Monday, 3 December 2018

கள்ளத்தீர்க்கதரிசிகளை எவைகளைக்கொண்டு அடையாளம் காண்பது?

✍ 1⃣ இவர்களுடைய தீர்க்கதரிசனம் மற்றும் போதனை விக்கிரக ஆராதனையை ஊக்குவிக்கும்.
(உபா.13:1-5, வெளிப்.2:20)

சபையில் சிலுவை அடையாளம், சிலைவழிபாடு,  குத்துவிளக்கு, பலிபீடம் இயேசுவின் படம், கழுத்தில் சிலுவை டாலர் இவைகள் எதையும் கள்ளத்தீர்க்கதரிசிகள் கண்டிக்கவோ, கண்டுகொள்ளவோ மாட்டார்!

இவர்களுடைய தீர்க்கதரிசனமும் போதனையும், மனுஷருக்கு பொருளாசையாகிய விக்கிரகாராதனையைத் தூண்டிவிடும்!
(கொலோ.3:5)

செழிப்பு, ஆஸ்தி, அந்தஸ்து, பணம், பதவி இவையே இவர்களின் பிரதான தீர்க்கதரிசனம் மற்றும் போதனையாக இருக்கும்.

விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனைசெய்த பிலேயாமுடைய ஆவிக்குரிய வாரிசுகள் இவர்கள்! (வெளிப்.2:14)

2⃣ கள்ளத்தீர்க்கதரிசிகளின் தீர்க்கதரிசனமும் போதனையும் அசுத்த ஜீவியத்தை ஊக்குவிக்கும்.
(வெளிப்.2:20)

இயேசு கிறிஸ்து நாம் எதிர்காலத்தில் செய்யப்போகும் பாவங்களையும் சேர்த்து சிலுவையில் மன்னித்துவிட்டார்.

இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவன் இனி பாவம்செய்தாலும் அது பாவமாக கருதப்படாது.

எவ்வளவு பாவம் செய்கிறோமோ, அதை மன்னிக்கத்தக்கதாக அவ்வளவு கிருபையும் பெருகும். (ரோமர்6:1, யூதா1:4)

என்று இவர்கள் போதிப்பார்கள்!

வஞ்சகமாய் நடக்கிறவர்களிடத்திலிருந்து அரிதாய்த் தப்பினவர்களிடத்தில் இவர்கள் அகந்தையான வீண்வார்தைகளைப் பேசி, மாம்ச இச்சைகளினாலும் காமவிகாரங்களினாலும் அவர்களைத் தந்திரமாய்ப் பிடிப்பார்கள்.
(2 பேதுரு 2:18)

3⃣ வெளியே சாதுவான ஆடுகளாகத் தெரிகிற இவர்கள் உள்ளே கொடிய ஓநாய்களாக இருப்பார்கள்!
(மத்.7:15)

ஆவியில் எளிமை, துயரப்படுதல், சாந்தகுணம், நீதியின்மேல் பசிதாகம், இரக்கம், இருதயத்தில் சுத்தம், சமாதானம்பண்ணுதல், நீதியினிமித்தம் துன்பம் போன்ற எதையும் இவர்கள் தாங்களும் கைகைகொள்ள மாட்டார்கள். பிறருக்கும் போதிக்கமாட்டார்கள்.
(மத்.5:3-10,19, 7:17-20)

இவர்கள் ஜனங்களுக்கு தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள். அவர்களுக்கு அற்புதங்களைச்செய்வர்கள். பிசாசின் பிடியிலிருந்து விடுவிப்பார்கள்.
(மத்.7:22)

ஆனால், ஆவிக்குரிய வளர்ச்சிக்கு பிரயோஜனப்பட மாட்டார்கள்! ஏனெனில், இவர்களே ஆவிக்குரிய ஜீவியத்தில் தேறாதவர்களாயிருப்பார்கள். (மத்.7:23)

4⃣ பணம் மற்றும் பொருள் சம்பதிப்பதே இவர்களின் தீர்ககதரிசனம் மற்றும் போதனையின் நோக்கமாக இருக்கும்.

தங்கள் ஊழியத்தை ஆதரிப்பதற்காகவே ஒரு குறிப்பிட்டக் கூட்ட அடிமைகளை உருவாக்குவார்கள்.

சிங்கம் (எசேக்22::25) மற்றும் ஓநாய்ப்போல (மத்.7:15) ஆத்துமாக்களை பட்சிப்பார்கள்.

அதாவது, தங்கள் தீர்க்கதரிசனத்துக்காக, திரவியத்தையும் விலையுயர்ந்த பொருள்களையும் இவர்கள் வாங்கிக்கொள்ளுவார்கள். (எசேக்.22:25)

நல்ல காணிக்கையோடு மட்டுமே இவர்களை சந்திக்கமுடியுயும்!

5⃣   விசுவாசப்பிரமாணத்துக்கேற்றதாகத் தீர்க்கதரிசணம் சொல்லாமல், நியாயப்பிரமாணத்திற்கேற்றதாக இவர்கள் சொல்லுவார்கள்.
(ரோமர் 12:6)

யூதருக்குக் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்தில், தங்களுக்கு சாதகமானக் காரியங்களை இன்றும் கடைபிடிக்கும்படி கிறிஸ்தவர்களுக்கு இவரகள் போதிப்பார்கள். நியாயப்பிரமாணத்துக்கு சாதகமாகவே தீர்கக்கதரிசனம் உரைப்பார்கள்.

வருங்காரியங்களுக்கு நிழலாயிருந்த போஜனத்தையும் பானத்தையும் குறித்தும், பண்டிகைநாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தும் விசுவாசிகளை இவர்கள் குற்றப்படுத்துவார்கள்.
(கொலோ.2:16,17)

அதாவது, இவைகளை இன்றும் கைக்கொள்ள வேண்டும் என்றும், இல்லையேல் அது பாவம் என்றும் போதிப்பார்கள்.

விசுவாசிகளும் சத்தியத்தை அறிந்தவர்களும் ஸ்தோத்திரத்தோடே அநுபவிக்கும்படி தேவன் படைத்த போஜனபதார்த்தங்களை விலக்கவும் வேண்டுமென்று இந்தப் பொய்யர் கட்டளையிடுவார்கள்.
(1 தீமோத்.4:3)

6⃣ மாம்சத்தில் வந்த இயேசுவே தேவக்குமாரன் (தேவன்) என்கிறதை இவர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். (1யோவான்4:1,3,5, 2யோவான்1:7-10)

இயேசு கிறிஸ்து:

 தேவன் (யோவான்:1:1,2)

 மெய்யான தேவன்  (1யோவான்5:20)

 சர்வத்துக்கும் மேலான தேவன்  (ரோமர் 9:5)

 மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன்  (1தீமோத்3:16)

 மகா தேவன்  (தீத்து2:13)

 தேவனுடைய சாயல்  (2கொரி.4:4)

தேவனுடைய ரூபம்  (பிலிப்.2:6)

 தேவனுடைய தற்சுரூபம் (கொலோ.1:15)

 தேவனுடைய தன்மையின் சொரூபமானவர்
(எபிரே.1:3)

என்கிறதை இவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்
(கொலோ.1:15) என்று இருக்கிறதைத் தவறாகப் புரிந்துகொண்டு:

"கிறிஸ்து தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு சிருஷ்டி" என்றும்,

 தேவனுடைய வேலையை செய்யவந்த அவருடைய வேலயாள் (மாற்கு10:45) என்றும் போதிப்பார்கள்!

7⃣ கள்ளக் கிறிஸ்துக்களின் கைகூலிகளாக இருப்பார்கள்!

அப்பொழுது, இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள்.
                   மத்தேயு 24:23
ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.
                   மத்தேயு 24:24

என்று இவர்களை இயேசு அடையாளங்காட்டுகிறார்.

கிறிஸ்து அல்லாத கள்ளக்கிறிஸ்துக்களை, "கிறிஸ்து இங்கே இருக்கிறார். அங்கே இருக்கிறார்" என்று சொல்லி, மெய்யான கிறிஸ்துவைவிட்டு திசைத்திருப்புவார்கள்.

"இயேசு இந்த வருஷத்தில், இந்த மாதத்தில், இந்த நேரத்தில் வருவார்" என்று தீர்க்கதரிசனம் உரைத்துவிட்டு, அந்த வருஷம், அந்த மாதம், அந்த தேதியில், அந்த நேரத்தில், வேறு எவரையோ, அல்லது தங்களையோ கிறிஸ்து என்று அறிவிப்பார்கள்!

👨🏻‍⚖ கள்ளத்தீர்க்கத்தரிசிகளுக்கு எச்சரிக்கை!!

No comments:

Post a Comment

உழைப்பாளியான ரூபவதி

"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…" - பிரசங்கி 9:10   செல்வமும், களியாட்டுகளும், புகழும், பெருமைய...