"கர்த்தர் நன்னமையானதைத் தருவார்; நம்முடைய தேசமும், தன் பலனைக் கொடுக்கும்" (சங். 85:12).
நீங்கள், கடந்த காலத்தில் பல நன்மைகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்திருக்க லாம். நன்மையானது நடந்துவிடாதா? என் பிரச்சனைக்கு ஒரு முடிவு உண்டாகாதா? எவ்வளவு காலம் நான் போராடிக் கொண்டேயிருப்பது என்று மனம் சோர்ந்து போனீர்களா? இன்றைக்கு கர்த்தர் உங்களுக்கு வாக்குக்கொடுத்து, ‘மகனே, மகளே, உனக்கு நன்மையானதை நான் தருவேன்" என்று சொல்லுகிறார். அவர் மனதுருக்கத்தின் தேவன். அன்புள்ள பரமப் பிதா. பிள்ளைகளுக்கு தகப்பன் இரங்குகிறதுபோல, கர்த்தர் உங்களுக்கு மனமிரங்குவார்.
அதுபோல, இந்த நாளிலே மற்றவர்களுக்கு உங்களால் என்ன நன்மை செய்ய முடியுமோ, முழு இருதயத்தோடும், பெலத்தோடும் அந்த நன்மையைச் செய்யுங்கள். நன்மை செய்யத் திராணியிருக்கும்போது, நீங்கள் அதைச் செய்யாமலிருந்தால், அது உங்களுக்கு பாவமாகிவிடும். கர்த்தர் காயீனைப் பார்த்து, "நீ நன்மைசெய்தால், மேன்மை இல்லையோ? நீ நன்மை செய்யாதிருந்தால், பாவம் வாசற்படியில்படுத்திருக்கும்" (ஆதி. 4:7) என்றார்.
இயேசு கிறிஸ்து எப்பொழுதுமே, உங்கள்மேல் மனதுருகி, நன்மை செய்கிறவர். அவர் பூமியிலே வாழ்ந்த காலம் முழுவதும், ஜனங்களுக்கு நன்மையே செய்தார். நோயுற்றோரை குணமாக்கி, பிசாசு பிடித்தவர்களை விடுதலையாக்கி, நன்மையான வார்த்தைகளை உபதேசித்தார். ஜனங்கள் பசியாயிருந்தபோது, ஐந்து அப்பத்தையும், இரண்டு மீனையும் கொண்டு ஐயாயிரம்பேரைப் போஷித்தார். அவர் உங்களுக்கு அற்புதம் செய்யமாட்டாரா? உங்களுக்கு ஒரு வழியைத் திறக்க மாட்டாரா?
வேதம் சொல்லுகிறது, "நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினா லும், வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்னமைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்" (அப். 10:38).
இன்றைக்கு, உங்களுக்கு என்ன நன்மை தேவை? "என்னுடைய வீட்டில் சமாதானமும், சந்தோஷமுமிருக்க வேண்டும். கடன் பிரச்சனை நீங்கும்படி, ஒரு நல்ல வேலையையும், நல்ல வருமானத்தையும் தர வேண்டும். கர்ப்பத்தின் கனிக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறோம். கர்த்தர் நன்மையானவைகளைத் தர வேண்டும் என்று விரும்பக்கூடும்." ஆம், நிச்சயமாகவே சத்துருவின் பிடியிலிருக்கிறவர்களுக்கு, கர்த்தர் விடுதலையைக் கொடுத்து, மனம் மகிழப்பண்ணுவார். உங்களுடைய கண்ணீர் யாவையும் துடைத்து, ஆனந்தக்களிப்பாய் மாற்றுவார். நிச்சயமாகவே, அவர் நன்மையானதைத் தருவார்.
ஒரு பாவியான ஸ்திரீக்கு, மன நிம்மதி தேவையாயிருந்தது. "என் பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும். என்னை வாதித்துக்கொண்டிருக்கிற குற்ற மனச்சாட்சி நீங்க வேண்டும்" அவள் யாரிடமும் போகாமல், கர்த்தருடைய பாதத்தில் விழுந்து, உடைந்த உள்ளத்தோடு, கண்ணீர் விட்டு அழுதாள். இயேசு அவளை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லை. "மகளே, உன் பாவத்தை உனக்கு மன்னித்தேன். நீ சமாதானத்தோடே போ," என்று ஆறுதல்படுத்தி அனுப்பினார்.
இன்றைக்கும், உங்களுடைய மனச் சுமைகளை, நீங்களே சுமந்துகொண்டிராமல், கர்த்தருடைய பாதத்தில் இறக்கி வையுங்கள் (லூக். 7:37,38). அவர் உங்களுக்கு நன்மையானதைத் தருவார்.
நினைவிற்கு :- "கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார். நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்" (சங். 55:22).

No comments:
Post a Comment