மோடி தலைமையில் மத்தியில் பாரதிய ஜனதா அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, சில இந்து அமைப்புகள் கிறிஸ்தவர்கள் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்திய அரசியல் சாசன சட்டப்படி அவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். ஏனென்றால் மதத்தை பிரச்சாரம் செய்வதும், இயேசுவின் அன்பை பிறருக்கு சொலவதும் தனி மனித சுதந்திரம். இந்திய அரசியல் சாசன சட்டம் பிரிவு 19 மற்றும் பிரிவு 25
THE CONSTITUTION OF INDIA - Right to Freedom Article 19: Protection of certain rights regarding freedom of speech, etc.
இந்திய அரசியல் சாசன சட்டம் பிரிவு 19: இந்தியாவிலுள்ள எந்த மனுஷனும் சுதந்திரமாக பேசலாம். ஆயுதம் இல்லாமல் ஒரு கூட்ட மக்களை சேர்த்தும் பேசலாம். இயேசுவை பற்றி பேசுவதற்கும் சொல்வதற்கும் ஒரு தனி மனிதனுக்கு முழு சுதந்திரத்தையும் இந்திய அரசாங்கம் அளிக்கின்றது. எந்த இடத்திற்கும் சென்று இயேசுவைப் பற்றி பேசலாம்.
THE CONSTITUTION OF INDIA - Right to Freedom of Religion 25: Freedom of conscience and free profession, practice and propagation of religion.
இந்திய அரசியல் சாசன சட்டம் பிரிவு 25: இந்தியாவிலுள்ள எந்த மனுஷனும் எந்த மதத்தையும் பின்பற்றலாம், எந்த மதத்தையும் பரப்பலாம். அதாவது இந்திய அரசியல் சாசன சட்டப்படி, மதத்தை பிரச்சாரம் செய்வது தனிமனித சுதந்திரம். மதமாற்றம் என்பது கொலைக்குற்றம் அல்ல.
இந்த தகவலை உங்களுக்கு தெரிந்த கிறிஸ்துவ நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள். இயேசுவின் அன்பை பிறருக்கு சொல்லும் பொழுது உங்களை யாராவது ஏளனம் செய்தாலோ அல்லது தாக்க முற்ப்பட்டாலோ அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நமக்கு முழு அதிகாரமும் உண்டு. மோடி தலைமையில் மத்தியில் பா.ஜனதா அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து கிறிஸ்துவின் சபைகள் நாளுக்கு நாள் நெருக்கப்படுகின்றது. இதையெல்லாம் கண்டு பயந்து அமைதியாயிருக்க நாங்கள் ஒன்றும் கோழைகள் அல்ல. தவறு செய்கின்றவர்கள் கோர்டில் வாய்தா வாங்கிக்கொண்டு தொடர்ந்து தவறு செய்து வருகையில், எல்லோருக்கும் நன்மைகள் செய்கின்ற கிறிஸ்தவர்கள் நாம் ஏன் அமைதியாக இருக்க வேண்டும். இயேசு நல்லவர் என்று செல்லும் இடமெல்லாம் சொல்லிடுவோம். அகிலமெங்கும் இயேசுவின் அன்பை பரப்பிடுவோம்.
தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள்.
அப்போஸ்தலர் 5:42
சிதறிப்போனவர்கள் எங்குந்திரிந்து, சுவிசேஷவசனத்தைப் பிரசங்கித்தார்கள்.
அப்போஸ்தலர் 8:4
அப்பொழுது பிலிப்பென்பவன் சமாரியாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குப்போய், அங்குள்ளவர்களுக்குக் கிறிஸ்துவைக் குறித்துப் பிரசங்கித்தான்.
அப்போஸ்தலர் 8:5
தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான்.
அப்போஸ்தலர் 9:20
அவர்களில் சீப்புருதீவாரும் சீரேனே பட்டணத்தாருமாகிய சிலர் அந்தியோகியா பட்டணத்துக்கு வந்து, கிரேக்கருடனே பேசிக் கர்த்தராகிய இயேசுவைக்குறித்துப் பிரசங்கித்தார்கள்.
அப்போஸ்தலர் 11:20
சாலமி பட்டணத்தில் வந்தபோது அவர்கள் யூதருடைய ஜெபஆலயங்களில் தேவவசனத்தைப் பிரசங்கித்தார்கள். யோவானும் அவர்களுக்கு உதவிக்காரனாயிருந்தான்.
அப்போஸ்தலர் 13;5
இக்கோனியா பட்டணத்திலே அவர்கள் இருவரும் யூதருடைய ஜெபஆலயத்தில் பிரவேசித்து, யூதரிலும் கிரேக்கரிலும் திரளான ஜனங்கள் விசுவாசிக்கத்தக்கதாகப் பிரசங்கித்தார்கள்.
அப்போஸ்தலர் 14;1
வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரிமட்டும் பிரசங்கித்தான்.
அப்போஸ்தலர் 20:7
முதல் நூற்றாண்டில் ஊழியம், சபை, விசுவாசம் வளர்ச்சி பெற்றதற்குகாரணம் இரவு பகல் பாராமல் வசனத்தை பிரசங்கித்தார்கள்
📜தேவவசனம் விருத்தியடைந்தது. சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று. ஆசாரியர்களில் அநேகரும் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்தார்கள்.
அப்போஸ்தலர் 6:7
📜 தேவவசனம் வளர்ந்து பெருகிற்று
அப்போஸ்தலர் 12:24
📜 இவ்வளவு பலமாய்க் கர்த்தருடைய வசனம் விருத்தியடைந்து மேற்கொண்டது.
அப்போஸ்தலர் 19:20
அன்பு ஊழியர்களே சபையாரே
இன்று நாம் என்ன செய்கிறோம்,,,,,,,,,,,
கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பராக.
ஆமென்
No comments:
Post a Comment