாத்தவர் என்றும் சொன்னார்.
அதே நேரத்தில் தாவீதிடம் திரும்பிய பத்து பேரும் நடந்ததைக் கூறினார்கள். தாவீது கடும் கோபம் அடைந்தார். உடனே தனது பணியாளர்களில் நானூறு பேரைக் கூட்டிக் கொண்டு, நாபாலையும் அவன் கூட்டத்தையும் கூண்டோடு ஒழிக்க வாள்களுடன் புறப்பட்டார்.
அபிகாயில் நடக்கப் போகும சிக்கலை அறிந்து கொள்ளுமளவுக்கு ஞானம் கொண்டிருந்தாள். உடனே இருநூறு அப்பங்கள், திராட்சை ரசம், தோலுரித்த ஐந்து ஆடுகள், வறுத்த பயிறு, அத்திப்பழ அடை, திராட்சைப் பழ அடை என ஏகப்பட்ட பொருட்களை எடுத்து கழுதை மேல் ஏற்றி தாவீதிடம் கொடுக்க ஆளனுப்பினாள். பின்னாலேயே அவளும் ஒரு கழுதையில் சென்றாள்.
போகும் வழியில் தாவீதை எதிர்கொண்டாள். தாவீது கோபம் தணியாதவராக இருந்தார். அபிகாயில் சட்டென குதிரையிலிருந்து இறங்கி தாவீதின் முன்னால் முகம் குப்புற விழுந்து வணங்கினாள். தலைவரே, பழி என்மேல் இருக்கட்டும். நான் சொல்வதை தயவு செய்து கேளுங்கள். நாமான் ஒரு மூடன். பெயருக்கு ஏற்றார் போல அறிவீனன். நீர் இரத்தம் சிந்தாதவாறு உம்மைத் தடுக்க வந்தேன். இது ஆண்டவரின் விருப்பம். ஆண்டவர் உம்மை ஆசீர்வதித்து இஸ்ரவேலுக்கு அரசராக்குவார். என்றாள்.
அபிகாயிலின் பேச்சைக் கேட்ட தாவீது மனம் மாறினார். “உன்னை இங்கே அனுப்பிய ஆண்டவரின் பெயர் வாழ்த்தப்படட்டும். நீ இங்கே வராமல் இருந்திருந்தால் நாபாலையும், அவனைச் சார்ந்த அனைத்து ஆண்களையும் அழித்திருப்பேன். உன்னால் அவர்களை விட்டு விடுகிறேன். என்றார்.
நடந்தது எதையும் அறியாத நாபால் நன்றாக உண்டு குடித்து போதையில் லயித்திருந்தான். மறு நாள் காலையில் அபிகாயில் விஷயத்தை நாபாலிடம் சொல்ல அவன் அதிர்ந்து போய் சிலையானான். மாபெரும் ஆபத்திலிருந்து தான் தப்பியதை உணர்ந்தான். ஆண்டவர் அவனைத் தண்டித்தார். பத்து நாட்களில் அவன் இறந்தான்.
இதைக் கேள்விப்பட்ட தாவீது அபிகாயிலின் சம்மதத்துடன் அவரை மணந்து கொண்டார்.
விவிலியத்தில் அதிகம் பேசப்படாத அபிகாயிலின் வாழ்க்கை பிரமிப்பூட்டும் பாடங்கள் நிரம்பியது.
அபிகாயிலின் ஞானம் ஒரு மாபெரும் சண்டையைத் தவிர்த்தது. கூடவே தாவீது செய்ய இருந்த பாவத்தையும் தடுத்தது. ‘புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக்கட்டுகிறாள்’ எனும் நீதிமொழிக்கு முன்னுரையாக இருந்தது அபிகாயில் வாழ்க்கை. செல்வம் மனிதனைக் காப்பதில்லை, ஞானமே காக்கும்.
தாவீதிற்கும் அவருடைய ஊழியர்களுக்கும் நன்றியைச் செலுத்த வேண்டும் என முடிவு செய்ததில் அபிகாயிலின் நன்றி செலுத்தும் பண்பு தெரிகிறது.
கணவனுக்காக தாவீதிடம் மன்னிப்புக் கேட்பதில், மன்னிப்பும், பணிவும் நிறைந்த கர்வமற்ற குணாதிசயம் தெரிகிறது.
ஊழியன் ஒருவனுடைய பேச்சைக் கேட்க அபிகாயில் ஒத்துக்கொண்டதில் அவளுடைய “கேட்கும்” குணம் தெரிகிறது. தாமதிக்காமல் செயல்பட்டதில் அவளுடைய சாதுர்யமும், ஞானமும் தெரிகிறது. ஊழியர்களைக் காக்க முடிவு செய்ததில் அவளுடைய கரிசனை தெரிகிறது. கணவனிடம் போய் சண்டை போடாததில் அவளுடைய பொறுமை தெரிகிறது.
தாவீதைக் குறித்தும், கடவுளுடைய திட்டங்களைக் குறித்தும் அறிந்திருந்தாள் என்பது அவளுடைய ஆன்மீக அறிவைக் காட்டுகிறது.
தாவீதிடம் சண்டையைத் தவிர்க்கும்படி கேட்டபோதும் கூட கடவுளை முன்னிறுத்தியே அபிகாயில் பேசியது அவளுடைய இறை விசுவாசத்தைக் காட்டுகிறது. கோபம் கொண்ட தாவீதின் முன்னால் நின்று பேசியது அவளுடைய தைரியத்தைக் காட்டுகிறது.
கணவனின் வார்த்தையை விட, கடவுளின் வார்த்தைக்கு அவள் முதலிடம் கொடுத்தாள். அதன் பின் நடந்தவற்றைக் கணவனிடம் தெரிவிக்கிறாள் என்பதில் ஒரு நல்ல மனைவியாகவும் இருந்தாள் என்பதையும் காட்டுகிறது. நல்லவற்றைக் கற்றுக் கொள்வோம்.

No comments:
Post a Comment