🔥தனிமையில் இருக்கும் போது கூடுமானமட்டும் mobile use பண்ணாதே
🔥எதிர் பாலரை எந்த சூழ்நிலையிலும் தொட்டு பேசாதே
🔥உன் பரிசுத்த வாழ்க்கைக்கு பாதகம் ஏற்படுத்துகிற எந்த உறவும் வேண்டாம் ....
🔥Mobile, Internet, Facebook ,Whatsapp ,Twitter இவைகள்
உன் கட்டுபாட்டுக்குள் இருக்கும் வரை பயன்படுத்து பரிசுத்தமாக. இல்லையேல் நீ அதற்கு அடிமை...
🔥யாவருடனும் பழகு ஆனால் ஆவிக்குரியவர்களுடன் மட்டும் ஐக்கியம் கொள்
🔥உனக்கு முன்மாதிரி இயேசு மட்டுமே. நீ தான் மற்றவர்களுக்கு முன்மாதிரி
🔥தகுதியான வஸ்திரம் உடுத்த வேண்டும்.மற்றவர்களின் சிந்தையை மாற்ற கூடியதாக இருக்க கூடாது..
🔥உன் பெலவீனம் பிசாசுக்கு நன்கு தெரியும் நீ விட்டு வந்த பாவத்தை திரும்ப திரும்ப ஞாபகப்படுத்துவான். அல்லது செய்யும்படியான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவான் கவனம்.
🔥உன் ஜெபத்திற்கு பதில் வரும்வரை காத்திரு. தேவன் பேசாவிட்டால் அந்த காரியத்தை செய்யாதே.
🔥இந்த உலகம் நாளுக்கு நாள் update ஆகும். நீயும் ஆகலாம் பரிசுத்தத்தின்மேல் பரிசுத்தம் கிருபை மேல் கிருபை என .....
🔥உன் விருப்பங்களை தேவனிடத்தில் சொல்லலாம் தவறில்லை. ஆனால் அவரின் சித்ததிற்கு பரிபூரணமாக ஒப்புக்கொடுக்க வேண்டும்.. அது உன் விருப்பத்திற்கு எதிராக இருந்தாலும் கூட.
🔥உலகத்தில் இருந்து வேதத்தை பார்க்காதே
வேதத்தில் இருந்து உலகத்தை பார் ஜெயிக்கலாம்.
🔥உன் தாலந்துகளை யாரும் பாராட்டவில்லை என்று சோர்ந்து போகாதே ... பரலோகம் பாராட்டுகிறது🙌🏻
மொத்தத்தில் நீ உலகத்திற்கு உரியவனல்ல... பரலோகத்திற்கு உரியவன்...
No comments:
Post a Comment