சாமுவேல்அன்னா எனும் பெண்ணுக்கு குழந்தைப் பேறு கிடைக்கவில்லை. ஆலயத்தில் கடவுளின் சந்நிதியில் அழுது புலம்பினாள். எனக்கு ஒரு குழந்தையைத் தாருங்கள். அவனை உமக்கே அர்ப்பணிப்பேன். என மனம் கசிய, கண்ணீர் வழிய வேண்டினாள். கடவுள் மனமிரங்கினார். சாமுவேல் பிறந்தான்.
சாமுவேல் பால் குடி மறந்த சிறுவனாய் மாறிய காலத்தில் ஆண்டவரின் ஆலயத்தில் அவனைக் கொண்டு வந்து குரு ஏலியிடம் ஒப்படைத்தாள் தாய் அன்னா. “இனி இவன் ஆண்டவருக்கு உரியவன்” என்பதே அவளுடைய முடிவாய் இருந்தது. அவன் ஆலய பணிகளில் ஏலிக்கு உதவியாய் இருந்தான்.
ஏலிக்கு இரண்டு மகன்கள் உண்டு. அவர்கள் உதவாக்கரைகள். எதுவெல்லாம் கடவுளுக்குப் பிடிக்காதோ அவற்றையெல்லாம் தேடித் தேடிச் செய்யும் தறுதலைகள்.
“சாமுவேல் சாமுவேல்”
இரவில் தூங்கிக் கொண்டிருந்த சாமுவேலின் காதுகளில் விழுந்தது அந்தக் குரல். ஓடிப் போய் ஏலியின் முன்னால் நின்றான். “ஐயா.. அழைத்தீர்களா ?”. தூக்கம் கலைந்த ஏலி சாமுவேலைப் பார்த்துக் குழம்பினார்.
“இல்லயே.. நீ போய் படுத்துக் கொள்” என்றார்.
“சாமுவேல்.. சாமுவேல்”
மீண்டும் குரல் அழைத்தது. மீண்டும் சாமுவேல் ஏலியின் முன்னால் போய் நின்றார். கண்களைக் கசக்கிய ஏலி குழம்பினார்.
“நான் உன்னை அழைக்கவில்லை. ஒருவேளை மீண்டும் உனக்குக் குரல் கேட்டால், ஆண்டவரே பேசும் அடியான் கேட்கிறேன் என்று சொல்” என்றார்.
சாமுவேல் மீண்டும் சென்று படுத்துக் கொண்டார்.
“சாமுவேல் சாமுவேல்” மூன்றாம் முறையாய் குரல் அழைத்தது.
“ஆண்டவரே பேசும் அடியான் கேட்கிறேன்” சாமுவேல் சொன்னான்.
கடவுள் சாமுவேலிடம் பேசினார்.
ஏலியின் பிள்ளைகளைத் தான் தண்டிக்கப் போவதாகவும், தான் செய்யப் போவது என்னென்ன என்பதையும் சொன்னார்.
சாமுவேல் வளர்ந்தார். கடவுள் அவரோடு இருந்தார். அவர் ஒரு இறை செய்தியாளராக மாறிய விஷயம் நாடெங்கும் பரவியது. அவர் மக்கள் அனைவரையும் இறைவன் பால் திருப்பினார்.
சாமுவேலுக்கு வயதானது.சாமுவேலின் பிள்ளைகள் சாமுவேலைப் போல நல்லவர்களாக இருக்கவில்லை. எனவே “எங்களுக்கு ஒரு அரசன் வேண்டும்” என சாமுவேலிடம் மக்கள் கேட்டார்கள். சாமுவேலுக்கு அது பிடிக்கவில்லை. அதுவரை அவர்களிடம் அரசர் இல்லை. அவர் கடவுளிடம் கேட்டார்.
“சாமுவேலே, மக்கள் உன்னை நிராகரிக்கவில்லை. அவர்கள் என்னை நிராகரித்து விட்டார்கள். அவர்கள் அரசனாக என்னைப் பார்க்காமல் வேறு அரசனை கேட்கிறார்கள். அவர்கள் குரலுக்குச் செவி கொடு. ஆனால் விளைவுகளைப் பற்றி எச்சரி” என்றார் கடவுள்.
சாமுவேல் மக்களிடம் சொன்னான். “அரசன் எப்படி இருப்பான் தெரியுமா ? உங்கள் மகன்கள் அவனுடைய சேவகர்கள் ஆவார்கள், பெண்கள் அவர்கள் பணிப்பெண்கள் ஆவார்கள், உங்கள் விளைச்சலில் சிறந்தவை அவனுக்குப் போகும், உங்கள் சொத்தில் முதன்மையானதெல்லாம் அவனுக்குப் போகும்” சாமுவேலின் எச்சரிக்கையை மக்கள் கேட்கவில்லை.
கடவுள் சாமுவேல் மூலமாக சவுல் எனும் பென்யமின் குல மனிதரை அரசராய் நியமித்தார். அவர் தான் இஸ்ரயேல் குலத்தின் முதல் மன்னர். சாமுவேல் மக்களிடம், “இதோ இவரே உங்கள் மன்னர். எனக்கு வயதாகிவிட்டது. நான் யாருக்காவது அநீதி இழைத்திருந்தாலோ, யாரையேனும் ஏமாற்றியிருந்தாலோ, கையூட்டு பெற்றிருந்தாலோ சொல்லுங்கள். நான் திருப்பித் தந்து விடுகிறேன்” என்றார். மக்களோ, “இல்லை.. நீர் யாரையும், ஏமாற்றவில்லை, யாரையும் ஒடுக்கவில்லை, யாரையும் வஞ்சிக்கவில்லை” என்றார்கள்.
சாமுவேல் மக்களிடம் நீங்கள் ‘ஒரு அரசன்’ வேண்டும் என கேட்டதே தவறு தான். எனினும் கடவுளைப் பின்பற்றுவதிலிருந்து விலகாதீர்கள். இல்லையேல் நீங்களும் உங்கள் மன்னனும் அழிவீர்கள் என்றார்.
காலங்கள் கடந்தன. சவுல் கடவுளின் வழியை விட்டு விலகினான். எனவே கடவுளின் அருகாமையும் அவரை விட்டு விலகியது. சாமுவேல் வயதாகி இறந்தார்.
இப்போது சவுலுக்கு முன் சவால். பெலிஸ்தியர் படைதிரண்டு வருகிறார்கள். சவுலுக்கு வழிகாட்ட சாமுவேல் இல்லை. அவர் குறி சொல்லும் பெண் ஒருத்தியிடம் மாறுவேடமிட்டு சென்று சாமுவேலின் ஆவியை எழுப்பி குறிகேட்டான்.
“என்னை ஏன் தொந்தரவு செய்கிறாய் ? கடவுளின் அருள் உன்னை விட்டு விலகிவிட்டது. தாவீது மன்னனாகப் போகிறான். நீ அழியப் போகிறாய்.” என அழுத்தம் திருத்தமாய்ச் சொன்னது சாமுவேலின் ஆவி. சாமுவேல் இறந்தபிறகும் ஒரு தீர்க்கத் தரிசியாய் செயலாற்றியது வியப்பூட்டுகிறது.
சாமுவேல் எப்போதுமே கடவுளின் வார்த்தைகளுக்கே முதலிடம் கொடுத்தார். கடவுளின் வார்த்தைகளை குறைத்தோ, மறைத்தோ அவர் பேசவில்லை. கடவுளின் கட்டளையை அப்படியே செயல்படுத்தினார். எந்த ஒரு தீர்மானமாக இருந்தாலும், கடவுளிடம் முதலில் கேட்கும் நபராக சாமுவேல் இருந்தார். ஒட்டு மொத்த மக்களின் விருப்பமாக இருந்தால் கூட, கடவுளிடம் கேட்காமல் அவர் எதையும் செய்யவில்லை.
இத்தகைய நல்ல குணங்களைக் கற்றுக் கொள்ள சாமுவேலின் வாழ்க்கை நம்மைத் தூண்டட்டும்.

No comments:
Post a Comment